Thursday, April 17, 2014

 ஜோதிட ரீதியாக கல்வியில் சாதனை செய்பவர் யார்


சென்ற விட மெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு மட்டுமே. எந்த செல்வமும் எடுக்க எடுக்க குறையும். கல்வியோ எடுக்க எடுக்க அதிகமாகும். அந்தக் கல்வி ஜோதிட ரீதியாக யார் யாருக்கு எவ்விதம் அமையும்& ஒர் அலசல்

     இன்றைய இயந்திர உலகில் செல்வம் செல்வாக்கு எவ்வளவு ஏற்பட்டாலும் அதனைக் காப்பாற்றும் திறன் என்பது மிகவும் திறமையானது ஆகும். எவ்வளவு செல்வம் பெற்றாலும் கல்வி செல்வம் என்பது செல்வத்தில் சிறந்த செல்வம் ஆகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்கு படித்து பட்டம் பெறுவதை அதிகம் விரும்புவார்கள். ஜோதிட ரீதியாக உயர் கல்வி செல்லும் யோகம் யாருக்கு என பார்ப்போம்.

     ஜென்ம லக்கினத்திற்கு 4ம் வீடு நன்கு அமைந்து இருந்தால் அது இளமை கல்வியில் எந்த வித தடைமின்றி மேன்மை அடைய உதவுகிறது. ஜென்ம லக்கினத்திற்கு 5ம் வீடு பலம் பெற்று இருந்தால் உயர் கல்வி மேற்கல்வியில் மேன்மையடைய வழி உண்டாகிறது. ஜென்ம லக்கினத்திற்கு 4,5க்கு அதிபதிகள் நன்கு அமைந்து இருந்தால் கல்வியில் மேன்மை அடைய முடியும் என்றாலும் ஜென்ம லக்கினம் வலு இழக்காமல் இருந்தாலும் குடும்ப ஸ்தானம் எனப்படும் 2ம் வீடு வலு இழக்காமல்  இருந்தாலும் தான் பெற்றோர்களின் உதவியும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் உண்டாகி அதன் மூலம் கல்வியில் ஈடுபாடும் கல்வியில் மேன்மையும் அடைய முடியும்.
     
ஆக ஜென்ம லக்னத்திற்கு 2,4,5க்கு அதிபதிகளும் அந்த வீடுகளில் உள்ள கிரகமும் நன்மை பெருகும் ஜாதகர்கள் கல்வியில்  மேன்மை உயர் கல்வி, பட்ட கல்வி என சென்று சாதனை பல செய்ய நேரிடுகிறது-. பொன்னவன் எனப் போற்றப்படும் குரு பகவான் ஜென்ம லக்கினத்திற்கு 4 அல்லது 5 ஆம் வீட்டை பார்வை செய்தால் கல்வியில் கண்டிப்பாக மேன்மை உண்டாகிறது.

     வித்தியாகாரகன் எனவும் கல்வி காரகன் எனவும் போற்றப்படும் புதன் பகவான் வலுப் பெற்று இருந்தால் ஜாதகர் கல்வியில் மேன்மை அடைகின்றனர். ஜென்ம லக்கினத்திற்கு 4,5ம் வீட்டிற்கு அதிபதியுடன் புதன் தொடர்பு இருப்பது நல்ல மேன்மை உண்டாகிறது. புதன் சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறை சந்திரன் சேர்க்கை ஏற்றால் சுப கிரக தன்மையும். சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றால் பாப கிரக தன்மையுடன் பலனை தருகிறார்.

     புதன் சுப கிரக வீடுகளில் அமையப் பெற்று சுப கிரகப் பார்வை பெற்றால் கல்வியில் தடையின்றி மேன்மை உண்டாகிறது. புதன் 2,4,5இல் அமைந்து சுப கிரக சேர்க்கையுடன் பாவிகள் பார்வையின்றி இருந்தால் கல்வியில் மேன்மை உண்டாகிறது. புதன், மிதுனம், கன்னி ராசியில் அதிக பலம் பெறுகிறார். இது கல்வி ரீதியாக மேன்மையை ஏற்படுத்தும். புதன் மீனத்தில் நீச்சம் பெறுகிறார். உடன் சுக்கிரன் அமைந்து நீச பங்கம் உண்டாகி இருந்தால் கல்வியில் சிறு தடைக்குப் பிறகு மேன்மை அடையும்.

    புதன் பாவிகள் எனப்படும் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது சேர்க்கை மற்றும் பார்வை பெறாமல் இருப்பது மிகவும் உத்தமம். புதன் ஜென்ம லக்கினத்திற்கு எங்கு உள்ளாரோ புதன் நின்ற வீட்டின் அதிபதி புதனுக்கு கேந்திரத்தில் அமையப் பெற்றால் புதன் வலுப் பெறுவது மட்டும் இல்லாமல் பட்டக் கல்வி, உயர்கல்வி ஏற்படுத்துகிறது. கல்வி காரகன் எனப்படும். புதனை பாவிகள் இரு புறமும் சூழாமல் இருப்பது கல்வி ரீதியாக மேன்மை உண்டாகும் அமைப்பு ஆகும்.

     புதன் சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை அல்லது சுப கிரகத்தின் வீட்டில் இருந்தால் கல்வியில் நல்ல நிலை அடையும் சூழ்நிலை ஏற்படுத்தினாலும் வலுப் பெற்ற புதனை சனி, செவ்வாய், பார்வை செய்தால் அக்கல்வியை உதறி விட்டு கற்ற கல்விக்கு சம்மந்தம் இல்லாத தொழில் செய்யும் சூழ்நிலை உண்டாகும். 

     வலுப் பெற்ற புதன் பாப கிரக வீட்டில் அமையப் பெற்ற பாவிகளால் பார்க்கப்பட்டால் கற்ற கல்விக்கு சம்பந்தம் இல்லாத தொழில் செய்யும் சூழ்நிலை வாழ்நாளில் அக்கல்வியை உபயோகிக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது.

      புதன் வீடான மிதுனம், கன்னியில் பாவிகள் எனப்படும் சனி ராகு, கேது போன்ற பாவிகள் வலுப் பெற்றால் புதன் வலுவுடன் இருந்தாலும் கல்வியில் தடை இடையூறு போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. 

     கிரகங்கள் வலுப் பெற்று இருந்தாலும் புதன் பாவிகளால் பாதிக்கப் படாமல் இருப்பதன் மூலம் தடையின்றி கல்வி கற்கும் சூழ்நிலை உயர்கல்வி பட்டக் கல்வினை செல்லும் சூழ்நிலை உண்டாகிறது.

No comments:

Blogger Gadgets