Monday, May 19, 2014

திருமண ரகசியங்கள்


நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி


ஆண் ஜாதகம்


1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது

7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது
இல்லாமல் இருக்க வேண்டும்.
2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல்
சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க
வேண்டும்.


3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால்

திருமணம் நிச்சயம் நடைபெறும்.
4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக
நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 )

நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ (

1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம்
நிச்சயம் நடைபெறும்.


7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ

அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.


8, 7-ஆம் பாவ அதிபதிபதி சனியாக அமைந்து, லக்னத்திற்கு கேந்திரத்திலோ

அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது 11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.


9, 7-ஆம் பாவ அதிபதியும், லக்னாதிபதியும் இணைந்து எந்த

பாவத்திலிருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


10, 7-ஆம் பாவ அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் சம சப்தமாக

இருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


11, 7- ஆம் பாவாதிபதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று

நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்

நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.




பெண் ஜாதகம்


1, பெண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது

7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது
இல்லாமல் இருக்க வேண்டும்.


2, பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-

இல் செவ்வாய் நின்றிருக்க, செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இல்லாமல்
இருக்க வேண்டும்.


மேற்கண்ட விதிகளiல் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்

நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.



திருமணம் எளிதில் கைகூடாத  ஜாதகம்


1, 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 6,8-இல் லகனாதிபதி நின்றால் திருமணம்

எளiதில் கைகூடாது. திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியிடையே கருத்து
வேறுபாடு உண்டாகும்.


2, 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 4,10-இ னாதிபதி நின்றாலும் திருமணம்

எளiதில் கைகூடாது.


3, 7-க்குடையவன் 3,6,9,12-ஆம் பாவங்களiல் நின்றால் திருமணம் ஆவது

கடினமாகும்.


4, 7-க்குடையவன் 2,5,8,11-ஆம் பாவங்களiல் பல சிரமங்களுக்குப் பின்

திருமணம் நடைபெறும்.


