Suuriyan

விஞ்ஞானத்தில் சூரியன் 

சூரியனை மையமாக கொண்டுதான் மற்ற கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்ற உண்மையை முதன் முறையில் உலகத்திற்கு உணர்த்தியவர் கோபர் நிகஸ் என்ற இத்தாலிய விஞ்ஞானியாவார். சூரியனை மையமாக கொண்டு சூரிய குடும்பம் என்று அழைக்கப்படும்  9  கோள்கள் சுற்றி வருகின்றன. நாம் வாழும் பூமியும் சூரிய குடும்பத்தை சேர்ந்த ஓர் கோளாகும். மற்றவை செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, யூரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்றவைகளாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனை சுற்றி வரும் கோல்கள் புதன் வெள்ளியாகும்(சுக்கிரன்). இதனை தாழ்நிலை கோள்கள் என்றும், பூமி நீங்களாக மற்ற கோள்கள் அனைத்தையும் உயர்நிலை கோள்கள் என்றும் விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர். 

சைடிரியஸ் காலம் என்பது ஒரு கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் கால அளவு ஆகும். உதாரணமாக நாம் வாழும் பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகிறது. பூமியில் பருவக்காலம் உண்டாவதற்கும் இரவு பகல் மாற்றத்திற்கும் கால அலரீடுகள் மற்றும் கனிப்புகளுக்கும் சூரியனே முக்கிய காரணமாகிறது.

புராணத்தில் சூரியன்

கசிப முனிவருக்கும் அவருடைய முதல் மனைவி அதிதிக்கும் பிறந்தவர்கள் துவாதசி ஆதித்தியர்கள் என்றும் 12 பேர். இவர்கள் 12 பேரும் நாராணனின் திருவருளாளல் ஒன்று சேர்ந்து சூரியன் என்ற பெயரில் விளங்கினர். இவரே நவகிரகங்களின்  தலைநாயகராவார். இதனால் தான் இவரை சூரிய நாராயணன் என்று அழைக்கிறோம். சூரியன் ஏறி செல்லும் தேர் ஒற்றை சக்கரமுடையது. அதன் ஒரு முனை துவரு மண்டலத்துடன் இணைந்துள்ளது. இந்த ஒற்றை சக்கரத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு சூரியன் அமர்ந்து செல்ல சிற்றன்னயின் புதல்வனை அருணன் சூரியனின் சாரதியாக இருந்து தேரை ஓட்டி செல்கிறார். 

கசிபரின் அநேக புத்திரங்களில் சூரியனே ஷத்திரிய தர்மத்தை காக்க அரம் பரிபாலனம் செய்தார். சூரியன் தேரில் அமர்ந்து நவகிரக பரிபாலனத்தையும், பிரபஞ்ச இயக்கத்தையும் நீதி தவாமல் நடத்தி வருகிறார். 

சூரியனின் மகத்துவங்கள் 

தங்கத் தட்டுப்போல தகதகவென வானில் உலா வரும் ஒரு ராஜ கிரகம் சூரியனாவார். உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் சூரியனின் தயவின்றி வாழவே முடியாது. தூங்கும் அனைவரையும் தட்டி எழுப்பி தன் கடமைகளை செய்ய சொல்லி தூண்டுவார். கண்ணுக்குத் தெரிந்த இயற்கை கடவுளான சூரியன் யாருக்காகவும், எதற்காகவும் தன் கடமைகளை செய்ய தவறமாட்டார். அதுபோல இவர் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். சூரியனின்றி பூமிக்கு வெப்பம் கிடைக்குமா? மழைபெய்யுமா? மரம் செடிகொடிகள் தான் உயிர் வாழுமா? இவை அனைத்தும் இல்லாமல் மனிதனால் தான் உயிர் வாழ முடியுமா? பயிர்களுக்கு தன் பார்வையாலேயே உணவை தருபவரல்வா சூரியன். ஒளி வெள்ளத்தை உலகில் பாய்ச்சி பிரகாசிக்க வைக்கிறார். கொடை வள்ளல் குணத்தை கொண்டவர். கடமை உணர்வு மிக்கவர். தாமரையை மட்டும் தான் சூரியனை கண்டு மலருவதாக உதாரணத்திற்கு கவிஞர்கள் கூறினாலும், அனைத்து பயிர் வகைகளுமே சூரியனால் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையை நம்மாள் மறக்க முடியாது-. அதிகாலையில் கொக்ரகோ என சேவல் கூவுவதும்,  பறவைகளும் கிறிச்கிறிச் சத்தமும் மகிழ்ச்சி அளிப்பதுதானே. 

