Chandran

விஞ்ஞானத்தில் சந்திரன் 

சந்திரனும் சூரியனை சுற்றி வரும் ஒரு துணை கோளாகும். சந்திரன் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் துணை கோளாதலால் அது ஒளிரும் தன்மைப் பெற்றது. சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. சந்திரன் பூமியை சுற்றி வரும் போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் நேரத்தில் சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. சூரிய கிரகணம் அமாவாசையன்றும், சந்திர கிரஹணம்  பௌர்ணமியன்றும் உண்டாவது நாம் அறிந்ததே. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதே போன்று பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.

புராணத்தில் சந்திரன்

சூரியனின் வரலாறு போலவே அத்தரி மகரிஷிக்கும் அவருடைய மனைவி அனுசுயா என்பவளுக்கும் பிறந்த சோமன், துர்வாசன், தத்தாத்திரேயன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் சோமன் என்பவரே நவகிரகாதிகளின் ஒருவராகிய சந்திரன். சந்திரன் குருவிடம் சீடராக சேர்ந்து சகல கலைகளையும் கற்று தேர்ந்தர். சந்திரனுடைய வல்லமையையும், பேரழகையும் கண்டவர்கள் அவனுக்கு பெண் கொடுக்க நீ, நான் என முன்வந்தனர். ஆனால் சந்திரன் தட்சனுடைய 27 பெண்களை கண்டு மனம் மயங்கி அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து கொண்டார். 

சந்திரன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்த குருவின் மனைவி தாரா சந்திரனின் அழகில் மயங்கி அங்கேயே தங்கி விட்டார். இதையறிந்த தட்சன் தன் மகள்களின் மேல் சந்திரன் அன்பு செலுத்தாதை கண்டு கோபம் கொண்டு சந்திரனுடைய 15 கலைகளும் நாள் ஒன்று வீதமாக தேயந்து போக சாபமிட்டார். இதனால் சந்திரனின் கலைகள் நாளரு கலையாக தேய ஆரம்பித்தது. இதை கண்ட சந்திரன் சிவனிடம் சரணடைந்து தட்சனுடைய சாபத்தை போக்கும் படி வேண்டினான். சிவனால் தட்சன் கொடுத்த சாபத்தை முழுவதுமாக போக்க முடியாது என்பதால் தேயும் கலைகள் மீண்டும் வளர்ந்து பூரண சந்திரனாக காட்சியளிப்பாய் என வரமளித்தார். இதனால் தான் பௌர்ணமியும், அமாவாசையும் வருகிறது. 

சூரியன் பகலில் உலா வரும் ராஜ கிரகம் என்றால் சந்திரன் இரவில் உலா வரும் ராஜ கிரகமாகும். பூமி சூரியனை சுற்றுவது போல சந்திரன் பூமியை சுற்றி வரும். சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிக்கிறார். கேது என்ற கிரகத்தால் மறைக்கப்படுவார். சந்திரன் உறவுகளில் தாய்க்கு காரகனாகிறார். மனநிலை திடமாக இருப்பதற்கும் சந்திரனின் பலம் அவசியம். வயிற்று காரகன் என்பதால் சாப்பாடு இவர் கட்டுப்பாட்டில் உள்ளது. 

குருபகவானிடம் வித்தை கற்க வேண்டி சீடராக சேர்ந்த சந்திரன், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகனானார்.  இதை அறிந்து கொண்ட குரு சந்திரனை வளர்ந்து தேயும் படி சாபம் விட்டார். அதனால் தான் 15 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசையும்,  பௌர்ணமியும் மாறி, மாறி வருகிறது. இதனால்தான் என்னவோ சந்திரன் கெட்டதும் பெண்ணாலோ, அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்ற பழமொழியும் உண்டு.

