Saturday, May 3, 2014

பெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்றல்


பொதுவாக ஒருவரின் இரண்டாம் பாவத்தைக் கொண்டு அவரின் குடும்பம், பொருளாதார நிலை, பேச்சாற்றலைப் பற்றி அறியலாம். பெண்ணானவள் குடும்பத்தை கட்டிக்காத்து, சிக்கனமாகச் செலவுகளைச் செய்து, தம்முடைய பேச்சாற்றலால் அனைவரையும் தம் கைக்குள் வைத்திருந்தால், அந்த குடும்பமானது அவளுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமுடையதாக அமையும்.

குடும்பமானது ஒற்றுமையானதாக அமைய 2ம் வீட்டில் சுபக் கிரகங்கள் அமைவதும், சுபக்கிரகங்கள் பார்வை செய்வதும் நல்லது. 2ம் அதிபதி பாவியாக இருந்தாலும், 2ல் பாவக்கிரகங்கள் அமைந்தாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்கும். கிரகங்களில் கொடிய பாவிகளாக கருதக்கூடிய சனி, ராகு 2ல் இருந்தால் கண்டிப்பாக அதன் தசா புக்தி காலங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையக்கூடிய சூழல் உண்டாகும். சில நேரங்களில் கணவன், மனைவி பிரியக்கூடிய சூழ்நிலையே உண்டாகிறது.

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டை கொண்டு பொருளாதார நிலையைப் பற்றியும் அறியலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதியும் தனக்காரகன் குருவும் ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ, லாபஸ்தானத்தில் அமையப் பெற்றோ, கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ இருந்தால், அந்தப் பெண்ணிற்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமும், அதனால் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். 

அதுவே 2ம் அதிபதியும் குரு பகவானும் பலஹீனமாக இருந்தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது. இப்படி ஜாதகப் பலன்களைக் கொண்ட பெண்கள் பண விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது.

No comments:

Blogger Gadgets