Saturday, May 3, 2014

சொல்லிலும் செயலிலும் வல்லவராக்கும் பரிவா்த்தனை யோகம்



        ஜாதகங்களில் விசேஷ யோகங்கள் சிறப்பாக வேலை செய்ய, கீழ்க்கண்டவாறு யோகங்கள் அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் யோகங்களின் பலன்கள் மிகவும் பலமாகவும் சிறப்பாகவும் விளங்கும்.

யோகங்கள் லக்னத்திற்கு 6, 8, 12-ல் அமையக்கூடாது.

யோகர்கள் ஆறு பலங்கள் (ஷட் பலம்) பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.

யோகர்கள் நின்ற ராசிநாதன் 6, 8, 12-ல் நிற்கக்கூடாது.

யோகர்கள் யாரேனும் ஒருவரோ மற்றவரோ நீசமாகி நிற்கக்கூடாது. இருவருமே நீசமெனில் அது நீசபங்க ராஜயோக வகையைச் சார்ந்ததாகும். 

அஷ்டமாதிபதி சாரம் வாங்காமல் யோகர் நின்றால் பலன்கள் மிகவும் சூப்பர்.

யோகநாதனுடன் ராகு- கேதுக்கள் நிற்கக்கூடாது.

யோகநாதனுடன் லக்னத்தில் துர்ஸ்தானாதிபதிகள் நிற்கக்கூடாது.


யோகநாதன் மகா தசை இளம் வயதிலேயே நடந்துவிட்டால் ஜாதகரால் யோகப் பலன்களை அனுபவிக்க முடியாது. மாறாக பெற்றவர்களுக்குப்  பலன் கிடைக்கும். அவர்களால் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கப்படும். இருப்பினும் பின்னால் வரும் தசாபுக்திகளில் ஜாதகருக்கு பலன்கள் உண்டு.

யோகம் பெற்று நின்ற கோள்களின் தசை 20-25 வயதிற்குமேல் நடந்தால் ஜாதகரின் வாழ்க்கை வசந்தமாகும்.
உதாரணமாக, குரு ஆட்சி பெற்று நின்று, அந்த ஜாதகருக்கு இருபதாவது வயதில் குரு தசை நடப்பிற்கு வந்து, அதற்கு அடுத்த தசாநாதன் சனி பகவானும் ஆட்சி, உச்சம் பெற்று நின்றால், அந்த ஜாதகருக்கு இருபது வயதில் தொடங்கிய பொற்காலம் முப்பத்தாறு வயதிற்குள் பலம் பெற்று, சனி தசையின் அடுத்த பத்தொன்பது வருடங்களில் ஜாதகர் லட்சாதிபதி  ஆவதை யாரும் தடுக்க முடியாது.

ஒரு கோளுடன் இன்னொரு கோள் இணைந்து யோகங்கள் உருவாகிறபோது, அந்த வீடுகளில் ஒன்றில் நின்றால்தான் மிகமிகச் சிறப்பான பலன்கள் தரும்.

உதாரணமாக, 4-ஆம் அதிபன், 5-ஆம் அதிபன் சேரும்போது வித்யா யோகம் உருவாகும். கோள்கள் 4-ல் அல்லது 5-ல் நின்றால்தான் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதைப் போன்றே மற்ற யோகங்களும். அந்த அதிபர்கள் ஒருவரையொருவர் பார்த்தாலே யோகம் என்றாலும் பலன்கள் அந்த அளவிற்கே இருக்கும்; சிறப்பாக அமையாது. தருமகருமாதிபதி யோகம் 9-ஆம் அதிபனை 10-ஆம் அதிபன் பார்த்தால் உண்டு என்றால், அவர் பெரிய தொழிலதிபராக இருக்க முடியாது. மாறாக, ஒரு சின்ன தொழில் செய்கிறபோது அவர் அதன் முதலாளி என்பது போலத்தான். கார்ப்பென்டர் என்றால் அவர் மேஸ்திரி, ஆசாரி என்கிற அளவில்தான் பலன்கள் தரும்.

யோகருடன் நின்றவர் லக்னத்தில் இன்னொரு யோகர் எனின், அந்த யோகரின் தசா புக்திகளிலும் சிறப்பான பலன்கள் அமையும்.

யோகருடன் நின்றவர் கேந்திராதிபதி, கோணாதிபதி எனின், அவர்களின் புக்தியிலும் பலன்கள் சிறப்பாக கிடைக்கும்.

யோகநாதன் நின்ற இடத்திலிருந்து பார்க்கின்ற வீடுகளும் மங்களம் பெறும். அந்த யோகர் செவ்வாய், சனியே ஆனாலும் நற்பலன்களே மேலோங்கும்.

யோகர்களின் பார்வை பலத்தைப் பொறுத்தவரையில் அந்தக் கோளுக்கு உள்ள விசேஷ பார்வை, பார்க்கும் அதிகாரம் பெற்ற வீடுகளில் நிற்க வேண்டும். 2, 6, 8, 12-ல் நிற்கும் கோள்களுக்குப் பார்க்கும் அதிகாரத்தைப் பற்றி சர்ச்சை உண்டு.

யோகநாதர்களை சுபக்கோள்களான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் பார்வை யிட்டால பலன்கள் பன்மடங்காகும். பார்க்கும் கோளின் தசாபுக்தியும் நற்பலன்களை தனது சொந்த காரகத்தின் மூலமாகவும், வகிக்கும் வீட்டின் பதவிக்கேற்பவும் பலன்கள் சுபமாக- பலமாக அமையும். 

