கண் பார்வை குறைவுக்கு சூரியன் காரணமா?
லக்கினம் என்பது விதி. சந்திரன் மதி. சூரியன் கதி என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது யாராவது துன்பகரமாக பாதிக்கப்பட்டால், “அவன் கதியை பார்த்தீர்களா?” என்கிறோமே, இந்த நிலைக்கு காரணம் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்படுவதால்தான்.
நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு பலன் அறிவது போல, மேலை நாடுகளில் சூரியனை வைத்து பலன் அறிவார்கள். சூரியமேடு, சூரியரேகை நன்றாக இருந்தால் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு துறையில் பெரிய சாதனை செய்து புகழ் பெறுவான்-பணக்காரனாவான் என்கிறது கைரேகை சாஸ்திரம்.
குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக இருந்தால் பார்வை குறைபாடுக்கு. முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2 மற்றும் 12-ம் இடம் ஒருவரின் குடும்பம், பேச்சு திறன், இல்லற சுகம், பணம் மற்றும் பொருளாதர நிலை போன்றவற்றை தெரிவிக்கின்ற இடமாகும். அத்துடன் 2 மற்றும் 12-ம் இடங்கள் வலது – இடது கண்பார்வையை பற்றியும் கூறுகிறது.
லக்கினத்திற்கோ, சந்திரன் நின்ற ஸ்தானத்திற்கோ சூரியன் 2-ல் அல்லது 12-ல் இருந்தாலும், அல்லது சூரியன் 2-12-ம் ஸ்தானத்தை பார்த்தாலும், சிறு வயதிலேயே பார்வைகுறை ஏற்படுகிறது.
இங்கு பார்வை குறை என்றுதான் கூறுகிறேன். பார்வையே இருக்காது என்று கூறவில்லை. அதனால் பயப்பட வேண்டாம்.
சரி இந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது.?
இரத்தினங்களில் “மாணிக்கம்” என்கிற இரத்தினம் மோதிரமாக அணிந்தால் பார்வை குறைவது கட்டுப்படுகிறது.
உயர்தரமான மாணிக்கம் கிடைக்கவில்லையென்றால், சாதாரண “சிகப்பு நிறம்”கொண்ட இரத்தினம் அணிந்தாலே போதும். வெள்ளி தட்டில் உணவு சாப்பிட்டாலும் ஜீரணமாகும், சாதாரண வாழையிலையில் சாப்பிட்டாலும் ஜீரணமாகும். அதுபோல, பரிகாரங்களுக்கு உயர்தரமான இரத்தினங்கள்தான் அணியவேண்டும் என்பதில்லை. சாதாரண இரத்தினங்களும் பலன் தரும். ஆனால் அந்த இரத்தினங்களில் கரும்புள்ளி – விரிசல் போன்றவை மட்டும் இருக்கக் கூடாது.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த இடம், பார்வை செய்யும் இடம் போன்றவற்றை கணித்து பாருங்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தில் என்ன பயன்? பார்வை நன்றாக இருக்கும் போதே சூரிய நம்ஸ்காரம் போன்ற எளிய பரிகாரங்களையும் செய்து பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment