Tuesday, June 10, 2014


சந்திராதி யோகங்கள்    

அனபா யோகம் 
"பம்” என்றால் ராசி என்று பொருள். “அனபம்” என்றால் முன் ராசி (12வது ராசி) என்று பொருள். சந்திரனுக்கு 12ல் கிரகம் இருந்தால் அது அனபா யோகம் எனப்படும்.

சுனபா யோகம்
“சுனபம்” என்றால்  பின் ராசி(2வது ராசி) என்று பொருள்.  சந்திரனுக்கு 2ல் கிரகமிருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.

த்ருதரா யோகம்
“த்ரு” என்றால் “இரு பக்கம்” என்று பொருள். ”தரா” என்றால் “தராசு” என்று பொருள். தராசுக்கு இரு தட்டுகள் இருப்பது போல் சந்திரனுக்கு இரு புறமும் கிரகமிருந்தால் அது த்ருதரா யோகம் எனப்படும்.

கேமத்ரும யோகம்
“கேம” என்றால் “இல்லை” என்று பொருள். “த்ரும” என்றால் இரு பக்கம் என்று பொருள். “கேமத்ரும” என்றால் இரு பக்கமுமில்லை என்று பொருள்.சந்திரனுக்கு இரு பக்கமும் கிரகம் இல்லாமல் இருந்தால் அது கேமத்ரும யோகம் எனப்படும்.

அதி யோகம்
சந்திரனுக்கு 6-7-8 ல் கிரகங்கள் இருந்தால் அது அதி யோகம் எனப்படுகிறது. சந்திரனுக்கு 6ல் நிற்கும் கிரகம் ,சந்திரன் நின்ற வீட்டிற்கு 12 ம் வீட்டைப்பார்க்கும். சந்திரனுக்கு 7 ல் நிற்கும் கிரகம் சந்திரனை நேர்ப்பார்வையாக பார்க்கும். சந்திரனுக்கு 8 ல் நிற்கும் கிரகம் ,சந்திரன் நின்ற வீட்டிற்கு 2 ம் வீட்டைப்பார்க்கும்.
மேற்கண்ட யோகங்களை ஆய்வு செய்தால் ஒரு விசயம் புரியும். அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு 12-1-2 அல்லது 6-7-8 ல் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அது நல்லது. அவ்வாறு இருந்தால் சந்திரன் மூலம் ஒரு யோகத்தை ஜாதகன் அனுபவிப்பான்.

No comments:

Blogger Gadgets