தரித்திர யோகம் :
ஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூறுவது தான். யோகங்கள் என்பதும் தோசங்கள் என்பதும் ஒன்றுதான். ஒருவருக்கு ஏற்புடைய கருத்து மற்றவருக்கு மாற்றுக் கருத்தாக அமையலாம் அது அவர்களின் பார்வையே அன்றி, கருத்தின் குற்றமல்ல. அதே போலத்தான் ஜோதிடத்திலும் யோகங்களுக்கும் தோசங்களுக்கும் சமநிலை தான்.
தரித்திரம் என்றால் என்ன? இல்லாமை மற்றும் இயலாமை இந்த இரண்டும் இருக்கும் நிலை தான் தரித்திரம் என்பது. தன்னிடத்தில் எதுவும் இல்லை என்று நினைப்பவருக்கும் தன்னால் எதுவும் முடியாது என்று நினைப்பவருக்கும் இந்த யோகம் இருப்பதாக பொருள்.
திரிகோணம் எனப்படும் 5, 9ம் அதிபதிகள் பலமிலந்து மறைவு ஸ்தானமான 6,8,12ல் அமர்வது அல்லது பார்வை செய்வதுவும் இந்த யோகமாகும். நல்ல மனம் படைத்த ஒருவர், தீயவர்கள் மத்தியில் தீய வேலையைச் செய்ய நியமிக்கப்பட்டது போல. இந்த யோகம் அமையும் நிலைகளில் சிலவற்றை காணலாம்.
இலக்கினாதிபதி 12லும், 12ம் அதிபதி இலக்கினத்திலும் இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
ஐந்தாம் அதிபதி ஆறிலும், 9ம் அதிபதி 12லும் இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
இலக்கினத்தில் கேதுவும் இலக்கின அதிபதி 8ல்இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
இராசி மற்றும் நவாம்சத்தில் இலக்கினாதிபதி அசுபர்கள் பார்வைபெற்று 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
இதைப் போன்ற கிரக சூழ்நிலைகளில் பிறந்தவர்களுக்கு தரித்திர யோகநிலை உள்ளது என்று பொருள். இந்த யோக நிலை 2,7 அதிபதிகளை துணைக்கு கொண்டுவருகிறது. காரணம், 2, 7ம் மாரகம் ( தன்னால் அனுபவிக்க இயலாத நிலை).
இந்நிலை உள்ளவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றால், எதையும் ஏற்றுக்கொள்ளாத, திருப்திஅடையாத மனநிலையாக இருக்கும். சாப்பிடும் போது கூட ஐயோ வயிறு நிரம்பிவிட்டதே என்றுதான் கவலைப் படுவார்கள். இதற்கு பணம் பதவி என்ற நிலை இல்லை. நம்முடைய மனம் தான் இந்த நிலைக்கு காரணம். எவ்வளவு இருந்தாலும், தானும் அனுபவிக்காது அடுத்தவர்களுக்கும் கொடுக்காத நிலையும் தரித்திர யோக நிலைதான். இவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொன்று, நல்ல மனம் இருக்கும், கொடுக்க பணம் இருக்காது. நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாது. எவ்வளவு சேர்த்தாலும் நோய், கடன், இவற்றிற்கு செலவு செய்துவிடுவார்கள். அப்படி பட்டவர்கள் தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே வரவேண்டும். அப்படிச் செய்தால் பல்வேறு சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்று திருப்திகரமாக அமைந்து விடும்.
இந்த யோகம் இருப்பவர்கள் கையில் பணம் இருந்தால் அது வீணாக செலவாகிவிடும். அதனால் பெற்றோர் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் பெயரில் சேமித்துவிடவும். அப்படித் தவறும் பட்சத்தில் நம்முடைய பணம் நம்மையறியாமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கரைந்துவிடும் அதற்கு பதில் நாமே அதைமுறைப்படுத்தி வைத்துக்கொள்வது நலம்.
அனைத்து யோகங்களும் அதன் திசா புத்தி அந்தர காலங்களில் தான் செயல்பாட்டிற்கு வரும் அந்த காலங்களைக் கணித்து அந்த கால கட்டங்களில் நாம் இல்லாதவர்களாக இருந்தால் எப்படி உணர்வோமோ அதே உணர்வை அனுபவிக்க வேண்டும். உண்ணா நோம்பு பசியை உணர. சாதரணமான வாழ்க்கையை உணர காவி உடுத்தி யாத்திரை போதல், நோயுற்றவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் மற்றும் உதவி செய்தல் நோயின் வலியினை உணர. இப்படி நாம் செய்யும் செயல்கள் மூலம் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டால் அது விதியை அனுபவித்ததற்கு சமமாகவும் அதே சமயம் நாம் விருப்பப்பட்டு அனுபவித்த திருப்தியாகவும் அமையும்.

No comments:
Post a Comment