தன்னம்பிக்கை கதை
சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று.. வறுமையுடன் போராடி.. 'வாட்ஸ் ஆப்' நிறுவனரின் திரில் கதை!
சான் பிரான்சிஸ்கோ: உக்ரைனிலிருந்து ஒன்றுமே இல்லாமல் வெறும் கையுடன் அமெரிக்காவுக்கு வந்து, தனது நண்பர் பிரையன் ஆக்டனுடன் இணைந்து வாட்ஸ் ஆப்பை உருவாக்கி இன்று பேஸ் புக்கிடம் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடிக்கு விறறு உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம்-மின் கதை மிக உருக்கமானது.. காரணம், ஒரு காலத்தில் அவர் சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆவார். உக்ரைனிலிருந்து வாழும் வழி தேடி அமெரிக்காவுக்கு வந்தவர்தான் ஜசன் கோம். மிக மிக வறுமையான வாழ்க்கையை சிறு வயதில் வாழ்ந்தவர். தனது தாயாருடன் சாப்பாட்டுக்கான டோக்கனை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர் இவர். ஆனால் இன்று இவர் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவருடன், பிரையன் ஆக்டனும் சேர்ந்து இன்று உலகத்தின் முகத்தையே திருப்பிப் போட்டவர்கள் என்பது சாதனைக்குரிய செய்தியாகும்.
பேஸ்புக் இயக்குநராக உயர்வு தனது வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பிரையனுடன் இணைந்து பேஸ்புக்குக்கு விற்றுள்ள கோம், பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக இணைகிறார்.
தாயுடன் தவித்த இடத்தில் வைத்துக் கையெழுத்து பேஸ்புக்குடன் தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துக் கையெழுத்துப் போட்டுள்ளார் கோம். அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
38 வயதுதான் கோமுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் 38 வயதே பிறக்கிறது. இவ்வளவு சிறு வயதில் இவர் உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
யூதர் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே தான் இவரது வீடு இருந்தது. கோம், யூத இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறு வயதிலேயே தனது தாயாருடன் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது 16தான். சோவியத் யூனியன் உடைந்த பின்னர் இந்த இடமாற்றம் நடந்தது.
தந்தை வரவில்லை ஆனால் கோமும், அவரது தாயாரும் மட்டுமே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். கோமின் தந்தை வரவில்லை.
சில பேனாக்கள்.. நோட்டுப் புத்தகங்கள் உக்ரைனிலிருந்து வரும்போது கோமின் தாயார், தனது மகன் பயன்படுத்திய சில பேனாக்கள், நோட்டுப் புத்தகங்களையும் கூடவே கொண்டு வந்திருந்தார். கலிபோர்னியாவில் தனது மகனைப் பள்ளிக்குச் சேர்த்தபோது புதிய பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாததால் இவற்றையேப் பயன்படுத்திக் கொண்டாராம் கோம்.
பலசரக்குக் கடையில் தரை துடைக்கும் வேலை படிக்கும்போதே, பலசரக்குக் கடை ஒன்றில் தரையைத் துடைக்கும் வேலையில் ஈடுபட்டு சம்பாதித்தார் கோம்.
பழைய புத்தகக் கடையில் கம்ப்யூட்டர் அறிவு பழைய புத்தகக் கடை ஒன்றை அணுகி அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பாராம் கோம். படித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவாராம். இப்படித்தான் நெட்வொர்க்கிங் குறித்து படித்துத் தேறியுள்ளார்.
1997ல் பிரையனுடன் சந்திப்பு 1997ம் ஆண்டு சிலிக்கான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்புக்காக சேர்ந்தார். மேலும் படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.
ஒரே வருடத்தில் நெருங்கிய நட்பு இருவரும் ஒரே வருடத்தில் மிகச் சிறந்த , நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். யாஹு நிறுவனத்திலேயே என்ஜீனியராக வேலையில் சேர்ந்தார் கோம்.
படிப்பை விட்டார்... யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் படிப்பை விட்டு விட்டார் கோம். இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோமின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது கோமுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து உதவியர் ஆக்டன்தான்.
டாட் காம் பூமில் சிக்கி பணத்தை இழந்த ஆக்டன் இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி டாட் காம் பூம் ஆக்டனுக்கு பெரும் பொருள் சேதத்தைக் கொடுத்தது. பலலட்சத்தை அவர் இழந்தார்.
யாஹுவிலிருந்து விலகல் 2007ம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர். ஒரு வருடம் ஜாலியாக ஊர் சுற்றிப் பார்த்தனர். அதன் பின்னர்தான் இருவரும் இணைந்து வாட்ஸ் ஆப் புரட்சிக்கு வித்திட்டனர்.. இன்று உலக இளைய தலைமுறையின் தகவல் தெய்வமாக மாறி நிற்கின்றனர்.
நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்? ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாட்ஸ்ஆப்பை வாங்குகிறது என்ற செய்தி தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து வாங்கும் அளவுக்கு வாட்ஸ்ஆப்பில் என்ன உள்ளது என்று பலரும் வியக்கின்றனர். ஃபேஸ்புக்கை கவர்ந்த வாட்ஸ்ஆப் என்றால் என்ன என்று பார்ப்போம்.
வாட்ஸ்ஆப் வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை நண்பர்களுக்கு, நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்ஆப். இது இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது.
மக்கள் வாட்ஸ்ஆப்பை மாதத்திற்கு 450 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதாவது ட்விட்டரை விட 200 மில்லியன் பேர் கூடுதலாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள். மேலும் தினமும் 10 லட்சம் பேர் புதிதாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.
அசுர வளர்ச்சி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இது தான் ஃபேஸ்புக்கின் கவனத்தை வாட்ஸ்ஆப் பக்கம் ஈர்த்தது.
கட்டணமே இல்லை வாட்ஸ்ஆப் மூலம் மாநிலம் விட்டு மாநிலம், ஏன் நாடு விட்டு நாடு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் கட்டணம் இல்லாமல். இது தான் இளம் தலைமுறையினரை வாட்ஸ்ஆப் பக்கம் இழுத்துள்ளது.
டவுன்லோட் செல்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களின் செல்போன் எண்ணை டைப் செய்து, மெசேஜ் மூலம் வரும் கோடை பயன்படுத்தி சரிபார்த்தால் அதை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment