Thursday, March 27, 2014

திருமண வாழ்வு


திருமண வாழ்வு மங்களகரமாக அமைய ஜோதிடம் என்ற காலக் கண்ணாடி மூலம் திருமண பொருத்தம் பார்க்கும் போது எதிர் கால வாழ்வு மங்களகரமாக அமைகிறது. ஜோதிடம் என்ற அரிய கலை கொண்டு ஆண் பெண் ஜாதகத்தை ஆராயும் போது பல்வேறு உண்மைகள் வெளிப்படுகின்றன. பொதுவாக ஆண் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் வரும் வரன் (பெண்) ஜாதகத்திலும் தோஷம் இருப்பது போல் இருந்தால் மண வாழ்வு சிறப்பாக இருக்கும்.

     பொதுவாக ஜென்ம லக்கினத்திற்கு 7ம் பாவம் கொண்டு திருமண வாழ்வு பற்றியும், 2ம் பாவத்தைக் கொண்டு குடும்ப வாழ்வு பற்றியும். 4ம் பாவத்தைக் கொண்டு சுக வாழ்வு பற்றியும், 8ம் பாவத்தைக் கொண்டு ஆயுள் ஆரோக்கியம், பெண்களுக்கு மாங்கல்ய பலத்தைப் பற்றியும் 12ம் பாவத்தைக் கொண்டு கட்டில் சுக வாழ்வு பற்றியும் அறியலாம்.

     நவ கிரகங்களில் ஆண்களுக்கு சுக்கிரன் களத்திர காரகனாகவும், பெண்களுக்கு செவ்வாய் களத்திர காரகனாகவும் விளங்குகிறார்கள்.

     பொதுவாக ஆண் பெண் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர காரகன், சுக்கிரன் செவ்வாயும் 7ம் அதிபதியும் சுபர் சேர்க்கை பெற்றால் மண வாழ்வு சிறப்பாக இருக்கும். பாவிகள் 7ல் அமையப் பெற்றாலும், பாவிகள் 7ம் அதிபதி சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் சோதனைகள் உண்டாகும்.

     ஜென்ம லக்கினத்திற்கு 7ல் பாவிகள் அமையப் பெற்றாலும் 7ம் வீட்டை பாவிகள் பார்வை செய்தால் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது. திருமண விஷயத்திற்காக ஒரு ஜாதகரை ஆராயும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். 

     பொதுவாக ஜென்ம லக்னத்தில் பகை கிரகங்கள் அமையப் பெற்றால் மற்றும் ஜென்ம லக்கினத்தில் கிரக யுத்தத்துடன் கிரகங்கள் அமைய பெற்றால் மண வாழ்வில் சோதனைகள் உண்டாகும். உதாரணமாக, செவ்வாய் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம லக்னத்தில் பகை கிரகமான சனி அமைவது, சூரியன் லக்னமான சிம்மத்தில் சனி அமைவது நல்லது அல்ல. அது போல சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரி அல்லது 2 டிகிரிக்குள் 7ம் அதிபதியோ களத்திர காரகனோ அமைவது நல்லது அல்ல. அது போல பகை கிரகங்கள் இணைந்து ஜென்ம லக்கினத்தில் அமைவது நல்லது அல்ல. அதாவது ராகு&சனி, ராகு&செவ்வாய்,சனி&சூரியன், சனி&சூரியன்&ராகு, சுக்கிரன்&குரு, சுக்கிரன்&செவ்வாய், சுக்கிரன்&ராகு என பகை கிரகங்கள் இணைந்து அமைவது. 7ம் அதிபதி, களத்திர காரகன் போன்றவை நீசம் பெற்று பாவிகள் சேர்க்கை பெற்று ஜென்ம லக்கினத்தில் அமைவது நல்லது அல்ல.

     ஜென்ம லக்னத்தில் செவ்வாய் சனி இணைந்து 7ம் வீட்டைப் பார்த்தாலும், 6,8ல் சனி செவ்வாய் அமைந்தாலும் மண வாழ்வு நன்றாக இருக்காது.

     பொதுவாக ஜென்ம லக்னாதிபதியும் 7ம் அதிபதியும் நட்பு கிரகமாக இருப்பது நல்லது. அது மட்டும் இன்றி 1,7க்கு அதிபதிகள் சேர்க்கை பெறுவது, சுபர் பார்வை பெறுவது மிகவும் உத்தமம். அதுவே 1,7க்கு அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் சஷ்டாஷமத்தில் அமைவது நல்லது அல்ல. அதாவது  ஒருவருக்கு ஒருவர் 6, 8,ல் அமைந்தால் மண வாழ்வில் ஒற்றுமை குறையும். 7ம் அதிபதிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதிகள் குறையும். 

     சனி பகவான் சந்திரன் சேர்க்கை பெற்றாலும் சந்திரனுக்கு 7ல் சனி அமையப் பெற்றாலும் மண வாழ்வில் சோதனைகள் உண்டாகும். குறிப்பாக சனி லக்னமான மகரம் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி சந்திரன் சேர்க்கை பெற்றாலும் அதிகமாக கெடுதி ஏற்படுத்தாது.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் அதிபதி 6ல் அமைந்து பலம் இழந்து இருந்தால் அதாவது 6ல் அமைந்து நீசம் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ இருந்தால் திருமண வாழ்வு என்பது மிகவும் போராட்டம் நிறைந்த ஒன்றாகி மாறி விடும்.களத்திர காரகன் சுக்கிரன் 7ம் அதிபதிக்கு 6, 8ல் அமைந்தால் மண வாழ்வில் சங்கடங்கள் உண்டாகும்.
     
ஜெனன ஜாதகத்தில் சனி ராகு மிக அருகில் இணைந்து ஜென்ம லக்கினம் 6, 7, 8ல் அமைதி அமைந்தால் ஜாதகரை தவறான வழி பாதைக்கு கொண்டு செல்லும். குறிப்பாக வேறு பெண் சேர்க்கை, ஆரோக்கியம் பாதிப்புகள் ஏற்படும். சனி & ராகு திசை, புத்திகள் நடைபெற்றால் ஜாதகரின் நடவடிக்கைகள் நன்றாக இருக்காது. அது போல் சனி ராகு 7ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும், சுக்கிரன் சேர்க்கை பெற்று சுபர் பார்வை இல்லாமல் இருந்தாலும் கெட்ட பலன்கள் உண்டாகும்.
     
ஜென்ம லக்கினத்திற்கு 5ல் ராகு அமையப் பெற்று ராகுவுக்கு (6,8ல்) சஷ்டர்ஷகத்தில் 7ம் அதிபதி அமைய பெற்றால் திருமண வாழ்வு சோதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

ஒரு பெண் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சந்திரன் சுக்கிரன் அமைய பெற்றால்  திருமணமாண ஓருவரை மணமுடிக்க நேரிடும்.
     
ஜென்ம லக்கினத்திற்கு 7ல் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாவிகள் அமையப் பெற்றால் மண வாழ்வு சோதனை நிறைந்ததாக இருக்கும்.

No comments:

Blogger Gadgets