ராகு கேது தோஷம்
ஸ்திரீ புருஷ ஜாதகங்களில் 5,7,மிடங்களில் ராகு கேது இருந்தால் புத்திர தோஷமும் களத்திர தோஷமும் ஏற்படும். இவ்வகை ஜாதகங்களுக்கு 5,7மிடங்களில் ராகு கேது உள்ள ஜாதகங்கள் சேர்க்கப்பட வேண்டும் இவ்வகையில் அமையாவிட்டால் 7மிடம் சனி அல்லது செவ்வாய் பார்வை பெற வேண்டும்.
ஸ்திரீ புருஷ ஜாதகங்களில் 2,8மிடங்களில் ராகு கேது இருந்தால் களத்திர தோஷமும் மாங்கல்ய தோஷமும் ஏற்படும். இவ்வகை ஜாதகங்களுக்கு 2,8மிடம் ராகு கேது தனித்து உள்ள ஜாதகங்கள் சேர்க்கக் கூடாது சேர்த்தால் புருஷனுக்குக் அற்ப ஆயுள் ஏற்படும். ராகு கேதுக்கள் சுபர் சம்பந்தம் பெற்றால் இவ்வகைத் தோஷமில்லை.
மேஷம் ,கடகம் சிம்மம் ,விருச்சிகம் ,தனுசு ,மீனம் ஆகிய இலக்கினத்தை அடைந்தவர்க்கு ராகு கேதுக்கள் குரு சம்பந்தம் பெற்றால் ராகு கேதுவினால் ஏற்படும் எவ்வகைத் தோஷமுமில்லை.
அதுபோல் ரிஷபம் ,மிதுனம் ,கன்னி ,துலாம் ,மகரம் ,கும்பம் ,இலக்கினத்தை அடைந்தவர்களுக்கு ராகு கேதுக்கள் சுக்கிர சம்பந்தம் பெற்றால் ராகு கேதுவினால் ஏற்படும் எவ்வகைத் தோஷமுமில்லை.
No comments:
Post a Comment