சனீஸ்வரன் 108 போற்றி:
ஆதவானால் அவதரித்த அருஞ்சேய் போற்றி!
தீதுடனே நன்மை தரும் தேவா போற்றி!
கருமை நிறங் கொண்டருளும் காரா போற்றி!
பெருமை மிகக் கொண்டவனே மந்தா போற்றி!
நளதமயந்திக்கருள் செய்த நாதா போற்றி
வளமுடையதோர் நல்வாழ்வும் தருவாய் போற்றி!
சாயையெனும் நிழலரசிச் சேயே போற்றி!
மாய்க்கும் யமன் சோதரனே மன்னா போற்றி!
நள்ளாற்றில் குடிகொண்ட நாதா போற்றி!
எள்ளன்னம் விரும்பியுடன் ஏற்போய் போற்றி!
ஈசனையும் பற்றியதோர் இறைவா போற்றி!
வாசமலர் கருங்குவளை அணிவோய் போற்றி!
திசை மேற்கு முகமாகி நின்றாய் போற்றி!
அசைவதனால் தன்திசையால் ஆள்வோய் போற்றி!
ஐங்கரனின் கொம்பவே செய்தோய் போற்றி!
சங்கரனை இரந்துண்ண வைத்தோய் போற்றி!
குள்ளவடிவுடைய கோவோ போற்றி!
தெள்ளுதமிழ் தேனால் துதிப்போம் போற்றி!
கள்ளமில்லா உள்ளமதில் களிப்போய் போற்றி!
வள்ளலென நல்லனவும் தருவோய் போற்றி!
எழுதநாளில் கடைநாளாய் இருப்போய் போற்றி!
தொழுதேத்தும் தூயவரை காப்பாய் போற்றி
கண்பார்வை தோஷத்தால் கடி யோய் போற்றி
எண்ணில்லா சிறந்தோரை இழித்தோய் போற்றி!
அப்பர்தமை அலைகடலில் சேர்த்தோய் போற்றி!
ஒப்பில்லா ஒன்பதினுள் உயர்ந்தோய் போற்றி!
முக்கண்ணர் உமை பிரிய மூலா போற்றி!
வக்கிரமாய் இயக்கத்தில் வருவோய் போற்றி!
சீதை சிறை ராவணனால் சேர்த்தோய் போற்றி!
சூதுவழி பாரதப் போர் சூழ்ந்தோய் போற்றி!
அயன் தலையை அறனறுக்கச் செய்தோய் போற்றி!
தயவில்லா தன்பணியால் தகிப்போய் போற்றி!
சூர்ப்பனகை மூக்கறவே சூழ்ந்தோய் போற்றி!
கார்மேக நிறங்கொண்ட கரியோய் போற்றி
மாருதிவால் தீபெறவே செய்தோய் போற்றி!
தாருகா சுரன் மாய காரண போற்றி!
சிவனாரை விடமுண்ணச் செய்தோய் போற்றி!
தேவர் சிறை சேரவிதி சேர்த்தோய் போற்றி!
முழு மதியின் கலையழிய மூலா போற்றி!
அழகற்ற உருவமுடைய அரசே போற்றி!
தக்கன் சிரம் வீழவழி தந்தோய் போற்றி!
சுக்ரனார் கண்ணிழக்க சூத்திரா போற்றி!
மதனழிய சிவனவன் கண் திறந்தோய் போற்றி!
பதமலரே பணிவோர்க்கு அருள்வோய் போற்றி!
அறனடியில் முயலகனை அடைத்தாய் போற்றி!
சரவணனை மரமாகச் செய்தோய் போற்றி!
அகலினைக் கல் ஆகவிதி அமைத்தோய் போற்றி!
செகமெங்கும் புகழ்பெற்று சிறந்தோய் போற்றி!
கயமுகாசுரன் மாயகாரணா போற்றி!
தயரதனார் சுதர்களை கான் ஓட்டினோய் போற்றி!
அரிச்சந்திரன் பட்டதுயிர்க் கரசே போற்றி!
தரித்திரமும் பொருள் தரவுந் தகுந்தோய் போற்றி!
