Wednesday, February 12, 2014

சனி பகவானால் -நாட்டுக்குத் தலைவராகும் வாய்ப்பு:

(மைபோன்று கறுத்தவன். சூரியனின் குமாரன் யமனின் தமயன் சூரியனுக்கும் சாயர் தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்லும் அந்தச் சனியை பணிகிறேன்.


நீண்ட கால வாழ்வுக்கு, மரணத்திற்கும் காரகன் சனி.


வறுமை, கலக்கம், நோய், அவமரியாதை இவற்றைஎல்லாம் ஒருவர் அடைவதற்கு இந்த சனியின் சுப பலமற்ற நிலைதான் காரணமாக முடியும்.


சனி பலம் பெற்ற சாதகர் சர்வசக்த்களையும் பெற வாய்ப்புண்டு. உடைப்பவர்களையும் சுயநலமற்ற தியாகிகளையும். மாபெரும் தேசத் தொண்டர்களையும், சமூக நல ஊழியார்களையும் உருவாக்கும் ஆற்றல் சனிக்கு உண்டு.




மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் பொருட்களை வெளிக்கொண்டு தகுதியையும், அந்தத் துறையில் அறிவையும் அளிப்பவன் சனி.


ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி, இருந்தால் அந்த ஜாதகர் ஒரு நாட்டுக்குத் தலைவராக வாய்ப்புண்டு.


ஒரு நகரத்திர்காவது தலைமை தாங்கும் தகுதி உண்டாகும்.


பலம் பெற்ற சனி ஒருவருக்கு உலகியல் அறிவை வழங்குவான். வெளிநாட்டு மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகச் செய்வான். விஞ்ஞானத்தில் தேர்ச்சி உண்டாக்குவான் நீண்டகாலம் வாழ வைப்பான்.


இரும்புக்குக் காரகன் சனி, எண்ணெய்க்கும் பொருப்பேற்பான் கறுப்புத் தானியங்களின் பிரதிநிதி, கருமை நிறத்திற்கே உரிமையுடையவன்.


இயந்திரங்களை ஈடுபடுத்துவான். பெரிய இயந்திரச் சாலைகள் இயக்குவோரின் ஜாதகங்களில் இந்தச் சனியின் பலன் நிறைந்திருக்கவே செய்யும். சந்தேகமில்லை.


கிரகங்களில் சேவகன் இவன். உடலில் நரம்பு இவன். கொடிய மனத்தோன், கல் நெஞ்சன் என்றெல்லாம் கூறப்படுவான். ஆனால் ஜாதகத்தில் உச்சமாகவோ ஆட்சியாகவோஇருந்து சுபகிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று சுப ஆதிபத்தியம் அடைந்து சுப வீடுகளில் இருந்தால் ஆப்படிப்பட்ட ஜாதகர்களை இமாலய உச்சி என்பார்களே. அந்த அளவுக்கு உயர்த்தி விடுவான் சனி.


வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் வாதம் இவன், தாம்ச குணத்தோன், நீலக்கல்லுக்கு உரியவன். காடு மலைகளுக்கு உரியோன். கீழ்நிளையோர் தங்கும் இடங்களைத் தனது இடமாக கே கொண்டிருப்பவன்.


ஆண்-பெண்-அலி என்ற பிரிவில் அழியானவன் இவன். அந்த அளியிலும் ஆண் அலி இவன். ஊழியர்களைப் பிரதிபலிப்போன். பஞ்சபூதங்களில் காற்று இவன். மேற்குத் தசைக்கு உரியோன். பாபகிரக வரிசையில் முக்கியத்துவம் உள்ள ஒருவன். நால்வகை உபாயங்களில் பேத உபாயத்திற்கு உரியவன்.


துலாம் உச்சவீடு, மகரம்-கும்பம் சொந்த வெட்டுகள், பூசம் அனுஷம், உத்திரட்டாதி என்று நட்சத்திரங்களுக்கு நாயகனாவான்.


புதன், சுக்கிரன், இருவரும் சனிக்கு நண்பர்கள், செவ்வாய், சூரியன், சந்திரன், மூவரும் பகைவர்கள்.


காசிக்கு சென்று லிங்கபூஜை செய்து இறை வரத்தால் கிரக வரிசையில் ஒருவனானான் இவன்.


ஒற்றைக்கால் சிருத்தவன் அதனால் மந்தநடை நடப்பான். இதனாலேயே மந்தன் என்ப் பெயர் பெற்றான்.


ஆகமனங்கள் இவனைப் பற்றிய தகவல்களைத் தருகின்ற.


காகம் ஏறும தம்பிரான் என்று தோத்திரபாடலில் அழைக்கப்படுகிறான்.


கார், முடவன் என்றவாறு பல பெயர்கள் உண்டு இவனுக்கு.


தீக்ஷிதர், திவாகர தநுஜம் சனைச்ச்சரம் என்று ஆரம்பித்துப் பாடும் கீர்த்தனையில் காலனின் கைத்தண்டாத்தால் அடிபட்டு கால முடம் ஆனவன் இவன் என்றும், மிகவும் துநிவுடையோன் என்றும், சிவபெருமானின் அருள் பெற்றாருக்கு எல்லா நலன்களையும் வழங்குவான் என்றும், கருணைக்கடல் என்றும், வேண்டி வருவோர்க்குத் தன்னருள் புரிவோன் என்றும் கூறுகிறார்.


பலவிதக் கொடுமைகளுக்கும் காரனபூதனாக சனியை வழிபட்டுப் போற்றினால் நிவாரணம் உண்டாகத் தடையில்லை. மேலும் சனி பகவான் என்று வருணிக்கப்படும் இந்த கிரகத்தை இடைவிடாமல் தியானம் செய்வோருக்கு நிச்சயமாக நலன்கள் உண்டாகும் அருளை வேண்டி பிராத்தனை செய்வோம்.


சூரியனார் கோவிலில் உள்ள சண் (மூவலர்) அதிதேவதை யமன், பிரத்யாதி தேவதை, பிரஜாபதி வாகனம், காகம், ராசிகள் மகரம், கும்பம்

No comments:

Blogger Gadgets