யோகரின் மகா தசை முழுவதுமே பலன்கள் சுபமாகவும் பலமாகவும் வீசவேண்டுமெனின் இந்த விதத்தில் யோகநாதர்கள் நின்றால் யோகம் சித்திக்கும்!

இது குறித்து ஏற்கெனவே "பாலஜோதிடம்' இதழில் எழுதியுள்ளேன். என்றாலும் பல வாசகர்கள், "எனக்கு இந்த யோகம் சிறப்பாக பயன்தரவில்லையே, ஏன்?' என்று விளக்கம் கேட்கிறார்கள். அவர்களுக்கான சில விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஜோதிடத்தின் ஆயிரமாயிரம் விதிகளுக்கு இடையே பெற்றோர்களின் பங்களிப்பு, அவர்களின் ஆளுமை, வளமை எல்லா ஜாதகர்களுக்கும் அவசியமாகும். பெற்றோர்கள் வலிமை குறைந்தபோது ஜாதகரின் லக்னாதிபதி வலிமையாகி 6, 8, 12-ல் நிற்காமல்,ராஜயோகங்களில் ஒன்றிரண்டு ஜாதகத்தில் அமைந்திருந்தால் அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையேதுமில்லை. அதேசமயம் பல ஜாதகர்களின் விஷயத்தில்பெற்றோர்கள் விட்டுச்சென்ற சொத்தை இழந்து பரிதவிக்கும் துர்பாக்கிய நிலையையும் கண்ணுறு கிறோம். பெரும்பாலானோர், பெற்றோர் சம்பந்தமான விஷயத்தை விட்டுவிட்டு, "இதுவும் உனது கர்மா; இதுதான் உனது பிராப்தம்' என்று சொல்லி அதை ஒரு எஸ்கேப் ரூட்டாகப் பயன்படுத்தி தப்பித்துவிடுவார் கள். ஜாதகத்தின் வழியாக மட்டும், அவர்களின் ஜாதகத் தில் உள்ள யோக- அவயோகங்களைத் தெரிந்து கொண்டு, நல்ல- கெட்ட தசாபுக்திகள் அறிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் ஒரு செயல் திட்டத்தை ஜாதகர்கள் வகுப்பதை ஆதரிக்கும் பல ஜோதிடர் களில் நானும் ஒருவன்.

பரிவர்த்தனை யோகம் என்றால், எந்த லக்னமானா லும் ஒரு வீட்டதிபதி இன்னொரு வீட்டில் மாறி அமர்வது ஆகும். அதாவது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடைய வீட்டில் (ராசியில்) இடப்பரிவர்த்தனை செய்வதாகப் பொருள். அப்படி பரிவர்த் தனை பெறும்போது இரண்டு கிரகங் களும்  தனது சொந்த வீட்டில் ஆட்சி பெறாவிடினும், அந்த இரண்டு கிரகங்களும் ஆட்சி பெற்ற கோள் களைப் போன்று அதிசக்தி வாய்ந்த வைகளாகிவிடும். இந்த இரண்டு வீட்டின் காரகம், பரிவர்த்தனைக்கு உள்ளான கிரகத்தின் காரகங்கள் யாவும் தத்தம் தசாபுக்திகளில் சிறப் பாகப் பலன் அளிக்க வல்லவர்கள். லக்னாதிபதி  மற்ற வீட்டதிபதிகளுடன் (6, 8, 12-ஆம் அதிபதிகள் தவிர) பரிவர்த்தனை பெற்றால்  மகா சுபபரி வர்த்தனை யோகம் என்று பெயர். லக்னாதிபதி 3-ஆம் அதிபனுடன் பரிவர்த்தனை பெறுவதை களயோகம் என்று ஜோதிடம் பெருமைப்பட அழைக்கிறது. 
லக்னாதிபதி 6, 8, 12 அதிபதிகளுடன் பரிவர்த்தனைபெற்றால் அதற்கு அசுப பரிவர்த்தனை யோகம் என்று பொருளாகும். அசுப பரிவர்த்தனை யோகம் என்பது, ஒன்றை இழந்து மற்றொன்றைப் பெறுவதாகும். 

இதனால் சமயத்தில் சோகம், அவமரியாதை, அவப் பெயர், நன்மதிப்பு கெடலாம். சட்ட விரோத காரியங் களில் ஈடுபட்டு திடீரென பொருள் ஈட்டுவோராகவும் பதவி சுகம் அனுபவிப்பவராகவும் இருக்கலாம். பொதுவாக பரிவர்த்தனை யோகத்தின் பலன்கள் நீண்ட ஆயுள், திடகாத்திரம், நற்பெயர், சாதனையாளர்கள்! பொதுவாக ஜாதக- ஜாதகியர் சொல்லிலும்  செயலிலும் வல்லவர்கள். செயற்கரிய செய்பவர் கள். ஆர்ப்பாட்டம், ஓசையின்றி இசைபட வாழும் நன் மக்களாவர்- இந்த பரிவர்த்தனை யோகத்தில் பிறந்த ஜாதக- ஜாதகியர்.

1 comment:

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது வலைத்தலம் மிகவும் பயனுள்ளதாகவும், அருமையாகவும் உள்ளது. மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் கார்த்திகேயன். மிக்க நன்றி

Blogger Gadgets