Thursday, March 27, 2014

ஜோதிடச் சொல் விளக்கம் :


வர்க்கோத்தமம் :
                                     ராசியிலும் நவாம்சத்திலும் ஒரு கிரஹம் ஒரே ராசியில் காணப்படுவது .அப்படிப்பட்ட கிரஹம் பலமுள்ள கிரஹமாகும் .


அஸ்தங்கதம் :
                               சூரியனுடன் பத்து பாகைகளுக்குள் சேர்க்கையாக உள்ள கிரகங்கள் சூரியனால் எரிக்கப்படும் .அத்தகைய கிரகங்கள் அஸ்தங்கதம்
எனப்படும் .அவைகள் நல்ல பலனை அளிக்காது .


வக்கிரம் :
                      சில சமயங்களில் கிரகங்கள் பின்னோக்கி சென்றவாறு காணப்படும் .அப்பொழுது அக்கிரஹங்களுக்கு பலம் அதிகம். அவைகளின் தன்மையே மாறிவிடும் .ஒற்றை கிரகங்கள் மஹாபலமுடையவர்கள் .


பரிவர்த்தனை :
                                ஒரு கிரகத்தின் வீட்டில் மற்றொரு கிரகம் வீடு மாறி நிற்பது .இதுவும் கிரகத்திற்கு வலிமை தரும் .


பாதகாதிபதி :
                              சர ராசிகளுக்கு 11-ஆம் வீட்டின் அதிபதியும் , ஸ்திர ராசிக்கு 9-ஆம் அதிபதியும் த்விச்வபாவ ராசிக்கு 7-ஆம் வீட்டின் அதிபதியும் பாதகாதிபதிகள் ஆவார்கள் .


கிரகயுத்தம் :
                          ஒரு ராசியில் செவ்வாய்க்கு பின் கூடியிருக்கும் கிரகங்கள் யுத்தத்தில் தோற்றவையாகும் .இவைகள் நல்ல பலனை 
அளிக்கமாட்டர்கள்.


சஷ்டாஷ்டகம் :
                                 ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு 6 அல்லது 8 -வது இடத்தில் இருப்பது .இக்கிரகங்களின் தசா புக்திகள் நன்மை தராது .


திவிர்த்வாதசம் :
                                    ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு 2 அல்லது 12 -வது இடத்தில் இருப்பது .இக்கிரகங்களின் தசா புக்திகள் நன்மை தராது .

ஆத்மகாரகன் :
                                ஒரு ராசி சக்கரத்தில் ஒரு ராசியில் எந்த கிரகம் அதிகமாக சென்றுள்ளதோ அந்த கிரகம் ஆத்மா காரகன் எனப்படும் .அக்கிரகம் மிகுந்த பலமுடைய கிரகமாகும் .

   

No comments:

Blogger Gadgets