Monday, April 14, 2014

குற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்


சில மனிதர்களின் பேராசையும், வக்ர புத்தியும், பொறாமைக் குணமும் சக மனிதர்களையே கொல்லும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. தினமும் செய்தித் தாள்களில் இத்தகைய நிகழ்வுகளை அதிக எண்ணிக்கையில் செய்தியாகப் படிக்கிறோம். கடத்தல், கொலை, கொள்ளை இல்லாத செய்தியாக செய்தித்தாள்கள் ஒரு நாள் கூட வந்ததில்லை.

இத்தகைய கொடூர செயல்களைச் செய்பவர்களின் ஜாதகங்களையும், கிரக நிலைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் வாழ்க்கை இப்படி மாறிப்போனதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரும்.

நவகிரகங்களில் செவ்வாயானவர் மிகக் கொடிய பாவ கிரகமாக விளங்குகிறார. செவ்வாய் ஒருவர்  ஜாதகத்தில் வலுப்பெற்று, சுபகிரக சேர்க்கையுடன் அமைந்திருந்தால் சமுதாயத்தில் உயர் பதவிகளை அடையக்கூடிய யோகத்தையும், நல்ல நிர்வாகத் திறமைகளையும் பெற்றிருப்பார்.

அதுவே செவ்வாயானவர் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று அமைந்துவிட்டால், அந்த ஜாதகரின் மன நிலையும் திறமையும் அதன் தசாபுக்தி காலங்களில் தீய செயல்களுக்கு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை உண்டாக்குகிறது.

ஒருவரது ஜென்ம லக்னத்தைக் கொண்டு அவரது குணநலன்களைப் பற்றி அரிந்து கொள்ள முடியும். 5ம் வீடு உணர்ச்சியைக் குறிக்கும். 9ம் வீடு தான தர்ம செயல்களைக் குறிக்கும். 6 மற்றும் 12 ம் வீடுகள் எதிர்ப்புகளைக் குறிக்கும்

நவகிரகங்களில் பாவிகள் என குறிக்கப்படும் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற  கிரகங்கள் 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு முரட்டு சுபாவம் அதிகம் இருக்கும். செவ்வாய், சனி, ராகு இணைந்து மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால், அந்த ஜாதகர் கொலை செய்யவும் தயங்காதவராக, கொடூர மனம் படைத்தவராகவும் இருப்பார்.

செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்திலும், சனியின் வீடான மகரம் மற்றும் கும்பத்திலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் இருந்தால் அவர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்வதில் வல்லவராக இருப்பார்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் சனி, செவ்வாய் அமையப் பெற்றிருந்தாலும் அல்லது தனித்தனியே அமைந்து சனிக்கு கேந்திரத்தில் செவ்வாயோ அல்லது கேந்திரத்தில் சனியோ அமையப்பெற்றாலும், குற்றச் செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக அந்த ஜாதகர் இருப்பார்.

No comments:

Blogger Gadgets