ஜாதகமும் காதல் திருமணமும்
காதல் திருமணம் என்பது பையன் மற்றும் பெண் இவர்கள் செய்துகொள்ளும் arranged marriage ஆகும். இது சாஸ்திர சம்பிரதாயங்களை புறக்கணித்து, வழக்கங்களுக்கு மாறான செயலாகும். ஜாதகத்தில் 5 ஆம் வீடு சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்க்களை குறிக்கும். மேலும் மத சம்பிரதாயங்களை 9 ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும். இவ்வாறு சம்பிரதாயங்களை புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும். காதல் உணர்வுகளை தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்த வலிமையான கிரகம் ராகு. ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை/சேர்க்கை மூலம் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம்.
ஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன. 5,7 மற்றும் 9 ஆம் அதிபதிகள் conjunction/trine/sextile முறையில் 5,7,9,10 அல்லது 11 ஆம் வீடுகளில் அமையும். காதல் திருமணத்திற்கு எளிய சூத்திரம். 5ஆம் அதிபன் + 7 ஆம் அதிபன் அல்லது 7 ஆம் அதிபன்+ 9ஆம் அதிபன் அல்லது 5 ஆம் அதிபன்+9ஆம் அதிபன். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின் அமைப்பை பொறுத்தது.
வெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்:
- ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12 ஆம் வீட்டிலும்.
- 9ஆம் வீட்டில் அசுப கிரகம்
- ஆண் மற்றும் பெண்னின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளை பரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும்.
No comments:
Post a Comment