காலசர்ப்ப யோகம் ஜோதிடக்குறிப்பு
காலசர்ப்ப யோகம் என்பது அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது இந்த இருவருக்கிடையே அமைந்து இருப்பது. காலசர்ப்ப யோகம் என்பதே ஒரு அவயோகம் போல் நம்பப்படுகிறது. காலசர்ப்ப யோகம் அமையப்பெற்ற ஜாதகத்தில் உள்ள மற்ற மிகப்பெரிய யோகங்களைக்கூட தடுத்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் காலசர்ப்ப யோகம் அமையப்பெற்றுள்ள வீடுகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். காலசர்ப்ப யோகம் அமைந்துள்ள வீடுகள் பின் வருவன மாதிரி அமைந்தால், ஒவ்வொரு அமைப்பிற்கும் பலன்கள் மாறும்....
1. ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில்.
2. இரண்டாமிடத்திற்கும் மற்றும் எட்டமிடத்திற்க்கும் இடையில்.
3. மூன்றாமிடத்திற்கும் மற்றும் ஒன்பதாமிடத்திற்க்கும் இடையில்.
4. நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில்.
5. ஐந்தாமிடத்திற்கும் மற்றும் பதினொன்றாமிடத்திற்க்கும் இடையில்.
6. ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில்.
ஒவ்வொரு அமைப்பிற்க்கும் மற்ற ஜாதக அமைப்பை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகருக்கு உலக வாழ்க்கைக்கான பிடிப்புக்கான பலமான யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையை நாடுவார். அதில் மிக உயர்ந்த நிலையை அடைவார்.
ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஜாதகரின் திருமணவாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக, சதா தம்பதியருக்கிடையே சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும், தம்பதியருக்கிடையே புரிதல் வரவே வராது. ஆனால் ஏழாமதிபதியோ அல்லது சுக்கிரனோ வலிமையாக இருந்தால் இந்த இன்னல்கள் மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம்.
நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்து பத்தாமதிபதி பலம் பெறாவிட்டால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விசயங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
காலசர்ப்ப யோகம் ஒரு யோகமாக அமையும் போது அதன் பலன்கள்....
ஜாதகர் மன அமைதி இல்லாவிட்டாலும், அவர்கள் மிகச்சிறந்த உழைப்பளிகளாகவும், அவர் இருக்கும் தொழில் சார்ந்த துறையில் மிக உயர்ந்த நிலையை அடையவைக்கும்(மற்ற யோகங்கள் இருப்பின் அவற்றின் நிலைகேற்ப்ப). அதற்கான திறமையும் அவரிடம் முழுமையாக காணலாம்.
அத்துடன் ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்பவர்கள் கடைசியில் ஏமாற்றுப் பேர்வழிகளாகவே இருப்பர். காலசர்ப்ப யோக ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளால், மனவுறுதி படைத்தவராகவும், ஒரு சாத்வீகமானவராகவும் மெல்ல மெல்ல மாறிவிடுவார்.
காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
இந்த யோகமானது,வாழ்க்கையில் ஒருமுறை மிகமுன்னேற்றமான பாதையில் பயணிக்கவும் (பொருள் வாழ்க்கையில் இதை எற்படுத்துபவர் ராகு), பின் ஒரு முறை பொருள் ப்யணத்தில் தடங்கல் ஏற்ப்பட்டு, அசிங்கப்பட்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஏதுமற்ற ஒரு குழப்பமான் நிலைக்கு தள்ளப்படுதல் (இதை ஏற்படுத்துபவர் கேது). அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும்.
இதில் ராகுவானவர் பயங்கர தன்னம்பிக்கையை கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த பாதைக்கு(பொருள் வாழ்க்கைக்கு) பயணிக்கச் செய்துவிடுவார், இதில் ராகுவனவர் லக்கினம் முதல் ஆறு இடங்களில் அமைய வேண்டும்.
