Thursday, June 26, 2014

சர்வ தோஷ பரிகாரத் தலம்!

புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.

தில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். 

அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் என்று கோரினார். 

அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். 

அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார். 

ஆதிஷேசனின் அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். 

தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக 

ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து

 செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு

 காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். 

விளைவு- இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக 

மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு 

தவமிருந்தார். 

அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், 

ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக 

பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.

 புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும்,

 பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி 

தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது. 

இங்கே பெருமாளுக்கு அருள்மாகடல் அமுதன் , சல சயனப் பெருமாள், கிருபா சமுத்திரப் பெருமாள் எனப் பல பெயர்கள். 

தாயாருக்கு தயாநாயகி, திருமாமகள் நாச்சியார் எனப் பெயர்கள்.

 வில்வ மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. 

பெருமாள் இங்குள்ள நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். 

சலசயனம், பால வியாக்ரபுரம், திருச்சிறுபுலியூர் என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.

விமானம்: நந்தவர்த்தன விமானம்.. இறைவன் நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். 

அவரை தரிசனம் கண்டவர்கள் வியாக்ரபாதர், வியாசர், ஆதிசேஷன்.

முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். 

இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.

ஆதிசேஷனுக்கு கருடனிடமிருந்து அபயம் அளித்த தலம்.

இத்தலத்திற்கு நேர் மாறாக மிகப் பெரிய திரு உருவத்தை திருக்கண்ணமங்கையில் காணலாம்.

வில்வம் தல விருட்சம். 

சர்வ தோஷ பரிகாரத் தலம்.

கன்வ மஹரிஷி மோட்சம் அடைந்தத் தலம். 

விஷ்ணு பாதம் இடம் பெற்றுள்ள தலம். 

இராகு , கேதுவின் மூதாதையரான ஆதிசேஷன் தனியாக எழுந்தருளியுள்ள தலமாகும். 

தேங்காய் – ஆறு மஞ்சள் வாழைப் பழம் – துளசி – மலர் மாலை ( மஞ்சள் சாமந்தி / முல்லைப் பூ ) , நெய் , ஊதுவத்தி, அவல் கற்கண்டு மற்றும் வெண்ணெய் கொடுத்து அர்ச்சனை  செய்திட வேண்டும். 

இனிப்பு பூந்தி ( 150 gram) , டைமண்ட் கற்கண்டு ( 150 கிராம் )

அர்ச்சனைக்குப் பின் கருடாழ்வார் முன்பாக ஐந்து நெய் அகல் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். 

கொடி மரமருகே நின்று இனிப்பு பூந்தியினை ( கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரல் ) மூவிரலால் ஆலயத்திற்கு வருவோருக்கும் , இறைவனை வழிபட்டு செல்வோருக்கும் வழங்கிட வேண்டும். 

அதன் பின்னரே, ஆலயத்தினை இடமிருந்து வலமாக மும் முறை வலம் வர வேண்டும். கொடி மரத்தினருகே விழுந்து வணங்கவும்.

வணங்கிய பின், ஆலய வாசலின் அருகே நின்று டைமண்ட் கற்கண்டையும் முன்பு போல் மூவிரலால் வழங்கவேண்டும். அதன் பின்னர், மறுபடியும் கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்கி, இருபது நிமிடங்கள் அமர வேண்டும்.

அதன் பின், ஆலயத்தில் இருந்து வெளிவர வேண்டும். 

இராகு கேது தோஷம் தவிர்த்து மற்ற தோஷங்களுக்கு இவ்வழி முறை பின்பற்றவும். 

48 நாட்கள் கழித்து, மீண்டும் இவ்வாலயம் வந்து வழிபடவும்.

அன்று அர்ச்சனை – ஐந்து தீபங்கள் ஏற்றுதல் – இடமிருந்து வலமாக மூன்று சுற்று – கொடி மரம் அருகே விழுந்து வணங்குதல் - 

அதன் பின் அன்ன தானம் – ஏழை குழந்தை (9) / விதவை (9 ) / முதியோர்களுக்கு – ஆண் (9), பெண் (9)

புதிய உடை தானம் - ஏழை குழந்தை / விதவை / முதியோர்களுக்கு

செய்திட வேண்டும். 

அன்ன தானம் செய்திட்ட இடத்தினை உணவருந்திய பின், இலைகள் நாமே எடுத்திட வேண்டும். பணியாள் வைத்திடக் கூடாது. நாமே அவ்விடத்தினை சுத்தம் செய்திட வேண்டும்.

மீண்டும் கொடி மரம் அருகே கற்பூரம் அல்லது நெய் தீபம் ஏற்றி வணங்கி இருபது நிமிடம் அமர்ந்து, மனம் உருகி விஷ்ணு சஹஸ்ர நாமம் / பஜ கோவிந்தம் படித்து பின்னர் இருபத்தோராம் நிமிடம் ஆலயம் விட்டு இல்லம் திரும்பவும்.

இல்லம் திரும்பிய பின்னர், சூரனை வென்ற திருக்குமரனுக்கு ஒரு நெய் அகல் தீபமேற்றி வணங்கி, அத்தீபம் அணையும் வரை எங்கும் செல்லாமல், அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து, கற்பூரம் ஏற்றி பரிகாரம் / தோஷ நிவர்த்தி பூசையினை பூர்த்தி செய்யவும்.

அனைத்து பிரச்னைகளுக்கும் இப்பரிகார முறை மேற்கொள்ளவும்.

 பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் 

இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப 

தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் 

தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் 

சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் 

தருவான் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் 

பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு வழிபாடுகளைச் 

செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.

அமைவிடம் : அறந்தாங்கி ரயில்பாதையில், கொல்லுமாங்குடி ஸ்டேஷனிலிருந்து 3 கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ளது. 

மாயவரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் கொல்லுமாங்குடி போகலாம். 

இங்கு தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை. 

மாயவரத்தில் தங்கி தரிசிப்பதே நன்று.

No comments:

Blogger Gadgets