திருமணத்தடை


1, ஆண் பெண் இருவருடைய ஜாதகங்களiல் களத்திர பாவம் என்பது ஏழாம்

பாவமாகும்.
2, ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரனாகும். பெண்களுக்கு
களத்திரகாரகன் செவ்வாய் ஆகும்.
3, ஒருவருக்கு திருமணமே நடக்காமல் நிரந்தரமாக தடைபடுவதற்கு
காரணமான ஜோதிட விதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
திருமணத்தடை ஆண் ஜாதகம்
1, லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் ஏழாம் வீட்டு அதிபதி நிற்பது.
2, குரு நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் சுக்கிரன் நிற்பது.
3, ஏழாம் வீட்டு அதிபதி நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நிற்பது.
4, சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது நிற்பது.
5, 7-ஆம் வீட்டில் ராகு அல்லது கேது நின்றால் திருமணத்தில் தடை ஏற்படும்.
6, 7-க்குடையவனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் திருமணத்தில்
தடை ஏற்படும்.
7, அதிர்ஷ்ட வசமாக அவருக்கு திருமணம் நடந்தாலும், அவர் எத்தனை
திருமணம் செய்து கொண்டாலும் அத்தனை திருமணங்களும் தோல்வியில்
முடியும்.
8, மேற்கண்ட விதிகளiல் நான்கிற்கு மூன்று விதிகள் பொருந்தி வருமாயின்
அந்த பெண் நபருக்கு எளiதில் திருமணம் கைகூடாது.
திருமணத்தடை பெண் ஜாதகம்
1, லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் ஏழாம் வீட்டு அதிபதி நிற்பது.
2, சுக்கிரன் நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் செவ்வாய் நிற்பது.
3, ஏழாம் வீட்டு அதிபதி நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நிற்பது.
4, செவ்வாய் நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது நிற்பது.
5, மேற்கண்ட விதிகளiல் நான்கிற்கு மூன்று விதிகள் பொருந்தி வருமாயின்
அந்த பெண் நபருக்கு எளiதில் திருமணம் கைகூடாது.
6, அதிர்ஷ்ட வசமாக அவருக்கு திருமணம் நடந்தாலும், அவர் எத்தனை
திருமணம் செய்து கொண்டாலும் அத்தனை திருமணங்களும் தோல்வியில்
முடியும்.
தசா புத்திரீதியாக திருமணம் நடைபெறும் காலம்
1, லக்னாதிபதியின் தசா, புத்திகள்.
2, 7-க்குடையவனின் தசா புத்திகள்.
3, 7-இல் நின்ற கிரகத்தின தசா புத்திகள்.
4, 7-க்குடையவனின் சாரம் பெற்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
5, 7-இல் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
6, லக்னத்தில் நின்ற கிரகத்தின் தசா புத்திகள்.
7, லக்னாதிபதியின் சாரம் பெற்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
8, லக்னத்தில் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்களின் தசா புத்திகள்.
9, குரு நின்ற ராசிக்குக் 7-குடையவனின் தசா புத்திகள்.
10, குரு நின்ற ராசிக்குக் 7-குடையவனின் தசா புத்திகள்.
11, 7-க்குயைவனோடு இணைந்த கிரகங்களiன் தசா புத்திகள்.
12, சுக்கிரனோடு இணைந்த கிரகங்களiன் தசா புத்திகள்.
13, பெண் ஜாதகத்தில் செவ்வாய்யோடு இணைந்த கிரகங்களiன் தசா
புத்திகள்.
14, சுக்கிரனுக்கு 7-க்குடையவனின் தசா புத்திகள்.
15, சுக்கிரனுக்கு 7-இல் நின்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
திருமணம் எப்போது
ஆண் ஜாதகம்
1, ஆணுடைய பிறப்பு ஜாதகத்தில உள்ள சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது
3,7,11-இல் அல்லது 2,12-இல் கோட்சார குரு சஞ்சரிக்கும் காலத்தில்
திருமணம் நடைபெறும்.
பெண் ஜாதகம்
2, பெண்ணுடைய பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு 1,5,9-இல் அல்லது3,7,11-இல் அல்லது 2,12-இல் கோட்சார குரு சஞ்சரிக்கும் காலத்தில்
திருமணம் நடைபெறும்.


உறவில் திருமணமா அல்லது அன்னியத்தில் திருமணமா?


உறவில் திருமணம்


1, பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ஆம் பாவ அதிபதி 2,6,10-மற்றும்3,7,11-ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால்( சேர்க்கை அல்லது பார்வை )
உறவில் திருமணம் நடக்கும்.
2, 7-இல் புதன், சனி சுக்கிரன், ஆகிய கிரகங்கள் இணைந்து நிற்பது அல்லது
இம் மூன்றும் கிரகங்களும் 7-ஆம் வீட்டை பார்ப்பது அல்லது இம் மூன்று
கிரகங்களும 7-க்குடையனைப் பார்ப்பது உறவில் திருமணம் நடக்கும்.
3, 7-க்குடையவன் 2,6,10-அல்லது 3,7,11-ஆம் வீடுகளiல் தனித்து நின்று
1,5,9,4,8,12-க்குடையவர்களiன் தொடர்பு இல்லாமல் இருப்பது.
4, 7-க்குடையவன் 2,6,10,3,7,11-ஆம் வீடுகளiல் நின்று 2,6,10,3,7,11-ஆம்
வீட்டு அதிபதிகளுடன் மட்டும் தொடர்பு கொண்டு நிற்பது.
5, 7-ஆம் பாவத்தின் 2,6,10,3,10,11-க்குடையவர்கள் இணைந்து நிற்பது.
6, 7-ஆம் பாவத்திற்கு 1,5,9,4,8,12-க்குடையவர்களiன் தொடர்பு இல்லாமல்
இருப்பது.