காலசர்ப்ப யோகத்தில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கிடையில் அமைய வேண்டும். இதில் லக்கினம் அல்லது ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப யோகத்தில் வராது.
அந்த மாதிரி அமைப்பை(ஒரு கிரகமோ அல்லது லக்கினமோ வெளியே அமையப்பெற்றவர்கள்) உடையவர்கள், மிகசிறந்த ஒரு இனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ தலைவனாகக் கூட ஆகிவிடுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற மிக நல்ல தலைவராக இருப்பர்(முக்கியமாக சுக்கிரனோ அல்லது குருவோ ராகு கேதுவை விட்டு வெளியே இருந்தால்).
பல உலகப்புகழ் பெற்ற நல்ல தலைவர்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் அடைபட்டு, ஒரு சில கிரகங்கள் ராகு கேது அமைந்திருக்கும் அதே இடத்தில் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ அதே டிகிரியில் அமையப்பெற்று இருப்பதைக்காணலாம்..
காலசர்ப்ப யோகத்தில்....
ராகு 1ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும்ஜாதகர் எளிதில் எரிச்சலடைபவராகவும், பொருமை இல்லாதவராகவும், எதிலும் திருப்தி இல்லாதவராகவும், கூட்டணி மற்றும் கூட்டுதொழில் குழப்பம் மற்றும் ஏமாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும்.
ராகு 1ம் இடத்தில், ஜாதகரின் திருமண பந்தத்தில் பிடித்தம் இல்லாதவராகவும், மனைவி மேல் பிரியம் இல்லாதவராக இருப்பார்.
கேது 7ம் இடத்தில், மனைவி ஜாதகருடன் வேற்றுமையும், ஜாதகரை உதாசீனம் செய்பவளாக இருப்பாள்.
ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும்
ராகு 2ம் இடத்தில், ஜாதகரின் பேச்சு தேள் கொட்டுவது போல் கொட்டுவார், அதே நேரம் விஷகடி அல்லது விஷம் உட்கொள்ளுதல் நிலை ஏற்படலாம்.
கேது 8ம் இடத்தில், நோய் குணமடைவதில் தாமதம், அறுவை சீகிச்சை, சிறிது மனநலம் பதிப்பு ஏற்படலாம்.
ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும்
ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக) மட்டுமே நாடுவர்.
ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும்
ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி, வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்குறியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
ராகு 4ல் பலமுடன் இருந்தால், ஜாதகர் அசையும் அசையா சொத்துக்கள் சேர்ப்பதில் குறியாக இருகிறார்கள், அதனால் அவர்கள் பல சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனி செக்கியூரிடி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைகிறது.
ஆனால் 10ல் உள்ள கேது ஜாதகரை பொதுமக்களிடம் இருந்து தனித்து செயல்பட வைப்பதால் இவர்கள் தலைவராகவெல்லாம் ஆக முடியாது.
ராகு 5ம் இடத்திலும் கேது 11ம் இடத்திலும்
ஜாதகருக்கு, குழந்தைகள், அறிவுத்திறமை, திடீர் பணவரவு, ஆண்மை ஆகியவை பாதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
கேது 11ல் கெட்டிருந்தால் லாபம், புகழ், பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது ஆனால் கேது 11ல் பலமுடன் இருந்தால், ஜாதகருக்கு லாபம் நன்றாகவே வருகிறது, கெட்ட கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களில் 3, 6, 10, 11ல் நல்ல பலன்களையே வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ராகு 6ம் இடத்திலும் கேது 12ம் இடத்திலும்
பொதுவாக கெட்டகிரகங்கள் கெட்ட இடத்தில் மிக நல்ல பலன்களையே வழங்கும் என்பது விதி. குறிப்பாக ராகு 6ல் மிக உயர்வான பலன்களையே தருவார்.
ஜாதகருக்கு ராகு 6ல் மிக சக்திவாய்ந்த எதிரிகளை தருவார், ஆரோக்கியம் கெடும், கடன்சுமை ஏறும், ஆனால் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வாழ்க்கையின் உயர்வுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியையும் தருவார்.
