Tuesday, June 10, 2014

பகைகிரக சேர்க்கைகளுக்கு பரிகாரம்


பிருகு-  நந்திநாடிமுறையில் ஜாதகத்தில் உள்ள கிரக சேர்க்கைகளை கண்டறிந்து அவைகளில் காணப்படும் பகைக்கிரக சேர்க்கைகளுக்கு ,கிழமை மற்றும் ஹோரையை அனுசரித்து சிலபரிகாரங்களை செய்துகொள்ளலாம். அந்த வகையான பரிகாரமுறையைக்காண்போம்.

சூரியன்+சுக்கிரன்
ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திர பாதத்திலேயே சுக்கிரன் நின்றிந்தால் அதை சூரியன்,சுக்கிரன் சேர்க்கையாக எடுத்துகொள்ளலாம். அதாவது சூரியன் நின்ற பாகையிலிருந்து கணக்கிட 3 பாகை 20 கலைகளுக்குள் சுக்கிரன் இருக்கவேண்டும். இந்த சேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் புத்திரதோசத்தை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரமாக பிரதி ஞாயிற்றுக்கிழமை, சூரியஹோரையில் மஹாலக்ஷ்மியை வழிபட்டுவர புத்திரதோசம் நீங்கும். அல்லது வெள்ளிக்கிழமை,சுக்கிர ஹோரையில் சிவனை வழிபட்டு வரவும்.

சூரியன்+சனி
ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சனி நின்றிருந்தால் அதை சூரியன்,சனி சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும், பித்ருதோசம் மற்றும் புத்திரதோசத்தை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரமாக பிரதி ஞாயிற்றுக்கிழமை,சூரியஹோரையில் சிவனைவழிபட்டுவர பித்ருதோசம் மற்றும் புத்திரதோசம் நீங்கும்.அல்லது சனிக்கிழமை,சனிஹோரையில் சிவனை வழிபட்டு வரவும்.

சந்திரன்+புதன்
ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் புதன் நின்றிருந்தால் அதை சந்திரன்,புதன் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் தோல்வியாதியை உண்டாக்கும், சஞ்சலபுத்தியைக்கொடுக்கும்,கெட்ட பெயரை உண்டாக்கும். இதற்கு பரிகாரமாக பிரதி திங்கள்கிழமை,சந்திரஹோரையில் விஷ்ணுவை வழிபட்டுவர இந்ததொல்லைகள் நீங்கும். அல்லது புதன்கிழமை,புதஹோரையில் கௌரியை வழிபட்டுவரவும்.

சந்திரன்+சுக்கிரன்
ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சுக்கிரன் நின்றிருந்தால் அதை சந்திரன்,சுக்கிரன் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் பணவிரையத்தை எற்படுத்தும்,வீடு,வாகனங்களை இழக்கச்செய்யும்,வீட்டில்உள்ளபெண்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரமாக பிரதி திங்கள்கிழமை,சந்திரஹோரையில் மஹாலக்ஷ்மியை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும். அல்லது வெள்ளிக்கிழமை, சுக்கிரஹோரையில் கௌரியை வழிபட்டுவரவும்.

சந்திரன்+சனி
ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சனி நின்றிருந்தால் அதை சந்திரன்,சனி சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒருவகையான சுணக்கத்தை ஏற்படுத்தும். காலாகாலத்தில் எதுவும் நடக்காது, முக்கிய நிகழ்வுகள் எல்லாம் காலதாமதமாகவே நடக்கும். இதற்கு பரிகாரமாக பிரதி திங்கள்கிழமை,சந்திரஹோரையில் சிவனை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும். அல்லது சனிக்கிழமை,சனிஹோரையில் கௌரியை வழிபட்டுவரவும்.

செவ்வாய்+புதன்
ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் புதன் நின்றிருந்தால் அதை செவ்வாய்,புதன் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் கல்வியில் தடையை ஏற்படுத்தும்,சகோதர,சகோதரிகளிடையே பிணக்கை உண்டாக்கும். இதற்கு பரிகாரமாக பிரதி செவ்வாய்கிழமை,செவ்வாய் ஹோரையில் விஷ்ணுவை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும்.அல்லது புதன்கிழமை,புதஹோரையில் முருகனை வழிபட்டு வரவும்.

செவ்வாய்+சனி
ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சனி நின்றிருந்தால் அதை செவ்வாய்,சனி சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த கிரகசேர்க்கை ஆண்,பெண் இருபாலாருக்கும் தொழில்தடையை ஏற்படுத்தும்,அடிக்கடி தொழில் மாற்றத்தை உண்டாக்கும். பெண்களுக்கு திருமணம் தாமதமாகும்.இதற்கு பரிகாரமாக பிரதி செவ்வாய்கிழமை, செவ்வாய் ஹோரையில் சிவனை வழிபட்டுவர இந்த தொல்லைகள் நீங்கும்.அல்லது சனிக்கிழமை, சனிஹோரையில் முருகனை வழிபட்டுவரவும்.

No comments:

Blogger Gadgets