அன்னியத்தில் திருமணம்


1, பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ஆம் பாவ அதிபதி 1,5,9-மற்றும்
4,8,12-ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால் ( சேர்க்கை அல்லது பார்வை
) அன்னியத்தில் திருமணம் நடக்கும்.
2, 7-இல் சூரியன், செவ்வாய், சந்திரன், குரு ஆகிய கிரகங்கள் இணைந்து
நிற்பது அன்னியத்தில் திருமணம் நடக்கும்.
3, 7-ஆம் பாவத்திற்கு 2,6,10,3,7,11-க்குடையவர்களiன் தொடர்பு இல்லாமல்
இருப்பது.
4, 7-க்குடையவன் 1,5,9,4,8,12-ஆம் பாவங்களiல் நின்று 2,6,10,3,7,11-ஆம்
அதிபதிகளுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது.
5, 7-க்குடையவன் 1,5,9,4,8,12-ஆம் பாவங்களiல் நின்று 1,5,9,4,8,12-ஆம்
வீட்டு அதிபதிகளுடன் மட்டும் தொடர்பு கொண்டு நிற்பது.
6, 1,5,9,4,8,12-க்குடையவர்கள் எல்லோரும் 1,5,9,4,8,12-பாவங்களiல் நிற்பது.
7, 1,5,9,4,8,12-ஆம் பாவாதிபதிகள் எல்லோரும் இணைந்து ஆம் பாவத்தில்
இருப்பது.


