Tuesday, April 29, 2014


செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் :

1. மேஷம் ,கடகம் ,சிம்மம்,விருச்சுகம் ,தனுசு ,மகரம்,மீனம் இந்த ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் இவற்றில் எங்கு இருந்தாலும் ,செவ்வாய் தோஷம் இல்லை மற்றும் இந்த ஏழு இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
2. மேஷம் ,விருச்சுகம் ,இரண்டாம் இடமாகி அங்கு செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
3. ரிஷபம் ,துலாம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 4 ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .
4. கன்னி,மகரம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 8 ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .
5. மிதுனம் ,கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 12 ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .
6. செவ்வாயைச் சனி பார்த்தாலும் ,குரு பார்த்தாலும் தோஷம்
இல்லை .
7. பெண்கள் ஜாதகத்தில் 7 ம் இடத்திலோ , 8 ம் இடத்திலோ செவ்வாய் ,மற்றும் சூரியன் ,சனி இவர்களில் ஒன்றோ ,பலவோ ,நின்றால் கூட 9 ம் இடத்தில் ஒரு சுபகிரகம் நின்றால் அந்த ஜாதகிக்கு கணவரது ஆதரவும் ,புத்திர பாத்திர யோகமும் ,சுக ஜீவனமும் ,சந்தோஷ் வாழ்வும் உண்டு என்றும் ,2 ம் இடத்தில் சுபகிரகம் இருக்குமானால் விதவா தோஷம் இல்லை என்றும் திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது .
8. பலித மார்த்தாண்டம் என்ற நூலில் சர ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை என்று சொல்லப்படுகிறது.மேலும் புதன் வீட்டில் செவ்வாய் தோஷம் இல்லையென்று உள்ளது .
இவ்வாறெல்லாம் பார்த்தால் ,5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கே செவ்வாய் தோஷம்.
லக்னத்திலிருந்து செவ்வாய் 2-4-7-8-12 ல் இருப்பது செவ்வாய் தோஷம், அதுவே மகரம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசியில் இருந்து அது 7-மிடமாக இருப்பின் தவறில்லை செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி அஸ்தமனம், நீச்சம் பெற்று செவ்வாய்க்கு 6-8-12ல் இருந்து வீட்டால் செவ்வாய் தோஷம் உண்டு செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி லக்கனத்திற்கோ, ராசிக்கோ 5-9ல் இருப்பின் தோஷம் கிடையாது. செவ்வாய் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் ஆகிய லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், மிருகசீசம், சித்திரை, அவிட்டம், புனர்ப+சம், விசாகம், ப+ரட்டாதி, உத்திரம், உத்திராடம், கார்த்திகை, சுவாதி, திருவாதிரை, சதயம், ப+சம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களைப் பெற்று எங்கு இருப்பினும் அதிலும் 2-4-7-8-12ல் இருந்து எந்தக் கிரகத்தால் பார்க்கப்பட்டு இருப்பினும் பாதகமான பலன்களைத் தருகிறது.
செவ்வாய் தோஷம் பரிவர்த்தனை இருந்தாலும் தோஷமில்லை,சூரியனுடன் சேர்ந்த செவ்வாய்க்கும் தோஷமில்லை. செவ்வாய், ராகு,கேது தொடர்பு பெற்றும் தன்னுடைய பகை கிரகத்துடன் இருக்கும் போது மட்டுமே பாதிப்பு தருகிறது. 

No comments:

Blogger Gadgets