சூரியனை சுற்றித்தான் அனைத்து கிரகங்களும் வலம் வருகின்றன. இவர் யாரையும் சுற்றமாட்டார். இவரிடமிருந்து ஓளியை  பெற்றுதான் சந்திரனும் நட்சத்திரங்களும் இரவில் பிரகாசிக்கின்றன. சூரியனுக்கு கொடுத்துதான் பழக்கமே தவிர யாரிடமிருந்தும் வாங்கி பழக்கமில்லை. அதனால் தான் அக்காலத்தில் அரசர்கள் தங்களை சூரியவம்சம் என பெருமையுடன் கூறிக்கொண்டனர். வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது கொடை வள்ளல்களாகவும் இருந்தனர். உதாரணத்திற்கு கர்ணன். சூரியனின் பார்வையால் பிறந்தவன். சூரியனின் அம்சமாகவே கருதப்பட்டவன். சூரியன் உச்சமாக இருக்க பிறந்தவன். அவன் அரச குலத்தில் பிறந்தவன் என்று யாரும் அறியாத போதும் அரசகுணங்களுடன் வாழ்ந்தவன். தோரோட்டியாக வாழ்நாளில் இருந்தாலும் வலதுகை கொடுப்பதை இடது கை அறியா வண்ணம் தான தர்மங்கள் செய்தவன். அவனது தான தர்மங்கள் அவனுக்கு கவசமாக இருப்பதால் அவனை அழிக்க முடியாது என அறிந்த கண்ண பரமாத்மா அவன் குற்றுயிராய் இருக்கும் தரவாயில் அவனிடம் மாறுவேடத்தில் வந்து தானம் கேட்க என்னிடம் இந்த சமயத்தில் கொடுக்க ஒன்றுமில்லையே என மனதில் கர்ணன் யோசித்து கொண்டு இருக்கும் போதே உன்னுடைய தான தர்மங்களை எனக்கு தாரை வார்த்து கொடு என பெற்றுக் கொண்டு கர்ணனுக்கு முக்தி கொடுத்தார். இன்று வரை கொடுக்கும் குணம் கொண்டவரை கர்ணன் பரம்பரை என்று தானே கூறுகிறோம். கர்ணன் சூரியனின் பரம்பரை அல்லவா.

ஸ்ரீராமம் கூட ரகுவம்சம்  என தான் புராணம் கூறுகிறது. கடவுளின் அம்சமான ஸ்ரீராமபிரானே சூரியவம்சம் என்று தன்னை கூறி கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றவர் சூரியன். இவர் இரகங்களின் அரசனாவார்.  ஷத்ரிய ஜாதியான இவர் தலையில் சிறு கொம்புள்ளவர். சமமான உயரம் உடையவர். கிழக்கு திசை இவரது ஆதிக்கமாகும். காயத்ரி மந்திரத்தின் காரணகர்த்தா ஆவார். இவருடைய சுவை கசப்பு, இவரின் நிறம் சிவப்பு, தானியம் கோதுமை, மலையை ஆளுமை செய்பவர். பருத்த தலையும் சிறும்பிய முடியும் உடையவர். அதிகாரகுணம் மிக்கவர். ரசவாத வேலை செய்பவர். சித்த வைத்தியம் அறிந்தவர். பால்,மிளகு,ஒன்றை தலைவலி, வலதுகண், பஞ்சலோகம் பிரயாணம் செய்தல் போன்றவற்றிற்கு சூரியன் காரண கர்த்தா ஆவார். பகல் பொழுது இவருடையது என வேதம் கூறுகிறது. உறவு முறைகளில் தந்தைக்கு காரககனாகிறார். சிவ பூஜை செய்து வணங்குவர்.

சித்திரையில் ஏன் குழந்தை பிறக்க கூடாது 

சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது நல்லதல்ல. குடும்பத்தை பிரித்துவிடும். தந்தைக்கு கண்டத்தை கொடுக்கும் என்று மேலோட்டமாக நம்ப படுவதால் நாம் திருமண மான புதுமண தம்பதியினரை ஆடி மாதங்களில் பிரித்து வைக்கிறோம். ஏனென்றால் ஆடி மாதத்தில் கர்பம் தரிக்குமேயானால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் உச்சத்தில் இருப்பார். சூரியன் உச்சம் பெற்றவர்களுக்கு அதிகார குணமும், பிறரை அடக்கி ஆளும் தன்மையும் இருக்கும். ஒரு நாட்டில் பலர் சூரியன் உச்சம் பெற்றிருக்கும் போது பிறந்தால் அனைவருக்கும் அதிகார குணமிருக்கும். அதிகாரமிக்க பதவிகளுக்கும் ஆசைபடுபவர்களாக இருப்பார்கள். இதனால் யாரும் யாரையும் அடக்கி ஆளமுடியாத நிலைமை உண்டாகும். நாட்டின் நிலைமை  என்னவாகும் என யோசித்து பாருங்கள். பெரிய பெரிய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள். சித்திரையில் பிறந்தவர்களுக்கு சமுதாயப் பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். வீட்டை பற்றி சிந்தனையே இல்லாமல் போகும். அனைவருமே சமுதாயம், சீர்திருத்தம் அரசியல், அதிகாரம் என்று போனால் அவர்களின் குடும்பங்களின் கதி என்னவாகும். இது மட்டுமின்றி சித்திரையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியனின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். என்பதால் தான் நம் முன்னோர்கள் உஷாராக சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என வரியில் முடித்து விட்டார்கள். ஆனால் பிராமணர்களுக்கு இது விதி விலக்காகும். அதனால்தான் பெரிய பெரிய உயர்பதவிகளையும், அரசு பணிகளையும் பிரமாணர்கள்  பிறர் போற்றும்படி நிர்வாகம் செய்கிறார்கள். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் நிர்வாகத்தில் கொடி கட்டிப் பறப்பார்கள். 

