விவாகரத்து ஏற்படும் ஜாதக ரீதியான அறிகுறிகள்:
1. சூரியன், ராகு மற்றும் சனி ஆகியவை பிரிவை ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள். ஜாதகரின் 12-மிடமும், 12-ம் அதிபதியும் பிரிவினைக்கு காரணமானவர்களாகும்.
2. ஒருவரது ஜாதகத்தின் 4-மிடம், வாழ்க்கைத் துணையையும், திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அல்லது துயரத்தைக் குறிக்குமிடம். இந்த நான்காமிடம் பலமிழந்தாலோ, 4-ம் அதிபதி அமைந்துள்ள இடம் பலமிழந்தாலோ அல்லது 4-ம் வீட்டில் சனி, சூரியன், ராகு அல்லது 12-ம் அதிபதியோ அமர்ந்திருந்தால், விவாக ரத்து ஏற்படும்.
3. 6-ம் வீடும் 12 மற்றும் 7-ம் வீடும், வழக்கு, விரோதம் ஆகியவற்றைக் குறிக்கும். பொதுவாக ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நாம் முடிவெடுகிறோம். ஆனால், மணமுறிவை கோர்ட் தீர்மானிக்கிறது. பெரும்பாலான கேஸ்களில், 4-ம் அதிபதி 6-ம் வீட்டிலோ அல்லது 6ம் வீட்டில் 4-ம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ பிரிவு ஏற்படும்.
4. 12-ம் அதிபதி 4-ம் அதிபதியுடன் இணைந்தாலோ அல்லது 4-ம் அதிபதி 6,8, மற்றும் 12-ம் வீடுகளில் அமர்ந்தாலோ , சுக்கிரன் அல்லது 7-ம் அதிபதி சூரியன் , ராகு அல்லது சனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தாலோ கண்டிப்பாக பிரிவு உண்டாகும்.
5. கன்னி லக்கினக்காரர்களுக்கு , 12-ம் அதிபதியான சூரியன் 7-ம் வீட்டில் இருந்தாலோ அல்லது 6-ம் அதிபதியான சனி 4-ம் வீட்டில் இருந்தாலோ கட்டாயம் பிரிவினை ஏற்படும். அதுபோல 4 மற்றும் 7-ம் அதிபதியான குரு 6-ம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது குரு 12-ம் வீட்டில் அமர்ந்தாலோ பிரிவு நிச்சயம்.
6. 7-ம் அதிபதி12-ம் அதிபதியுடன் இணைந்து 12-ல் அமர்ந்தாலோ ,அல்லது 12-ம் அதிபதி 7-ம் திபதியுடன் இணைந்து 7-ம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது 7-ம் அதிபதியும் 12-ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனாலோ தம்பதிகள் பிரிவார்கள்.
7. 7-ம் அதிபதி 12-ல் இருந்து லக்கினத்தில் ராகு இருந்தாலோ அல்லது 12-ம் அதிபதி 7-ல் ராகுவுடன் இருந்தாலோ விவாகரத்தாகிவிடும்.
8. 7 மற்றும் 12-ம் அதிபதிகள் 5-ம் வீட்டில் அமர்ந்தாலும் பிரிவேற்படும்.
9. 7-ல் சுக்கிரன் அமர்ந்து 7-ம் அதிபதி 12-ல் அமர்ந்தாலும் பிரிவு தவிர்க்கமுடியாதது.
10. 12மற்றும் 7-ம் அதிபதியுடன் இணைந்து 10-ல் இருந்தாலும் கணவன்-மனைவி பிரிவர்.
11. லக்கினம் செவ்வாயாகவோ சனியாகவோ இருந்தாலும் அல்லது லக்கினத்தில் சுக்கிரன் இருந்து 7-மிடம் சூரியன், சனி அல்லது ராகுவோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் திருமண வாழ்க்கை தொடராது.
12. சுக்கிரன், சந்திரன் அல்லது சூரியனுடன் இணவதும் நல்லதல்ல. அதிலும் அவை 7-ல் இருந்து பிரிவுக்குரிய கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நன்மை பயக்காது.
13. ராகு- சனி சேர்க்கை லக்கினத்தில் காணப்பட்டாலோ, அல்லது அவை 7-ல் இருந்து, 4-மிடம் பிரிவினைக் கிரகங்களால் பாதிக்கப்பட்டாலோ பிரிவு நிச்சயம்.
No comments:
Post a Comment