சந்திரன் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் அதன் அழகே அழகுதான். சந்திரன் ஒரு ராசியில் 2.25 நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். இவர் குளுமையானவர். உப்பு ருசியை விரும்புவார் குள்ளமானவர். வைசிய ஜாதியை சேர்ந்தவர். வாயு மூலை எனப்படும் வடமேற்கு திசை இவருடைய ஆதிக்கத்திற்கு குட்பட்டது. இவருடைய சின்னம் முயல். வானவில், மேகம், மீன், சஞ்சலம், சந்தேகம், குண்டாகுதல், இளைத்தல் யாவும் இவர் கை வண்ணமே.

சந்திரன் காதலுக்கு மிகவும் காரணமானவர். இவர் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தை உடையவர். நீர் நிலைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இவரின் ஆதிக்கமும் இருக்கும். நிலாவை தூது விடாத காதலர்களும் உண்டா? மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவை பார்த்து ரசிக்க தெரியாதவன் மனிதனே இல்லை. சந்திரனை பார்த்தாலே கற்பனையும், கவிதையும் ஊற்றெடுக்கும். பெண்ணை வர்ணிப்பதே நிலவை வைத்து தானே. மனோகாரகனல்லவா சந்திரன். சந்திரனை கண்டால் தான் அல்லி மலர் மலரும். இரவு பொழுதை நீட்டிக்க விரும்பும் ஒரு கவிஞன் நிலாவே வா செல்லாதே வா என்கிறான். காதலி கோபமுற்றால் காதலன் நிலவுக்கு என் மேல் என்னடி  கோபம் நெருப்பாய் எரிகிறது என்கிறான் கோபம் தனிந்த காதலியோ அந்த நிலாவைத் தான் என் கையில் பிடிச்சேன் என் ராசாவுக்காக என்கிறாள். காதலுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார். பாருங்கள்.

காதல் தோன்றி வளரும் இடம் 

நீர் நிலைகள் அனைத்தும் சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை அக்காலங்களில் எல்லா காதலர்களுக்கும் சந்திக்கும் இடமாக விளங்கியவைகள் பெண்கள் தண்ணீர் எடுக்க, குளிக்க செல்லும் குளம், கிணறு, ஆற்றங்கரை, பம்பு செட் ஆகும். கிணற்றின் உள்ளிறங்கி படிக்கட்டுகளின் மணி கணக்காய் பேசியவர்களும் உண்டு. தற்போது இவை யெல்லாம் அரிதாகி விட்டதால் காதலர்கள் அனைவரும் கடற்கரைகளுக்கு சென்று  விடுகிறார்கள். பௌர்ணமி நிலவிலே கடற்கரை மணலிலே கைகள் கோலம் போ, கண்கள் ஆயிரம் பாஷைகள் பேச முழு மதியின் அழகில் தன் மதியை மறந்து உட்கார்ந்து இருப்பார்கள். அதை கண்டு அலைகளும் ஆர்பரித்து தன்னுடைய வேகத்தை அதிகரிக்கும். 

காதல் வசனங்கள் 

சந்திரனின் அம்சம் மான் என்கிறார்கள். சந்திரன் ஒரு பெண்கிரகமாவார். பொதுவாக பெண்களை  வர்ணிக்கும் போது மான் போல துள்ளி துள்ளி ஓடுகிறாள். மீன் போல கண்கள் (நீரில் வாழும் உயிரினம்)  அல்லி தண்டு போல கால்கள் (சந்திரனை கண்டு மலரும் பூ) தந்தம் போன்ற கால்கள், வெண்ணையை போல் வழவழப்பான உடல் வானவில் போன்ற  புருவம், பிறைபோன்ற நெற்றி, வட்ட நிலவு போன்ற முகம், முத்து போன்ற பல்வரிசை, பஞ்சு போன்ற பாதம். என்று சந்திரனின் காரகத்துவங்களை வைத்து வசனங்களை அடுக்கி கொண்டே போகலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதியர் தேன்நிலவுக்கு செல்கிறார்கள். அதற்கு ஆங்கிலத்தில் Honey moon  என பெயரிட்டுள்ளனர். இந்த தேன் நிலவு மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள மனம் விட்டு பேச முடிகிறது. உடல் இணைவது மட்டும் வாழ்க்கையல்ல உள்ளங்களும் இணைவது தானே முழுமையான வாழ்க்கை.