சூரியனை நமஸ்காரம் செய்வது ஏன்? 

நாம் காலையில் எழுந்தவுடன் இறைவனை வணங்குகிறோம். அது போல குளித்து முடித்தவுடன் தினமும் சூரியனை நமஸ்காரம் செய்வது மூலம் ஆத்மபலமும், கண்பார்வைக்கு வேண்டிய வைட்டமின் சத்தும் நமக்கு கிடைக்கிறது. பிறந்த குழந்தைகளை கூட காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்திருப்பது நல்லது. சூரியன் கண்களுக்கு காரகன் என்பதால் தினந்தோறும் காலையில் சூரியனுக்கு நமஸ்காரம்  செய்ய வேண்டும் என பெரியவர்கள் கூறினார்கள். கண்பார்வை குறையத்தொடங்கும் வயதில் சூரியனை நமஸ்கரிப்பதால் ஒரு பலனும் இல்லை. இதனால் தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பலனும் இல்லை என கூறுகிறோம். 

தந்தையும் மகனும்,

சூரியன் தந்தைக்கு காரகனாவார். ஆங்கிலத்தில் பாருங்கள் ஷிuஸீ  என்ற சொல் சூரியனையும் ஷிஷீஸீ என்ற சொல் மகனையும் குறிப்பதாக உள்ளது. சூரியனுக்கும், தகப்பனுக்கும், மகனுக்கும் உள்ள தொடர்பு விளங்குகிறதல்லவா. 

ஞாயிறு அன்று நான்வெஜ்

ஞாயிறு என்றால் சூரியன் என்று பொருள், சூரியன் ஷத்திரிய குலத்தை சார்ந்தவர். சண்டை பிரியர். வலிமை உடையவர். சண்டை போட வேண்டுமென்றால் உடல் வலிமை வேண்டும்.  உடல் வலிமை வேண்டுமென்றால் நல்ல உணவு வேண்டும். கறி மீன் சாப்பிட்டால்தான் நல்ல உடல் வலிமை இருக்கும். இதனால் தான் ஞாயிற்று கிழமைகளில் கறி மீன் கடைகளில் கூட்டம் அலை மோதும். எவ்வளவு விலை என்றாலும் மறுபேச்சின்றி வாங்கி செல்லும். ஞாயிறு விடுமுறை தினம் தானே. உண்ட மயக்கம் தொண்டணுக்கும் உண்டு என்பது போல அசைவ கறி சாப்பிட்டுவிட்டு அமைதியாக ஓய்வும் எடுக்கலாமே.

சூரியனின் ஆதிக்கம் கொண்ட கலெக்டர் பதவி

சூரியன் அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை வகிப்பதற்கு காரகனாக இருப்பவர். உதாரணத்திற்கு கலெக்டர் பதவியை  எடுத்துக்கொள்வோம். கலெக்டர் என்றால் ஆட்சியாளர் என்று பொருள். அதாவது நிர்வாகம் செய்யக்கூடிய ஆளுமை பெற்றவர். கலெக்டர் என்ற சொல்லுக்கு கூட்டுத் தொகை எவ்வளவு வருகிறது என்று பார்ப்போமா? சூரியனின் ஆதிக்க எண் 1 என்பது நாம் அறிந்ததே. அதுபோல
சிஷீறீறீமீநீtஷீக்ஷீ
373353472= 37=10-1
கலெக்டர் பதவிக்கு சூரியனின் ஆதிக்கம் வந்து விட்டதல்லவா?  

மற்றொரு உதாரனத்தைப் பாருங்கள்.

Government: 


என்பதற்கு அரசு என்று பொருள்.  அதாவது ஒரு நாட்டை கட்டி காத்திடும் அமைப்பு அரசுக்கு எல்லா விதமான அதிகாரங்களும் உண்டு. இதை செய், இதை செய்யாதே என ஆனையிடவும் அதிகாரம் உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது தான் அரசு என்றாலும் அந்த அதிகாரம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களின் ஆட்சி காலம் முடியும் வரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும், அந்நிய நாட்டினாரால் உண்டாக கூடிய தீவிர  வாத செயல்களை அழிக்கவும் அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. 
Government:
3765254554 = 46=10 = -1


ம் எண் வருகிற தல்லவா. இதுவும் சூரியனின் ஆதிக்கம் தானே. 

No comments:

Blogger Gadgets