Saturday, March 22, 2014

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!


தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.



ஆயிரமாண்டு அதிசயம்!!! 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் எழில் கொஞ்சும் கம்பீரத் தோற்றம்.



ஒற்றைக்கல் நந்தி! பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த ஒற்றைக்கல் நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.


சோழர் கால கல்வெட்டு தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்
.



ராஜராஜன் சிலை கோயிலுக்குள் காணப்படும் மாமன்னன் ராஜராஜனின் சிலை.


சிவலிங்கங்கள் பெரிய கோயிலைச் சுற்றி வரிசையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கங்கள்.


ராஜராஜன் காலத்து நந்தி மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட இந்த நந்தி, வராகி அம்மன் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நந்தி மண்டபத்தில் இருக்கும் ஒற்றைக்கல் நந்தி நாயக்கர்களால் உருவாக்கப்பட்டது.




பிரம்மாண்ட சிவலிங்கம் உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் பெரிய கோயில் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காட்சி.


தஞ்சாவூர் ஓவியம் நாயக்கர் காலங்களில் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவிய பாணியை பின்பற்றியே இப்போது பிரபலமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளது.




விநாயகர் சன்னதி தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பின்னாட்களில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட விநாயகர் சன்னதி.



கேரளாந்தகன் வாயில் மாமன்னன் ராஜராஜன் கேரள நாட்டை கைப்பற்றியதின் காரணமாக கேரளாந்தகன் என பெயர்பெற்றதோடு, இந்த கேரளாந்தகன் வாயில் அதன் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.



முருகன் கோயில் தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதி பின்னாட்களில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.

No comments:

Blogger Gadgets