சித்திரையில் வரும் பௌர்ணமி 

மாதம் ஒரு முறை பௌர்ணமி வந்தாலும் சித்திரையில் வரும் பௌர்ணமியானது மிகசிறந்ததாக கருதப்படுகிறது. சூரியன் உச்சம் பெற்று தன் உக்கிரகத்தை வெளிபடுத்த, அதிலிருந்து வெளிச்சத்தை பெறும் சந்திரனும் வானில் தகதக வென மினுமினுக்க, அப்பப்பா பார்ப்பதற்கு தான் கண்கள் நூறு வேண்டும். இந்நாளில் பெண்கள் பால் குடம் எடுத்து வந்து பெண் தெய்வமாகிய அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது, இளநீர் அபிஷேகம் செய்வது போன்றவற்றின் மூலம் தெய்வங்களை குளிர்விப்பார்கள். இவைகளும் சந்திரனின் காரகத்துவங்கள் அல்லவா? கன்னியாகுமரி கடற்கரையில் இந்த ஷிuஸீ sமீt ம் விஷீஷீஸீ ஸிவீsமீ ம் அந்நியநாட்டவரையும்  அசையாமல் நிற்க வைக்கும். இந்த அழகை ரசிக்க ஆயிரமாயிரம் மக்கள் திரள்வார்கள். 

பௌர்ணமியின் பெருமை 

திருமணமாகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள், வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை சந்திப்பவர்கள் போன்ற அனைவரும் பௌர்ணமி நாட்களில் கோவில்களில் சென்று இரவு தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதையும் மனம் விரும்பி செய்கிறார்கள். ஐப்பசி மாத பௌர்ணமியில் எல்லா சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். பௌர்ணமியில் விரதம் இருப்பது, தெய்வவழிபாடு செய்வது போன்ற வற்றின் மூலம் வாழ்வில் துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம் கார்த்திகையில் வரும் பௌர்ணமியை தீப திருநாளாக போற்றி கொண்டாடுகிறார்கள். 

அமாவாசையின் பெருமை

சந்திரனை வானில் காண முடியாத நாள் அமாவாசை என்றாலும் இந்த அமாவாசை நாட்களிலும் பித்ருக்களுக்கு தர்பணம் செய்வது, திருஷ்டிகழிப்பது, ஆடு கோழி போன்றவற்றை  பலி கொடுத்து மாந்தீரீக வித்தைகளை கற்பது போன்ற வற்றை முழு அமாவாசைகளில் செய்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்பார்கள். குடும்பத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய  இயலாதவர்கள் இந்த மஹாளயை அமாவாசையில் பித்ரு தர்பணம் செய்வார்கள். இறந்தவர்களுக்கு வருடா வருடம் திதி கொடுக்க முடியாதவர்களும் இந்த மஹாளய அமாவாசையில் பித்துருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் கடமையை நிறைவேற்றி கொள்கிறார்கள். 

