Jathaga Yogam

ஜாதக யோகங்கள் :

                                                                 ஜாதகத்தில் ஒரு கிரஹத்திற்கும் மற்றொரு  கிரஹத்திற்கும்  உள்ள சம்பந்தம்தான் "யோகம்"என்பார்கள் .இத்தகைய யோகங்கள்   சுமார் 300க்கு மேற்பட்டவை .அவைகளிலே முக்கியமான சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளோம் .


சந்திர யோகங்கள் :

                                          1.துருதுரா யோகம் :
                                                                                       சந்திரனுக்கு  முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன்,ராகு கேதுவைத் தவிர இதர கிரகங்கள் இருப்பின் இந்த யோகம் ஏற்படும் .இதனுடைய பலன்கள் சம்பத்து,வாகனங்கள் ,நல்ல குணங்கள் உண்டாகும் .
                                        
                                         2.அநபா யோகம் :
                                                                                 சந்திரனுக்கு 12-வது ராசியில் ராகு கேதுக்களைத் தவிர பிற கிரகங்கள் இருப்பின் இந்த யோகம் ஏற்படும்.இதனுடைய பலன்கள் நல்ல ஆரோக்கியமும் பேரும் புகழும் உண்டாகும் .
       
                                          3.சுநபா யோகம் :    
                                                                               சந்திரனுக்கு 2-ல் சூரியன் ராகு கேதுக்களைத் தவிர பிற கிரகங்கள் இருப்பின் இந்த யோகம் ஏற்படும்.இதனுடைய பலன்கள் உழைத்து சம்பாதித்தல் ,நல்ல அறிவு ,ராஜா அந்தஸ்து உண்டாகும் .
                                          4.குபேர யோகம் :
                                        சனி விரலைவிட சூரிய விரலாம் மோதிர விரல். நீண்டு இருந்தால் குபேரனது அருள் கிடைக்கும் என்று ரேகை சாஸ்திரம் உண்டு. ஜாதக அலங்காரம் என்ற பழங்கால ஜோதிட நூலில் 333-ம் பாடல் குபேர யோகம் ஒரு மனிதனுக்கு எப்படி வரும் என்று குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.
பிள்ளை அனுசம் அகபதியின்
பின்பாகம் அவிட்டந் தனில்சேயும்
துள்ளும் சென்மம் ஒரு பத்தில்
சூழ்ந்தே பரிதி உறவதனைத்
தெள்ளு மதியம் குரு நோக்கில்
செறி மூன்றைந்தின் கிரக மிலாது
தள்ளி இருக்கில் குபேரனைப் போல்
தனத்துக் கதிபனெனச் சொல்வாய்.
அஸ்வினி அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரம் ஒன்றின் 4-ம் பாதத்தில் செவ்வாய் நிற்க வேண்டும். லக்னம் அல்லது 10-ல் சூரியன் நிற்க வேண்டும். பிறகு செவ்வாயையும் சூரியனையும் சுபரான குரு சந்திரன் பார்க்க வேண்டும்.
தனலாப ஸ்தானத்திற்கு  மாரகத்தானங்களை 3, 5-ம் இடங்களில் கிரகங்கள் நிற்கக்கூடாது. இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் பல கோடிகளின் அதிபர்களாவர். கடக லக்னத்திற்கு அனுஷம் 4ம் பாதத்தில் செவ்வாய் நிற்க, 10ல் சூரியன் உச்சமாகி சந்திரன் 4-ல் நின்று சூரியனைப் பார்க்க 9-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க குபேர யோகம்.
சிம்மத்திற்கு அஸ்வினி 4-ல் செவ்வாய் நின்று லக்னத்தில் சூரியன் நிற்க குரு 5-ல் ஆட்சியாகி இருவரையும் பார்க்க சந்திரன் 7-ல் நின்று சூரியனைப் பார்க்க குபேர யோகம். மேஷ லக்னத்திற்கு அவிட்டம் 4ல் செவ்வாய் நிற்க துலாச்சந்திரன் சூரியனை நோக்க சிம்ம குரு, சூரியன் செவ்வாயை பார்க்க பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்.
விருச்சிக லக்னத்திற்கு அனுஷம் 4ல் செவ்வாய் நின்றிட 10ல் சூரியன் ஆட்சியாகி 4ல் சந்திரன் நின்று சூரியனைப் பார்க்க 5ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க வாழ்வில் உயர்ந்த குபேர யோகம். மேஷ லக்னத்திற்கு அவிட்டம் 4-ல் செவ்வாய் நிற்க துலாச்சந்திரன் சூரியனை நோக்க சிம்ம குரு, சூரியன், செவ்வாயை பார்க்க பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்.
விருச்சிக லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்றிட 10-ல் சூரியன் ஆட்சியாகி 4-ல் சந்திரன் நின்று சூரியனைப் பார்க்க 5-ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க வாழ்வில் உயர்ந்த குபேர யோகம். மீன லக்னத்திற்கு அஸ்வதி 4-ல் செவ்வாய் நிற்க 10-ல் சூரியன் நின்று மிதுன சந்திரன் சூரியனைப் பார்க்க ஜீவன குரு செவ்வாயைப் பார்க்க குபேர யோகம்.
கும்ப லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்று உச்ச சந்திரனால் பார்வையாகி, லக்ன சூரியன் சிம்ம குருவால் பார்வை பெற மிகப்பெரிய குபேர யோகம் வந்து கோடிகளில் புரள்வார்கள். குபேர யோகம் பெற முடியாத ஒரு சில கிரகங்களே மாற்ற மடைந்திருக்கும் ஜாதகர்கள் அதற்கான கிரக யோக வழிபாட்டை கண்டுபிடித்து செய்வதால் நிறைவான யோகம் பெற்று வாழலாம்.

                                                5.கோடீஸ்வர யோகம் :
                                                                                                   ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
 ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
 லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.
                                                     
                                               6.பானு யோகம் :
                                                                                 1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

                                             7.அமலா யோகம் :
                                                                                      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் வீட்டில் சுபகிரகம் அமைந்திருந்தால் அந்த அமைப்பிற்க்கு அமலா யோகம் எனப்படும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தையும், பெரும் புகழையும், எல்லா சுகங்களும் பெற்றவராவார்.
      லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் இடத்தில் சுபகிரகம் அமைந்தால் அமலா யோகம் ஏற்படும். ஆனால் ஏதோ ஒரு கிரகம் (பாபகிரகமானலும்) 10ல் அமைந்த கிரகத்தின் தசா புத்தியில் நல்ல செல்வ வளத்தைத் தரும். பாபகிரகமானால் செல்வம் வரும் வழி வேண்டுமானால் மாறுபடும் நல்வழியில் வராது.
                                                      
                                              8.அதி யோகம் :
                                                                                ஒரு ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற‌ சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7 மற்றும் 8ல் அமைந்தால் அந்த அமைப்பிற்கு அதியோகம் என்று பெயர்.
      அதியோக அமைப்பு பெற்றவர்கள் மிகவும் அமைதியான அன்பானவர்களாகவும், வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றவர்களாகவும் இருப்பர். மேலும் எதிரிகள் இல்லாத நிலையும், ஆரோக்கியமான நல்ல நீண்ட‌ ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு ஊருக்கோ, கிரம்மத்துக்கோ நகரத்துக்கோ தலைவராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் அமைச்சராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் மூன்று கிரகங்களோ அல்லது அதற்க்கு மேலோ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு நாட்டுகே தலைவராக இருப்பர்.