தாய் வழி திருமணம்
7-ஆம் பாவ அதிபதி 2,6,10-ஆம் பாவங்களுடன் தொடர்பு பெற்றால்
திருமணம் தாய் வழியில் நடக்கும்.
தந்தை வழி திருமணம்
7-ஆம் பாவ அதிபதி 3,7,11-ஆம் பாவங்களுடன் தொடர்பு பெற்றால்திருமணம் தந்தை வழி திருமணம் நடக்கும்.
அத்தை மகளை திருமணம் செய்பவர்
1, 7ஆம் பாவத்தில் 3-க்குடையவன் நின்றால் அத்தை மகள் மனைவியாக
அமைவாள்.
2, 7-ஆம் பாவத்தில் 11-க்குடையவன் நின்றாலும் அத்தை மகள் மனைவியாக
அமைவாள்.
தாய்மாமன் மகளை திருமணம் செய்பவர்
1, 7-ஆம் பாவத்தில் 6-க்குடையவன் நின்றால் தாய்மாமன் மகள் மனைவியாக
அமைவாள்.
2, 7-ஆம் பாவத்தில் 10-க்குடையவன் நின்றால் தாய்மாமன் மகள்
மனைவியாக அமைவாள்.
அக்கா மகளை திருமணம் செய்ப்பவர்
1, 7ஆம் பாவத்தில் 3-க்குடையவன் நின்றால் ஜாதகன் தன் மூத்த
சகோதரியின் மகளை மணப்பான்.
அக்காள் தங்கை இருவரையும் திருமணம் செய்பவர்
1, 7-ஆம் பாவத்தில் 5,7-க்குடையவர்கள் சேர்க்கைப் பெற்று நின்றால் ஜாதகன்
அக்காள் தங்கை இருவரையும் மணப்பான்.
2, 7-ஆம் பாவத்தில் 7,9-க்குடையவர்கள் சேர்க்கைப் பெற்று நின்றால் ஜாதகன்
தன் மனைவியின் தங்கையையும் மணப்பான்.
மனைவியின் தோழியை திருமணம் செய்பவர்
1, 7-க்குடையவன் 3,11-இல் நின்றால் ஜாதகன் தன் சகோதரியின் தோழியை
மணப்பான்.
அன்னிய ஜாதி அல்லது அன்னிய மதத்தை திருமணம் செய்பவர்
1, 7-இல் ராகு நின்றால் அன்னிய ஜாதி அல்லது அன்னிய மதத்தைச் சேர்ந்த
பெண்னை மணக்க நேரிடலாம்.
எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்பவர்
1, 7-க்குடையவனும் லக்னாதிபதியும் சம சப்தமாக நின்றால் ஜாதகதர் தன்
வீடடிற்கு எதிர் வீடடில் வசிக்கும் பெண்ணை மணக்கும் வாய்ப்பு உண்டு.
கணவன் / மனைவி அமைவது உள்ளுரிலா அல்லது வெளியூரிலா
உள்ளுரில் அமையும் கணவன் / மனைவி
1, 7-க்குடையவனும் லக்னாதிபதியும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் தாரம்
உள்ளூரிலேயே அமையும்.
2, 7-ஆம் பாவ அதிபதி நின்ற ஸ்திர ராசியானால் தாரம் உள்ளூரிலே அல்லது
தன் ஊருக்கு மிகவும் அருகிலுள்ள ஊரிலோ அமையும்.
வெளயூரில் அமையும் கணவன் மனைவி
7-ஆம் பாவ அதிபதி நின்ற ராசி சர ராசியானால் தாரம் வெளiயூரில் அதாவது
வெகு தொலைவில் உள்ள ஊரில் அமையும்.
கொஞ்சம் தொலைவில் அமையும் கணவன் மனைவி
1, 7-ஆம் பாவ அதிபதி நின்ற ராசி உபய ராசியானால் கொஞ்சம் தொலைவில்
உள்ள ஊரில் அமையும்.
இரண்டாம் தாரமாகச் செல்லும் பெண்கள் 
1, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
இருந்தால் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாஹுரத்தான ஆணை
திருமணம் செய்து கொள்ள நேரிடும்.
2, அவ்வாறு செய்த கொண்டால் அந்தப் பெண்ணைப் பொருத்தவரை ஒரே ஒரு
திருமணம் தான்.
3, அவளுடைய கணவனுக்குத்தான் இவள் இரண்டாம் தாரம் அவ்வாறு
அமையாமல் அவளுடைய கணவனுக்கு அவள் முதல் தாரமாக இருந்தால்
பிரிவினை ஏற்பட்டு இன்னொருவனை மணக்க நேரிடும்.
4, இதனால் அந்தப் பெண் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
5, பெண்கள் ஜாதகத்தில் 7-க்குடையவனுக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நின்றாலும் மேற்கண்ட பலன்கள் நடக்க வாய்ப்புண்டு.
மனைவி அவள் வீட்டிற்கு ஒரே பெண்ணா
ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த கிரகமும்
இல்லையென்றால் மனைவி அவள் வீட்டிற்கு ஒரே பெண்ணாக இருப்பாள்.
2, பெரும்பாலும் உடன் பிறந்தாவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
3, திருமணத்திற்குப் பின் ஜாதகருக்கு மனைவி வீட்டாருடன் எந்த வித
தொடர்பும் இருக்காது.
4, ஆண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த
கிரகமும் இல்லையென்றால் மனைவி அவள் வீட்டிற்கு ஒரே பெண்ணாக
இருப்பாள்.
5, திருமணத்திற்குப் பின் ஜாதகருக்கு வாழ்க்கைத் துணைவரின் வீட்டாருடன்
எந்த வித தொடர்பும் இருக்காது.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த கிரகமும்
இல்லையென்றால் கணவன் அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருப்பான்.
2, பெரும்பாலும் உடன் பிறந்தாவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
3
, திருமணத்திற்குப் பின் ஜாதகிக்கு கணவன் வீட்டாருடன் எந்த வித
தொடர்பும் இருக்காது.
4, பெண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த
கிரகமும் இல்லையென்றால் கணவன் அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக
இருப்பான்.
5, திருமணத்திற்குப் பின் ஜாதகருக்கு வாழ்க்கைத் துணைவரின் வீட்டாருடன்
எந்த வித தொடர்பும் இருக்காது.


