Sunday, March 2, 2014


தொட்டது துலங்க வைக்கும் ஜாதக அமைப்பு :


      ஒருவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், கெடாது நல்ல இடங்களில் இருக்க அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது அல்லது ஜீவனஸ்தானத்திற்க்கு சுபர் பார்வை, சுபர் சம்பந்தம் இருக்குமானால் ஜாதகர் தொட்டது துலங்கும். அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் நல்ல லாபம் பெறுவார். இவருக்கும் நிறைய ஊதியம் கொடுத்து மகிழ்விப்பார். ஜாதகர் சுயதொழில் செய்தாலும் உயர்வடைவார்.
     ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். ஜாதகர் திறமைசாலியாக இருந்தாலும் பெரிதாக ஏதும் சோபிக்க முடியாது. அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் சுமாரான‌ லாபம் பெறுவார். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் சுமாரான ஊதியம் பெறுவார். ஒரு இடத்தில் வேலை செய்யும் போது இவர் ப‌த்தோடு பதினொன்றாக இருப்பர். இவருக்கு மற்றவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் போது இவருக்கும் கிடைக்கும். வாழ்வு இவர் அதிர்ஷ்டக்கட்டை என்று நொந்து கொள்ளக்கூடிய விதமாகத் தான் இருக்கும்.
     ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை கொடியவர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் கொடியவருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். இவர்கள் எந்த இடத்திலும் வேலைக்கு ஒழுங்காக இருக்கமாட்டார். இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிக்கு நஷ்டம் தான் வரும். இவர்களை முதலாளி வேலையை விட்டு நீக்கி விடுவர் அல்லது ஊதியம் போதவில்லை என்று இவர்களாகவே வேலையை விட்டு நின்று விடுவர்.
இந்த மாதிரி அமைப்புடையவர்கள் நீச்சத்தொழில்கள் எனப்படுகிற பொருட்களை அழிக்கும் தொழிலை காண்ட்ராக்ட் எடுத்து செய்தால் சோபிக்கலாம்
நீச தொழில்கள்:
1. பழைய கட்டிடங்களை இடிப்பது
2. பழைய பாலங்களை இடிப்பது,
3. பாழடைந்து கிடக்கும் தோட்டம், துறவு இவைகளை சுத்தம் செய்யும் தொழில்
4. மருத்துவமனைக் கழிவுகளை அகற்றுவது போன்றவை.
      இவர்கள் இதைக் க‌ருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் சோபிக்கலாம்.

No comments:

Blogger Gadgets