பாதகாதிபதியின் எச்சரிக்கை
ஜெனன ஜாதகத்தில் ராசிக் சக்கரத்தில் உள்ள கிரக அமைப்புகளே, மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. குறிப்பாக கேந்திர திரிகோணாதிபதிகள் பல்வேறு யோகங்களை உண்டாக்குகின்றனர். ஜென்ம லக்கினத்திற்கு மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 6,8,12க்கு அதிபதிகள் கெடுதிகளை செய்கின்றனர். இதைத் தவிர சில ஸ்தானாதிபதிகள் கெடுதிகளை ஏற்படுத்துகின்றனர். அவை தன் பாதகாதிபதியாகும்.
ஜென்ம லக்னத்திற்கு குறிப்பிட்ட ஸ்தானம் பாதக ஸ்தானமாகும். ஜென்ம லக்னம் மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற சரராசிகளாக இருந்தால் லக்னத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்னமான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பமாக இருந்தால் 9ம் வீடும், உப லக்னமான மிதுனம்,கன்னி,தனுசு,மீனமாக இருந்தால் 7ம் வீடும் பாதக ஸ்தானமாக அமைகிறது.
மேற் கூறிய பாதகாதிபதிகள் பொதுவாக கெடுதலை செய்கின்றன என்றாலும் 6,8,12ல் மறைந்தாலும் திரிகோண ஸ்தானமான 1,5,9ல் அமையப் பெற்றாலும் கெடுதிகளை செய்வது இல்லை. குறிப்பாக பாதகாதிபதிகள் கெடு பலன்களை தருகிறார்கள். பாதகாதிபதி மற்றொரு ஸ்தானத்தில் அமையப் பெற்றால் அந்த ராசியின் காரகத்துவம் மற்றும் ஸ்தான பலனை குறைக்கிறது. பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களும் கெடு பலன்களைத் தருகின்றன. பாதகாதிபதி மற்றொரு ஸ்தானத்தை பார்த்தால் அந்த ஸ்தான பலனும் பாதிக்கப்படுகிறது. பாதகாதிபதியின் திசா புத்தி காலங்களில் பாதக பலன் உண்டாகிறது என்பதில் எவ்விதத்திலும் ஐயம் இல்லை. பாதகாதிபதி சுப ஆதிபத்தியம் பெறுகின்ற சமயத்தில் அக்கிரகம் அமைப்பினை பொருத்து இரு பாவ பலனையும் கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கஷ்ட நஷ்டங்களை தருகின்றனர். பாதகாதிபதி பரிவர்தனை பெற்றாலும் பெரிய அளவில் நற்பலன் தருவதில்லை.
No comments:
Post a Comment