Sunday, February 23, 2014

கல்யாணமும் பிரச்சினையும் .. இத படிங்க முதல்ல 



எத்தனையோ போராட்டங்ககளுக்கு மத்தியில் காதலித்து  கல்யாணம் வரைக்கும் அந்த அந்த காதலை கொண்டுசெல்வது என்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. அப்படி உயிருக்கு உயிராய் ஐந்து வருடம் காதலித்து பெற்றோரின் வற்புருத்தத்தினால் வேறு வழியில்லாமல் கிராமத்துப்  பெண்ணை கல்யணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வாழும் நம்ம ஆளை பற்றிய கதை தான் இது .


மனதிற்குப்  பிடிக்காத பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு தனக்கு பிடிக்க வில்லை என்றாலும் சந்தோசமாக வாழலாம் என்றிருந்த நம்ம ஆளுக்கு தினம் தினம் அதிர்ச்சிகள் தான் தொட்டதற்கெல்லாம் சண்டை போடும் அவளின் செயல்களினால் மனமுடைந்து அண்ணன் அமெரிக்க டாஸ்க்மாக் பக்கம் நடையை கட்டினார் . அங்கே தனக்கு உதவியாக கல்யாணத்தினால் நொந்தவர்கள் சங்கத்தின் அமெரிக்க கிளை உறுப்பினரின் பழக்கமும்கிடைத்தது .
ஒவ்வொரு கட்டிங் குடித்துகொண்டே தனது சோகங்களை சொல்ல ஆரம்பித்தார் நம்மாளு .

நண்பா... எங்க ஊரை பொறுத்தவரையில் நம்ம காதலிக்கும் பெண்ணையே கல்யணம் பண்ணிக்க முடியாது ,ஐந்துவருடம் ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலித்துவிட்டு பெற்றோரின் வற்புருத்தத்தினால் எங்கோ ஒரு கிராமத்து ப் பெண்ணை கல்யணம் செய்யவேண்டியதாக போச்சி கல்யணம் வரைக்கும் அவளின் முகத்தினை கூட நான் கண்டதில்லை, இப்போ நான் இங்கே கிடந்தது தவிக்கின்றேன். எதற்கெடுத்தாலும் சண்ட போடறா மச்சி என கதறி அழ நம்ம அமெரிக்கா நண்பர் நம்மாளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே தம்பி என் கதையை கொஞ்சம் கேளு என தனது பிளாஷ் பேக்கினை அவிழ்த்து விடுகின்றார்.

"தம்பி எங்க ஊரை பொறுத்த வரையில் நாம யார காதலிக்கிறோமோ அவங்களையே கல்யாணம் செஞ்சிக்கலாம் நானும் அப்படிதான் மூன்று வருடம் காதலித்து ஒரு விதவைப்  பெண்ணை கல்யணம் செய்துகிட்டேன் , அப்போ தான் என் வாழ்க்கையில் சுனாமி அலை வீசியது .....

கல்யாணம் பண்ணி மூன்று மாதம் நல்ல தான் போய்கிட்டு இருந்தது ,அந்த நேரத்தில் தான் என் மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த பெண்ணை என் தந்தை திருமணம் செய்துகொண்டார் ,என் மனைவியின் பிள்ளை எனக்கும் பிள்ளை இப்போ என் தந்தை எனக்கு மருமகன் அவருக்கு நான் மாமா !!!! என சொல்ல நம்ம ஆளு மிரண்டே போய்விட்டார் தம்பி இதுக்கே இப்பிடின்னா இன்னும் இருக்கு கேளு என வெள்ளகார நண்பர் தொடர்ந்தார் ...

என் தந்தையின் மனைவியான என் பிள்ளை இப்போ எனக்கு அம்மா ,அவளின் அம்மாவான என் மனைவி இப்போ எனக்கு பாட்டி ,போன மாதம் எனக்கு ஒரு மகன் பிறந்தான் அவன் என் தந்தைக்கு தம்பி முறை அப்போ என்மகன் எனக்கு மாமா முறை!!!!! ,இதெல்லாம் ஒகே நண்பா நேற்று என் தந்தைக்கு ஒரு குழந்தை பிறந்தது அந்த குழந்தை எனக்கு தம்பி என் மனைவியின் குழந்தைக்கு பிறந்த குழந்தை என்பதால் எனக்கு பேரன், நான் இப்போ தாத்தாவும் ஆயிட்டேன் பேரனும் ஆயிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்போ சொல்லு நண்பா  உன் பிரச்சினை பெரிசா என் பிரச்சினை பெரிசா

நம்ம ஆளு "என்ன கொடும சரவணா?"


No comments:

Blogger Gadgets