                                           9.பார்வதி யோகம்:
                                                                                     ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது பார்வதியோகம் பற்றி பார்ப்போம்.
      ஜீவனாதிபதி 10க்குடையவன், அம்சக்கட்டத்தில் நிற்க்கும் வீட்டிற்க்குரியவன் ராசிக்க்ட்டத்தில் 10ம் இடத்தில் வலுவுடன் நிற்பது பார்வதியோகமாகும்
      உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 10க்குடையவன் அம்சக்கட்டத்தில் கடகத்தில் நிற்ப்பதாகக்கருதுவோம். கடக‌த்திற்க்குரியவர் சந்திரன் அவர் ராசிக்கட்டத்தில் 10ல் நின்றால் அது பார்வதி யோகமாகும்.
      அவ்வாறு அந்த பத்தமிடம் அந்த கிரகத்திற்க்கு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அது பிரபல பார்வதியோகமாகும்.
      ஜாதகர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவோ, அல்லது மிகப்பெரிய தொழிலதிபர்களாகவோ பிரகாசிக்க முடியும்.
      அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர் லட்சங்களைத்தான் குவிக்க முடியும், கோடிகள் என்பது எட்டாக்கனி என்ற நிலை மாறி வருகிறது. அதிகாரிகள் கோடிகளைக் குவிப்பது சாதாரணமாகி வருகிறது.
      எனவே பார்வதி யோகம் கோடிகளைக் குவிக்கும் சாதனையாளராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

                                          10.குரு சண்டாள யோகம்:
                                                                                                  ஒருவருடைய ஜாதகத்தில் குருவுடன் ராகு சேர்ந்து நின்றால் அது குருசண்டாள யோகமாகும். இந்த யோகத்தில் குருவோ ராகுவோ ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் அபரிதாமாக இருக்கும்.
      இதில் ராகுவோடு சேர்ந்த குரு தன் தசா, புத்தி, அந்தரங்களில் கொடுக்கும் பலன்களை விட, குருவோடு சேர்ந்த ராகு மிக நல்ல பலன்களை (பூவுடன் சேர்ந்த நாறும் மனப்பது போல‌) கொடுப்பார்.
      இதில் குருவோ, ராகுவோ பகை, நீசம் பெற்று கெட்டுவிட்டால் யோகம் கெட்டுவிடும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியாக இருப்பார் அல்லது கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஏதோ பெயரளவிற்க்கு பக்தி செய்வார்.

                                          11.பட்டதாரி யோகம்:
                                                                                       ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் புதன் இணைப்பு புதாஅதித்ய யோகம் எனப்படுகிறது. இந்த அமைப்பு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குகிறது. அதாவது குறைந்தபட்சம் அவர் பட்டதாரியாக இருப்பார், அத்துடன் இந்த அமைப்பிற்க்கு குருவின் சேர்க்கை, பார்வை மூலமாக சிறப்பான‌ சம்பந்தம் ஏற்பட்டால் அவர் பட்ட‌மேல்ப்படிப்பு, முனைவர் பட்டம், போன்றவைகளை பெறுவார்.

                                          12.அஷ்டலட்சுமி யோகம் :
                                                                                                  ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6ல் ராகுவும், குரு கேந்திரம்(1, 4, 7, 10ல்) பெற்று அமைந்தால் அந்த அமைப்பு அஷ்டலட்சுமி யோகம் எனப்படுகிறது.
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மிக எளிதாக நல்ல நிலையை அடைந்துவிடுவர். மற்ற கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தால் இவர்கள் கோடீஸ்வரர்களாக, சாதனையாளராக‌ பிரகாசிக்க‌ முடியும்.

                                         13.குரு சந்திர யோகம் :
                                                                                         குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள், சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.
      சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.
      பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.    

