Saturday, April 19, 2014



  அன்னையின் ஆயுள்


சமஸ்கிருதத்தில் “ஜனனி ஜன்மபூமி ஸ்ச ஸவர்க்கதபி காரியஸி ” என்ற சொல்லுக்கு, பொருள் சொர்க்கத்துக்கும் மேலானவள் தாய் என்பதேயாம். “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை ”, ”தாயிற் சிறந்த கோயிலுமில்லை“, “ மாதா, பிதா, குரு, தெய்வம் ” என எதிலும் நாம் நம் தாயின் புகழையே பாடுகிறோம். பூமியிற் புதிதாகப் பிறந்த மழலை தாயின் அரவணைப்பிலேயே வாழ்கிறது. “ “ஏழேழு ஜன்மங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும் தாய்க்கிங்கு நாம்பட்ட கடன் தீருமா ? “ வாழ்க்கையில் தாய்க்கு ஈடாக எவருளர் ?


ஜோதிடத்தின் விஞ்ஞானத்தின் மூலமாக, ஒரு குழந்தையின் ஜாதகத்தைக் கொண்டு அன்னையின் ஆயுளைக் காணும் முறை வேறு எந்த விஞ்ஞானத்திலும் இல்லாத ஒன்று என்றே சொல்ல வேண்டும். இளமையிலேயே ஈன்ற தாயையிழந்து வாடும் பிள்ளைகள் துரதிருஷ்டசாலிகளன்றோ. பூர்வ ஜென்மத்தில் அக் குழந்தைகள் செய்த பாப வினைகளின் கர்ம பலனின் தொடர்ச்சி தானே இது.


கீழ் கண்ட காரணிகள் இளமையிலேயே இறக்கும் தாயின் மரண நிலையையறிய, குழந்தையின் ஜாதகத்தில் தெளிவாக ஆராய வேண்டிய முக்கிய காரணிகளாகும்.


அவையாவன --- ராசி, நவாம்சம், மாத்ரு காரக கிரகம், அஷ்டவர்க்கம், நட்சத்திரம், சந்திரா லக்னம் மற்றும் விம்சோத்திரி தசா காலம் ஆகியவையாகும்.

1. தாயின் இழப்பை அறிய முதலில் பார்க்க வேண்டிய காரணியானது நடப்பு தசா நாதனுடனான தாய் ஸ்தானத்துடனான 4 ம் வீடு அல்லது மாத்ருகாரகனுடனான தொடர்பு ஆகும்.

2. சந்திரா லக்னத்திலிருந்து 2 அல்லது 7 அல்லது 12 ம் வீடுகளின் அதிபதிகளின் தசா காலங்களில் / புத்தி காலங்களில் இந்த துக்க கரமான நிகழ்வுகள் ஏற்படலாம்.

3. சந்திரா லக்னத்திலிருந்து மேற் சொன்ன வீடுகளிலுள்ள கிரகங்களின் தசாக் காலங்களிலும் தாயின் மரணம் நிகழலாம்.

4. நான்காம் வீட்டுக்கு 2 ம் இடம் அல்லது 7 மிடம் அல்லது 12 ம் இடத்திலுள்ள கிரகங்களின் தசா / புத்தி காலங்களில் இவ் விழப்பு ஏற்படலாம்.

5. மேற் சொன்னபடி 4 ம் வீட்டுக்கு 2 அல்லது 7 அல்லது 12 ம் வீட்டு அதிபதிகளின் தசா / புத்தி காலங்களில் தாயின் மரணம் ஏற்படலாம்.

6. 4 ம் அதிபதியின் தசா / புத்தி காலங்களிலும் மாதாவின் மரணம் நிகழலாம்.

7. சந்திரா லக்னத்திலிருந்து 4 ம் வீட்டு அதிபதியின் தசா / புத்தி காலங்களிலும்.

8. சந்திரன் அல்லது 4 ம் அதிபதி நிற்கும் நட்சத்திராதிபதியின் தசா/ புத்தி காலங்களிலும் தாயானவள் இந்த தரணிவிட்டுச் செல்லலாம்.

No comments:

Blogger Gadgets