கணவன் / மனைவி குடும்பம் சிறியதா பெரியதா என்பதை
கண்டறிதல்

ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம் இடங்களiல்
அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால் மனைவியின்
குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்
2, 4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.
3, ஆண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம்
இடங்களiல் அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால்
மனைவியின் குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.
4, 4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.


பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம் இடங்களiல்
அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால் மனைவியின்குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.
2, 4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.
3, பெண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம்
இடங்களiல் அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால்
மனைவியின் குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.
4,,4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.
கணவன் / மனைவியின் வீடு அமைந்த வீதியைக் கண்டறிதல்
ஆண் ஜாதகம்
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது ஏழுக்குடையவன் நின்ற ராசியைக்
கொண்டு மனைவியின் வீடு அமைந்திருக்கும் வீதியைபற்றி அறியலாம்.
பெண் ஜாதகம்
பெண் ஜாதகத்தில் செவ்வாய் அல்லது ஏழுக்குடையவன் நின்ற ராசியைக்
கொண்டு மனைவியின் வீடு அமைந்திருக்கும் வீதியைபற்றி அறியலாம்.
1, மேசம் - கிழ மேல் வீதி, வடக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
2, ரிசபம் - தென் வடல் வீதி, கிழக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
3, மிதுனம் - கிழ மேல் வீதி, தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
4, கடகம் - தென் வடல் வீதி, மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
5, சிம்மம் - கிழ மேல் வீதி, வடக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
6, கன்னி - தென் வடல் வீதி, கிழக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
7, துலாம் - கிழ மேல் வீதி, தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
8, விருச்சிகம் - தென் வடல் வீதி, மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
9, தனுசு - கிழ மேல் வீதி, வடக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
10, மகரம் - தென் வடல் வீதி, கிழக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
11, கும்பம் - கிழ மேல் வீதி, தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
12, மீனம் - தென் வடல் வீதி, மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு


கணவன் அல்லது மனைவியுடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையை
தோராயமாக கண்டறியும் முறை ஒன்றை பர்ப்போம்

ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் ராசிக் கடடத்தில் சுக்கிரனுடன் ஒரே ராசியில் சேர்க்கைப்
பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் மனைவியுடன்
பிறந்தவர்களாவர்.
2, ஆண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர்
மனைவியுடன் பிறந்தவர்கள் ஆவர்.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் செவ்வாய்யுடன் ஒரே ராசியில்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் கணவனுடன்
பிறந்தவர்களாவர்.
2, பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் கணவனுடன்
பிறந்தவர்கள் ஆவர்.
கணவன் / மனைவி அமையும் திசையை கண்டறிதல்
ஆண் ஜாதகம்
ஆண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சுக்கிரன் அல்லது ஏழுக்குடையவன் நின்ற
ராசியைக் கொண்டு மனைவி அமையும் திசையை அறியலாம்.
பெண் ஜாதகம்
பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் செவ்வாய் அல்லது ஏழுக்குடையவன்
நின்ற ராசியைக் கொண்டு மனைவி அமையும் திசையை அறியலாம்.
ராசி கணவன் / மனைவி அமையும் திசை
மேஷம்  கிழக்கு
ரிஷபம் கிழக்கு
மிதுனம் தென் கிழக்கு
கடகம் தெற்கு
சிம்மம் தெற்கு
கன்னி தென் மேற்கு
துலாம் மேற்கு
விருச்சிகம் மேற்கு
தனுசு வட மேற்கு
மகரம் வடக்கு
கும்பம் வடக்கு
மீனம் வட கிழக்கு
உங்கள் கணவன் மனைவியின் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்து
கொள்ளலாம்