                                        14.பர்வத யோகம் :
                                                                                ஒரு ஜாதகத்தில் பர்வதயோகத்திற்க்கான அமைப்புகள் பின் வருமாறு....
 சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் எந்த கிரகமும் அமராமல் இருக்க வேண்டும்.
                              அல்லது
 சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது அமரவேண்டும்.
                              அல்லது
 லக்கினாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று அமைய வேண்டும்.
      இந்த அமைப்பு பெற்றவர்கள் நல்ல வசதியான வாழ்க்கையும், எதிரிகள் இல்லாத்வர்களாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்காகவாவது பிரபலமானவர்களாகவும் இருப்பர். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து இந்த பர்வத யோகம் இன்னும் பலப்படும்.

                                     15.மஹா சக்தி யோகம்:
                                                                                       ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முத‌ல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்.

                                                 16.வாகன யோகம்:
                                                                                         நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.

                                                  17.விபரீத ராஜயோகம் :
                                                                                                     துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லக்கூடிய 3,6,8,12ம் அதிபதிகள், அந்த 3,6,8,12ம் இடங்களில்(துர்ஸ்தானாதிபதிகள் துர்ஸ்தானங்களில்) இடம் மாறி அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகமாகும்.
      அதாவது உதாரணத்திற்க்கு 3ம் அதிபதி 8ல், 6ம் அதிஅப்தி 12ல், 12ம் அதிபதி 3ல், 8ம் அதிபதி 3ல் இவ்வாறு அமர்வது விபரீதராஜயோகமாகும். இதில் அனைத்து அதிபதிகளும் இடம் மாறி இருக்க வேண்டும் என்பதல்லாமல் இருவரோ மூவரோ இடம் மாறியிருந்தால் கூட போதும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட மொழிக்கேற்ப்ப ராஜயோக பலன்களைத்தருவர்.
      இதன் பலன் என்னெவெனில் எதிர்பாராமல் வரும் நல்ல பலன்கள், உழைப்பிற்க்கு அதிகமான ஊதியம், திடீர் வரவுகள், திடீர் சொத்துகள், திடீர் சம்பத்து என கூறிக்கொண்டே போகலாம். 
     

                                                18.புஷ்கலா யோகம்: 


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரனுடன் இணைந்து கேந்திர திரிகோணத்திலோ அல்லது சந்திரனுடைய அதிநட்பு வீட்டிலோ இருந்து, அந்த சந்திரன் அமர்ந்த, ராசியாதிபதி லக்கினத்தில் அமர்ந்திருக்கும் இருக்கும் கிரகத்தை பார்ப்பது புஷ்கலா யோகம் எனப்படும்.
      புஷ்கலா யோகம் அமையப் பெற்றவர்கள், சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களாகவும், செல்வம் செல்வக்க்கோடு கூடிய அந்தஸ்த்து உடையவர்களாகவும், நாட்டை ஆள்பவர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.

                                            19. விமலா யோகம்:

 ஒரு ஜாதகத்தில் 12ம் இடத்ததிபதி 12ல் ஆட்சியாக அமைந்தால், அந்த அமைப்பிற்க்கு விமலா யோகம் எனப்படும்.
      விமலா யோகம் அமையப்பெற்ற ஜாதகர், மிக நல்லவராகவும், சிக்கனமானவராகவும், அமைதியானவராகவும், ஆனந்தமானவராகவும், சுதந்திரமானவராகவும் இருப்பார். விமலா என்றால் சுத்தம் என்று பொருள்.

                                        20.கோ-யோகம்:

        ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.
      இந்த அமைப்பை பெற்ற‌வர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார்.            

                                      21.மகுட யோகம்:

 ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட யோகம் என்று பெயர்
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த‌ தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.


contact via email:  jothidaexpress@gmail.com

Please donate for this website ,if you satisfied with this astrology information given in this website and be helpful to give more information in this site


NAME                                   :      Karthikeyan k.s

BANK  NAME                       :     State bank of india 

SAVINGS ACCOUNT NO     :     32418018236

BRANCH NAME                   :     Gobichettipalayam

MICR CODE NO                   :     638002014

IFSC CODE                           :     SBIN0000839

No comments:

Blogger Gadgets