Tuesday, April 29, 2014

சகோதரன் இல்லாமல் இருப்பது எதனால் ?



                          சிலருக்கு சகோதரன் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பதன்

 காரணம் என்ன ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஜாதக கட்டத்தில் சகோதர காரகன் 
என்பது செவ்வாயைக் குறிக்கும், அதே போல சகோதர ஸ்தானம் என்பது மூத்தோருக்கு பதினொன்றாம் இடமும் இளைய சகோதரத்திற்கு மூன்றாம் இடத்தையும் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்ததால் சகோதரன் இருப்பது இல்லை. இதில் மூன்றாமிடத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரன் வாய்ப்பது  இல்லை.அதேபோல பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரன் இருப்பது இல்லை. அதையும் மீறி சகோதரன் 
இருந்தால் அவர்களும் சிரமப்பட்டு இருப்பவர்களையும் சிரமத்தில் கொண்டு 
விட்டுவிடுகிறார்கள்

                          பிருகு சூத்திரத்தில் சொன்னபடி " காரக கிரகம் காரக ஸ்தானத்தில் நிற்பது

 தவறு " என்ற விதியோடு ஒத்து போகிறது. இதையே ஜாதக அலங்காரத்தில்

                 "  சோதர காரகன் சோதர நாயகன் ற்றுட்ட
                          வட்டமங்கள் கூடி நிற்க சோதரம் சொப்பனம் கிட்டாதே.  "


                        என்று கூறுகிறது, சகோதர ஸ்தானதிபதியும் ( மூன்றாமிடத்ததிபதி அல்லது பதினொன்றாம் வீட்டதிபதியும் )  சகோதர காரகனான செவ்வாயும் ஆறு எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நின்றால் அந்த ஜாதகர்களுக்கு சகோதரன் என்பது கனவிலும் 

கிட்டாது என்று உறுதியாக கூறுகிறது.

No comments:

Blogger Gadgets