நிலாச் சோறு

உணவு சந்திரனின் கட்டுபாட்டிலிருப்பதாக முன்பே பார்த்தோம். நிலா சோறு சாப்பிடுவதென்பது பலருக்குப் பிடிக்கும். பௌர்ணமி நிலவில் சாப்பாட்டை மொத்தமாக பிசைந்து தாயனவர் குழந்தைகளுக்கு  ஒவ்வொரு கவளமாக கையில் உருண்டை பிடித்து கொடுப்பதும் அதை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி உண்பது மனதிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா?  அதுபோல கூட்டாஞ்சோறு சமைத்து குழந்தைகள் விளையாடி மகிழ்வதும் இந்த சந்திரனின் ஒளியில்தான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி எண்ணெய் பருப்பு, காய் உப்பு புளி போன்றவற்றை ஆரைக்கு ஒரு பங்காக எடுத்து வந்து நில வொளியில் அடுப்பு மூட்டி நில சோறு சமைத்து அதை தோப்பத்தில் உள்ள வாழை இலையை பறித்து அனைவருக்கும் பரிமாறி உண்டு மகிழ்வது அந்த பிஞ்சு நெஞ்சங்களுக்கு  எத்ததை ஆர்வம் தெரியுமா? அது போல சாப்பிடாத குழந்தையும் சந்திரனின் அழகை கண்டால் சாப்பிட்டு முடிக்கும். தாயானவள் அதே பார் சந்தமாமா என குழந்தைக்கு  காட்டி அவருக்கு வாய் கொடுப்போமாம் நீ ஒர வாய் சாப்பிடுவியாம் என சாப்பிடாத சந்திரனுக்கு சோறுட்டி, தன் குழந்தையை வயிறு நிறைய சாப்பிட வைப்பாள். தாய். அன்பு, உணவு இம்மூன்றிற்கும் சந்திரனே காரகனல்லவா. 

கடல் அலைகள்

பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடலில் சீற்றங்கள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. பூமியின் புவியீர்ப்பு சக்தியும், சந்திரனின் காந்த சக்தியும் இதற்கு காரணங்களாகும்.  பூரண நிலவாக சந்திரன் உலா வரும் நாட்களில் கடல் அவரை பார்த்து பூரித்து மகிழ்கிறதோ என எண்ணத்தோன்றும். அதுவே சந்திரனை பார்க்க முடியாத  அமாவாசை நாட்களில் சந்திரனை தேடுவதற்காக பொங்கிப் பாய்கிறதோ? இதற்கான விடை சந்திரனுக்கு மட்டுமே தெரியும். 

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் பாரதியார் 

பார் முழுவதும் பெண் சுதந்திரத்திற்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னையே அர்பணித்து கொண்டவர் பாரதி. பெண்களின் அடிமைத் தனங்களை உடைத்தெரிய பாடுபட்டவர்களில் முக்கியமானவர் பாரதி. அவர் பிறந்த தேதி என்ன தெரியுமா? 11. 1+1=2. 2 ம் எண்ணின் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்து பெண்களுக்காக பாடுபடாவிட்டால் எப்படி?

சிந்து நதி இன்னிசை நிலவினிலே 
சேர நன் நாட்டிளம் பெண்களுடனே 
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து 

தோனிகள் ஒட்டி விளையாடி மகிழ்வோம் எத்தனை கற்பனை திறன் பார்த்தீர்களா? சந்திரனை கற்பனை காரகன் மனோகாரகன், காதலுக்கு ஏற்றவன், கவிதைதிறனை வழங்குபவன் என பலவகையில் பார்த்தாலும் விஞ்ஞான ரீதியாக நிலாவிற்கே  மனிதன் சென்று அங்கு ஆய்வுகளை நடத்தி கொண்டிருக்கிறான் என்பது உண்மை. ஆயா வடை சுடுவதாக நம் கண்ணுக்கு  தெரியும் அனைத்தும் பாறைகளும், கற்களும் தான்.  நிலவில் மனிதன் வாழ முடியும் என்பதையும் விஞ்ஞானம் ஊர்ஜிதம் செய்துள்ளது. சொல்ல முடியாது சந்திரனில் உண்டாக கூடிய குடியிருப்புகளால் வானில் டிராபிக் ஜாம் ஆனாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. 

முதன்முதலில் நிலவில் காலடி வைத்தவரின் பெயர் என்ன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது. சந்திரனின் காலடி பதித்தவரின் பெயர் 

Neel Amstrong
5553 14342753 = 47 4+7=11 - 1+1=2

ஆச்சரியமாக இருக்கிறதா? 


2ம் எண் சந்திரனின் ஆதிக்கமல்லவா? அதனால்தான் முதன்முதலில் சந்திரனில் காலடி எடுத்து வைக்கும் பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. 

No comments:

Blogger Gadgets