ஆண் அல்லது பெண் ஜாதகங்களில்
1, 7-ஆம் வீட்டின் அதிபதியின் மூன்று நட்சத்திரங்கள்
2, 7-ஆம் வீட்டில் உள்ள கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
3, 7-ஆம் வீட்டை பார்த்த கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
4, 7-ஆம் வீட்டதிபதியுடன் இணைந்த கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
5, 7-ஆம் வீட்டை அதிபதியைப் பார்த்த கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
6, 7-ஆம் வீட்டு அதிபதி எந்த ராசியில் இருக்கின்றானோ அந்த ராசியின்
அதிபதியின் மூன்று நட்சத்திரங்கள்
7, இவர்களiல் ஏதாவது ஒரு கிரகத்தின் நட்சத்திரமே வரப்போகும் கணவன்
அல்லது மனைவியின் ஜென்ம நட்சத்திரமாக அமையும்.
கணவன் / மனைவிக்கு ஆயுள் பலத்தை கண்டறிதல்
ஆண் ஜாதகம்
1, ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல் ராகு
நின்றால் மனைவிக்கு ஆயுள் குறைவு.
2, ஆண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல்
ராகு நின்றால் மனைவிக்கு ஆயுள் குறைவு.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல் ராகு
நின்றால் கணவனுக்கு ஆயுள் குறைவு.
2, பெண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல்
ராகு நின்றால் கணவனுக்கு ஆயுள் குறைவு.
சேர்ந்து வாழ்ந்தால் ஏற்படும் மரணங்கள்
1, மேற்கண்ட தோசமுடைய ஜாதகர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரே
வீட்டில் தொடர்ந்து 6-வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்தால் விரைவில்
வாழ்க்கை துணைக்கு மரணம் ஏற்படும்.
2, அவ்வாறு இல்லாமல் இருவரும் ஒரே இடத்தில் வசிக்காமல் அவ்வப்பொழுது
சிறிது காலம் மட்டும் சேர்ந்து இருந்து விட்டு பிறகு தொழில், வியாபாரம்,
உத்தியோகம் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களiல் வசிக்க நேரிட்டால் வாழ்க்கைத்
துணையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படாது.
3, நீண்ட காலம் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
4, கணவன், மனைவி இருவரும் தொடர்ந்து இருவரும் தொடர்ந்து 6-
வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தால் துணைவருக்கு ஆயுள்
பங்கம் ஏற்படுவதைக் தடுக்க முடியாது. துணைவருக்கு திடீர் மரணம்
ஏற்படலாம்.
மனைவி  உத்யோகம் பார்ப்பவரா ஆண் ஜாதகத்தில் பார்க்கவும்
1, 4,8,10,11-அதிபதிகள் 4,8,10,11-இல் இருப்பது.
2, குரு சந்திரன் இணைந்து கேந்திரம் திரிகோணம் பெறுவது அல்லது 2-இல்
இருப்பது.
3, சுக்கிரன் சந்திரன் இணைந்து அல்லது சுக்கிரன் புதன் இணைந்து கேந்திர
திரிகோணம் பெறுமானால் மனைவி உத்தியோகம் பார்க்கும் நிலை.
4, செவ்வாய் 4,8,12-ம் வீட்டோடு தொடர்பு கொள்வது.
5, 7-ஆம் அதிபதி 2-ல் இருப்பது அல்லது 2-ஆம் இடத்தைப் பார்ப்பது
6, 4,11-ஆம் அதிபதிகள் ஆட்சி, உச்சம் பெறுவது
7, 7,10-ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது.
8, சுக்கிரன், சனி சம்பந்தம் அதாவது சேர்க்கை பார்வை பெறுவது உத்யோகம்
பார்க்கும் மனைவி அமையும்.
9, 7-க்குடையவன் 4,8,12-ஆம் இடங்களiல் நின்றால் உத்தியோக பார்க்கும்
பெண் மனைவியாக அமைவாள்.
10, 7-குடையவனோடு 4,8,12-க்குடையவர்கள் சேர்க்கைப் பெற்றாலும்
உத்யோகம் பார்க்கும் பெண் மனைவியாக அமைவாள்.
 

No comments:

Blogger Gadgets