Tuesday, June 10, 2014

கிரக சேர்க்கைகளும் தசா-புக்தி பலன்களும்


            தசா-புக்தி பலன்கள் பல்வேறு வழிமுறைகளில் கூறப்படுகிறது .அதில் ஒரு முறைதான்  கிரஹ சேர்க்கைகளின் அடிப்படையில் பலன் கூறுவதாகும். கிரஹ சேர்க்கைகளில்  பரஸ்பரம் நட்பு பெற்ற கிரஹங்களின்  சேர்க்கை  எதுவோ, அந்த  கிரஹ சேர்க்கையில் சம்பந்தப்பட்ட கிரஹங்கள்  தங்கள் தசா-புக்தி காலங்களில் நற்பலன்களைத்தருகின்றன. கிரஹ சேர்க்கைகளில்  பரஸ்பரம் பகை பெற்ற கிரஹங்களின்  சேர்க்கை  எதுவோ, அந்த  கிரஹ சேர்க்கையில் சம்பந்தப்பட்ட கிரஹங்கள்  தங்கள் தசா-புக்தி காலங்களில் தீயபலன்களைத்தருகின்றன. கிரஹ சேர்க்கைகளைக்கொண்டு தசா-புக்தி பலன் கூறத்தேவையான ஜோதிட விதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

            (1) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  நட்பு கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 1-5-9,3-7-11,2-12 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  நற்பலன்கள் ஜாதகருக்கு தங்கு தடையின்றி அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  கிடைக்கும்.

            (2) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  நட்பு கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 4-6-8-10 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  நற்பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காமல் அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  தடைபடும்.

            (3) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  பகைக்கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 1-5-9,3-7-11,2-12 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  தீயபலன்கள் மட்டும் ஜாதகருக்கு  அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில்  கிடைக்கும்.

            (4) தசா நாதனும்,புக்தி நாதனும் பரஸ்பரம்  பகைக்கிரஹங்களாக அமைந்து , அதில் தசா நாதன்  நின்ற ராசிக்கு 4-6-8-10 ம் ராசிகளில் புக்தி நாதன் நின்றால் ,அவ்விரு கிரஹங்களின்  காரகம் மற்றும் ஆதிபத்திய ரீதியான  தீயபலன்கள்  ஜாதகருக்கு கிடைக்காமல் அவ்விரு கிரஹங்களின் தசா-புக்தி காலங்களில் 
தடைபடும்.

No comments:

Blogger Gadgets