Guru

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும்
பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர்
தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம்.
அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று
சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை
பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன.
ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி,
கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.
அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.
குருபலம்!
திருமணம்
என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய
கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக
தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண
விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.
பார்வை பலம்!
குரு எந்த ஸ்தானத்தை
பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை
சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு
இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம்
பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
ஸ்தான தோஷம்!
குரு
முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர
தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன்
சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது
சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால்
அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு
பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து
விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம்,
செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை
ஈடுபட வைப்பார்.
மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதா
கலாட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல்,
கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல், அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம்
அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார். தலைசிறந்த வக்கீல்களாகவும்,
நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே.
கல்வித்துறை, நிதி, நீதித்துறைகள், வங்கி போன்றவற்றில் பணி செய்யக்கூடிய
பாக்கியத்தை அருள்பவரும் குரு பகவானே.
பரிகாரம்: குரு பகவானின்
பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று
வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து
பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம். கும்பகோணம்
அருகில் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். குரு ஜெயந்தி நாளை
கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குரு பகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம்
பெறுவோமாக.
கைரேகை அமைப்பு!
விரல்கள் அமைப்பில் ஆள்காட்டி விரல்
குரு விரல் ஆகும். இந்த விரல் அடியில் உள்ள மேடு குரு மேடாகும். இந்த
மேட்டில் வளையம் போன்ற ரேகை அமைப்பு இருந்தால் குருவளையம் என்றும்,
‘சாலமன்ரிங்’ என்றும் இதை அழைப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த
பதவி, அந்தஸ்தில் இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு இருக்கும்.
குருவின் அம்சங்கள்
கிழமை
: வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் :
புனர்பூசம், விசாகம்,
பூரட்டாதி
நிறம் :
மஞ்சள்
ரத்தினம் : புஷ்பராகம்
தானியம் : கொண்டைக்
கடலை
உலோகம் : பொன்
(தங்கம்)
ஆடை :
மஞ்சள்
ராசி : தனுசு, மீனம்
உச்ச ராசி : கடகம்
நீச்ச
ராசி : மகரம்

No comments:

Blogger Gadgets