எமனை சிவன் காலுதைக்கு இழுத்தோய் போற்றி!
தமதருளால் எவ்வகையும் தருவோய் போற்றி
காசினிமேல் கீர்த்தியுடை காரா போற்றி!
நேசமுடன் நினைப்போர்க்கு நிதியே போற்றி!
ராவணன்தன் கதை முடிய மூலா போற்றி!
பாரதத்தில் சகுனிவழி விதியே போற்றி!
அரியாலே இரணியனை அழித்தோய் போற்றி!
கரியோனே முடமூடைய மந்தா போற்றி!
விதியதனின் செயலுருவ விந்தே போற்றி!
சதியதனால் தீதழிக்கும் தலைவா போற்றி!
சூதுமதி கூனியின் சொல் சூழ்ந்தோய் போற்றி!
பாதகமும் பன்நலமும் தருவோய் போற்றி!!
எமனை அதி தேவதையாய் கொண்டோய் போற்றி!
இமயவரின் இன்னல்களுள் இருந்தோய் போற்றி!
ஆயுள்காரகனாய் அமர்ந்தோய் போற்றி!
தாயுள்ளம் கொண்டு அருள் தருவோய் போற்றி!
பொங்கு சனியாய் பலவுங் கொடுப்போய் போற்றி!
மங்கு சனியாய் வளங்கள் பறிப்போய் போற்றி!
மரணச் சனியாகி மாய்ப்போய் போற்றி!
சரணமடைவார்க்கு அருள்வோய் போற்றி!
அட்டமச் சனியாகி ஆட்டுவோய் போற்றி!
இட்டமாய் பணிவோர்க்கு இறங்குவோய் போற்றி!
வாலி சுக்ரீவர் பகை விளைத்தோய் போற்றி!
மாலியுரல் கட்டுறவே வைத்தோய் போற்றி!
துரோபதையாள் துகிலுரிய துஞ்சினோய் போற்றி!
சாரங்கதரன் கரமே தறித்தோய் போற்றி!
விறகையரன் விற்க விதி விளைத்தோய் போற்றி!
கரம் நான்கு கொண்டவனே காரி போற்றி!
இதமுறவே என் நலமும் தருவோய் போற்றி!
நிதமுன்னை நினைப்போர்க்கு நல்லோய் போற்றி!
சங்கடந் தீர்க்கும் சனியோய் போற்றி!
மங்களம் தந்தும் அருள்வோய் போற்றி!
சூலமேந்திய நீலா போற்றி!
நால்வேதத் தலைவனையே நலித்தோய் போற்றி!
பாருளமட்டும் பரவு வோய் போற்றி!
யார்யெவராயினும் சேர்வோய் போற்றி!
கருந்தானியங்கள் கொடுப்போய் போற்றி!
சிறந்தாள்பவனே முடவா போற்றி!
சாம்ராஜ்யம் பல சரித்தோய் போற்றி!
தாம் எனுமெண்ணம் தறிப்போய் போற்றி!
சிந்தையிலிருத்தி மகிழ்வோய் போற்றி!
தந்தையின் பகையை கொண்டோய் போற்றி!
தாழ்வும் வாழ்வும் தருவோய் போற்றி!
பின்பலனை தரும் பெருமான் போற்றி!
அன்புடையார்க்கு அருள்வோய் போற்றி!
குறையுடையோனே கரியா போற்றி!
நிறைவளம் நல்கும் நீலா போற்றி!
ரேவதி விண்மீன் அதிபதி போற்றி!
பூவுலகோர் தொழும் சாவக போற்றி!
திருக்கச்சி நம்பிக் கிரங்கினாய் போற்றி!
செருக்குடையாரை கெடுப்போய் போற்றி!
அதிபதியாய் சாஸ்தாவை கொண்டோய் போற்றி!
துதிப்போர்க்கு துன்பமிலா தொழிப்போய் போற்றி!
வந்தோம் சன்னதி வரம்பெற போற்றி!
அந்தா மந்தா! அருள்புரி போற்றி!
உந்தாள் பணிவோம்-என்றும் போற்றி! போற்றியே!
No comments:
Post a Comment