Monday, February 3, 2014

மூலத்திரிகோணம்:
                                            திரிகோணம் என்பதற்கும் மூலதிரிகோணம் என்பதற்கும் ஜோதிடத்தில் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் திரிகோணம் என்பது லக்னம் மற்றும் ராசியில் இருந்து எண்ணிவர முறையே 1,5,9 இடங்களாகும். ஆனால் மூலதிரிகோணம் என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி உச்சம் பெறும் அமைப்பை போன்று இந்த மூலதிரிகோண அமைப்பு ஏற்படுகிறது. அதாவது ஒரு கிரகத்திற்கு மூலதிரிகோண வீடு ஒரு வீடு மட்டுமே. ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு நன்மை செய்வதில் ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.

இப்போது ஒரு கிரகத்தின் மூலதிரிகோண வீடு என்ன வென்று பாப்போம்:

சூரியன்          -    சிம்மராசி மூலதிரிகோண வீடு.

சந்திரன்         –   ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.

செவ்வாய்     –   மேஷ ராசி மூலதிரிகோண வீடு.

புதன்              -    கன்னி ராசி மூலதிரிகோண வீடு.

குரு                -   தனுசு ராசி மூலதிரிகோண வீடு.

சுக்கிரன்        -   துலா ராசி மூலதிரிகோண வீடு.

சனி                 –   கும்ப ராசி மூலதிரிகோண வீடு.

ராகு                -    ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.

கேது              -     விருச்சிக ராசி மூலதிரிகோண வீடு.

ஆக திரிகோணம் என்பது ஒரு வீட்டிற்கும் மூலதிரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கும் உண்டானது என்பது இப்போது புரியும்.

-

No comments:

Blogger Gadgets