Wednesday, February 19, 2014

வக்ர கிரகம் வாழ்வு தருமா:

நவகிரகங்கள் சில நேரங்களில் பின்னோக்கிச் செல்கின்றன. அதில் குறிப்பாக சூரியன், சந்திரன் வக்ரம் பெறுவதில்லை. ராகு, கேது எப்பொழுதுமே பின்னோக்கிதான் செல்வார்கள். குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் வக்ரம் பெறுகின்றன. அதில் குறிப்பாக சூரியனை ஒட்டியே செல்லும் கிரகமான புதன் சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை விட அதிகமாகச் சென்று விட்டால் வக்ரம் பெற்று சூரியனை நெருங்கும்போது வக்ர நிவர்த்தி அடைகின்றது. அது போல சூரியனுக்கு 9ம் வீட்டில் குரு செவ்வாய் சனி வருகின்ற போது வக்ரம் பெற்று, சூரியன் குரு செவ்வாய் சனிக்கு 9ம் வீட்டிற்கு வருகின்ற போது வக்ர நிவர்த்தியடைகிறது

குறிப்பாக ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் என்ன பலனை உண்டாக்குகிறது என ஆராய்கின்ற போது பல்வேறு உண்மைகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனை தருகிறது. அதுபோல நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனுக்கு பதில் நற்பலனை ஏற்படுத்துகிறது. சரி, மற்ற ஸ்தானங்களில் இருக்கும்போது என்ன பலா பலன்களை ஏற்படுத்துகிறது என்று பார்க்கின்ற போது சொந்த வீட்டில் ஆட்சி பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் ஒரு கிரகம் பலஹீனமடைந்தால் என்ன பலனை தருமோ, அதாவது நீசம் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனை வழங்குகிறது.
ஆட்சி உச்ச ஸ்தானத்தை தவிர மற்ற ஸ்தானங்களில் வக்ரம் பெறுகின்ற கிரகங்கள் பலமாக இருந்தால்என்ன பலனை தருமோ அதுபோல நற்பலனை உண்டாக்கும். அதுவும் நட்பு வீட்டில் அமையப் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலனை தரும். அதற்கு சமமான நற்பலனை உண்டாக்கும். பொதுவாக கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று அமையப் பெற்றால் அக்கிரகங்கள் சொந்த வீட்டில் அமையப் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனைத் தரும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் மேஷத்தில் குருவும், தனுசில் செவ்வாயும் அமையப் பெற்றால் குரு செவ்வாய் பரிவர்த்தனை ஆகும். அப்படி அமையப் பெற்றால் மேஷத்தில் செவ்வாயும் தனுசில் குருவும் ஆட்சி பெற்றால் என்ன பலனை தருமோ அப்படிப்பட்ட பலனை தான் உண்டாக்கும். இதனை இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் என் அனுபவத்தில் பார்க்கின்ற போது பரிவர்த்தனை பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நற்பலனை தருவதில்லை. 

No comments:

Blogger Gadgets