திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இந்த பொருத்தங்களும் இருக்க வேண்டும் :
1) கணவரின் சுக்கிரன் அல்லது சந்திரன் மனைவியின் சூரியனுக்கு 1-5-9- ஆக அமைவது .
2) கணவரின் சுக்கிரன் அல்லது சந்திரன் மனைவியின் சூரியனுக்கு ஒரே ராசியாக அமைவது அல்லது ஒரே திரேக்காணமாக அமைவது .
3) கணவரின் சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றாக அமைந்தாலும் 30 பாகைக்குள் இருப்பதும் நலமாகும் .
4) கணவரின் சூரியன் அல்லது சுக்கிரன் மனைவியின் குருவுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் .
5) மனைவியின் 7-ஆம் இடம் கணவரின் குரு அல்லது சுக்கிரன் இருக்கும் வீடாக அமைவது சிறப்புடையது .
6) கணவரின் சுக்கிரன் மனைவியின் செவ்வாயைப் பார்ப்பதும், மனைவியின் செவ்வாய் கணவரின் சுக்கிரனை பார்ப்பதும் சிறந்த அமைப்பாகும் .
7) கணவரின் சந்திரன் அல்லது சுக்கிரன் மனைவியின் ராகு அல்லது சனி இருக்கும் வீடானால் இருவருக்கும் மன ஒற்றுமை இருக்காது .
8) மனைவியின் 7-ஆம் வீடும் கணவரின் செவ்வாயும் ஒரே வீடானால் என்றுமே பிரச்சினைதான் .
9) பெண்ணின் ஜாதகத்தில் 2-8-இல் ராகு ,கேது பாவிகள் இருக்ககூடாது. அப்படி இருந்து 9-ஆம் பாவம் ,அதன் அதிபதி பலம் பெற்றால் மகிழச்சியான திருமண வாழ்க்கை அமையும் .
No comments:
Post a Comment