இந்த இடத்தில் ராகு கேதுக்கள் கேந்திரங்களைப் பாதிக்காததால் ஜாதகரின் சமூகத்தோற்றம் கெடாது, உயர்வாகவே இருக்கும்.
12ல் உள்ள கேதுவால் ஜாதகருக்கு சுக சயனம் கெடலாம். ஆனால் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல நல்ல ஒரு நிலை இது. ஆனால் தவறான ஆன்மீக குருக்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.

ராகு 7ம் இடத்திலும் கேது 1ம் இடத்திலும்
ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவர்கள் சுயநல வாதிகளாகவே இருப்பர், கெட்டவர்கள் இந்த இடத்தில் ராகு கெட்டிருந்தால் நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
ராகு 7ல் பலமுடன் இருந்தால், ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவரின் ஆசை மிகுந்த குறிக்கோள் ஜாதகருக்கு நன்மை செய்வதாகவே அமைகிறது.
ஆனால் 1ல் உள்ள கேது ஜாதகருக்கு ரத்தக்க்கொதிப்பு, தலைவலி, வாழ்க்கையில் உற்சாகமின்மை, அதனால் நோய் சாதரணமாக பீடிக்கும் தன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும்
ஜாதகருக்கு, புது விதமான சமயத்தில் தீர்க்க முடியாத நோயாலும், செய்வினையாலும், திடீர் அதிர்ச்சியாலும் பிரச்சனைகள் வரக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
இங்கே ராகு பலமுடன் இருந்தால், திடீர் பண வரவு, வாழ்க்கையில் பல ரகசியமான நடவடிக்கைகள், சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கும் தன்மை, விஷத்தை பயண்படுத்தி நோய் தீர்க்கும் தனமை, மனநலத்திற்கு தீர்வு சொல்பவர்களாக அமைவர்.
கேது 2ல் மிகுந்த வருமானம் ஆனால் சேமிப்பற்ற நிலை, குடும்ப நபர்களிடம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலை, முகத்திலும், பல்லிலும் மருத்துவம் பார்க்கும் நிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். பொதுவாக ஜாதகர் செல்வத்தில் ஒரு உறுதியற்ற நிலையும், தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பார்.
ராகு 9ம் இடத்திலும் கேது 3ம் இடத்திலும்
பொதுவாக ஜாதகருக்கு ராகு 9ல் கெட்டிருந்தால் பணநஷ்டத்தை சூதாட்டத்தில் ஏற்படுத்துவார் என்றும் ஜாதகருக்கு தெய்வநம்பிக்கை என்பதே இருக்காதென்பது விதி.
இந்த இடத்தில் ராகு பலமுடன் இருந்தால் அதிக ஆன்மீக நம்பிக்கையும், அதைப்பற்றியே போதிக்கும் போதகர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் போதிக்கும் போதனைகள் சற்று முரண்பட்டதாகவே இருக்கும்.
3ல் உள்ள கேது கெட்டிருந்தால் ஜாதகருக்கு குடும்ப உறவு சுமூகமாக இருக்காது, அத்துடன் அமைதியான மனநிலை என்பது அமையவே அமையாது, அதனால் ஜாதக்ர் வாழ்க்கையை எப்போதும் தவறாகவே எடுத்துக்கொள்வார். இவருக்கு மற்றவர்களுடன் பேச்சு வழி உறவு என்பது எல்லோருக்கும் போல் சரியானதாகவே அமையாது, முரண்பட்டதாகவே அமையும்.
பொதுவாக கேது உபஜெய ஸ்தானத்தில், 3ல் கெட்ட பலன்களைத்தராது. 3ல் கேது, பேச்சில் சிலர் முரண்பாடானவர்களாக இருந்தாலும் அது மிகப்பெரிய ஒரு பாதிப்பைத் தராது. ராகு 10ம் இடத்திலும் கேது 4ம் இடத்திலும்

ராகு இந்த இடத்தில் கெட்டிருந்தால் மட்டும் ஜாதகரின் முடிவெடுக்கும் தன்மை, தலைமைப்பண்பு ஆகியவற்றை கெடுக்கககூடும் அதுவும் ஜாதகரின் அளவற்ற ஆசையால் மற்றும் பொருமையின்மையால் மட்டுமே நடைபெறும் விதமாக அமையும்.
ராகு 10ல் உபஜெய ஸ்தானத்தில் நல்ல பலன்களையே வழங்குவார். ஆனால் கேது 4ல் சுகமான ஒரு வாழ்க்கைத் தேடலுக்கு தடையாகவே இருக்கும். அதாவது ராகு 10ல் பொது வாழ்க்கைக்கான பொருப்புகளுடன் ஜாதகர் இருப்பதால், குடும்ப, வீட்டு விசயங்கள் பலமிலந்து காணப்படும்.
ஆனால் 10ல் உள்ள ராகு பொது வாழ்க்கைகான தலைமைப்பண்பை தலைமை வாழ்வை பல வருடம் யாரும் உடைக்க முடியாத அளவுக்கு வழங்குவார். அதே நேரம் 4ல் கேது ஜாதகருக்கு ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது, வாழ்க்கைகான அடித்தளம் நகருவதைப் போல் ஒரு உணர்வைத்தருகிறது.
4ல் கேது பாதுகாப்பு இல்லாத உணர்வையும், பலவீனமான இதயத்தையும் தருவதால், உடல் நிலையில் கவனம் தேவை.
ராகு 11ம் இடத்திலும் கேது 5ம் இடத்திலும்
ராகு 11ல் ஜாதகருக்கு, சம்பாத்தியத்தில் பிரச்சனையும், மூத்த சகோதரர் எதிரியாகக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
இங்கே ராகு பலமுடன் இருந்தால், இது லாப ஸ்தானதுடன் சம்பந்தமாதலால், உபஜெய ஸ்தானமாதலால் குறிபிடப்படும்படியான வருமானமும் அதுவும் புத்திசாலியான வழியிலும் மற்றும் வேறு மற்ற வழிகளிலும் உதாரணத்திற்கு கிரிக்கெட் சூதாட்டம், ஷேர் மார்கெட் போன்ற வழிகளிலும் வரவு வரும்.
கேது 5ல் பிள்ளைகளுக்கு சரியில்லாத நிலை என்பர், புத்திசாலித்தனத்தை குறைக்கும் நிலை அல்லது புத்திசாலித்தனம் பயன்படாத நிலை என்று சொல்லுவர்.
ராகு 12ம் இடத்திலும் கேது 6ம் இடத்திலும்
பொதுவாக ஜாதகருக்கு ராகு 12ல் துர்ஸ்தானத்தில் நல்ல பலன்களையே வழங்க வேண்டும். ராகு இந்த இடத்தில் ஜாதகரை எப்பொழுதும் கற்பனையிலேயே மிதக்க வைத்து விடுவார். நிகழ்காலத்தில் ஜாதகர் இருக்கவே மாட்டார். பொய்ய்த்தோற்றத்திலேயே வாழ்வார்.
6ல் உள்ள கேது உடல் நிலையை பற்றிய கவலை என்பதே இருக்காது, கருத்துவேறுபாடுகள் என்பதே இவரிடம் இருக்காது. இவரிடம் வாக்குவாதம், ஒப்பந்தம் என்பது வீண்.
பொதுவாக கேது 6ல் ஜெயிலுக்கு கூட அனுப்பலாம், ஆனல் அதில் இருந்து இவர்கள் வெளிவர மாட்டார்கள், ஜெயிலில் இருந்து வெளிவர முயற்ச்சிக்கக்கூட மாட்டார்கள். வேலை செய்யும் இடத்தில் புதிதாக ஏதாவது செய்வதாக் நினைத்துக்கொண்டு சிக்கலில் மேலும் மேலும் மாட்டிக்கொள்வார்கள்.
No comments:
Post a Comment