அரசியலில் பதவி வேண்டுமா....? 3 பேரின் அனுகிரகம் இருந்தால் போதுமாம் !
அரசியல் பதவி கிடைக்க வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் வலிமை பெற்றிருக்க வேண்டுமாம். அரசியல் பதவியும், புகழும் பெறுவதற்கான அமைப்புகளை ராஜயோகம் என்று கூறலாம். எனவே ராஜயோகம் என்பது பதவியையும் புகழையும் உள்ளடக்கியது என்றே எடுத்துக் கொள்ள வேண்டுமென ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஒருவர் பெரிய செல்வந்தராகி விஷேச பலனை அனுபவிக்க வேண்டுமானால் லக்கனம் (1) தனாதிபதி (2) சுகாதிபதி (4) லாபாதிபதி (11) ஆகியோர் பலம் பெற்றிருப்பது முக்கியம். லக்னத்திற்கு 2,4,5,10க்குரியவர்கள் பாக்கியாபதி (9) லாபாதிபதி (11) லக்னாதிபதி (1) சேர்ந்து கேந்திரம் 1,4,7,10 திரிகோணம் 1,5,9 இருந்து நட்பு சுபர் சம்பந்தம் பார்வை பெற்றிருப்பின் மிக விஷேசமான பலன்கள் கிø டக்கும். கழுதையாக பிறந்தாலும் கால்மாணியோகம் வே ண்டும் என்பது பழமொழியாகும். அவனுக்கு குருட்டு அதிர்ஷ்டம் என்பது சொல் வழக்கு பாக்கிய ஸ்தானமான 9 ஆம் இடத்தில் ஆட்சி பெறும் கிரகமே இவ்வாறான குருட்டு அதிர்ஷ்டத்தை தரும். குற்றமற்ற கேந்திராதிபதியாகிய 10ஆம் அதிபதி 9ம் இடத்திலும் 9ம் அதிபதி பத்தாம் இடத்திலும் இருந் து3,6,8 க்கிரியவர்களுடன் சேராமலும் பார்க்காமலும் இருந்தாலும் 9,10ம் இட அதிபர் பரிவர்த்தனை ஆகி இருந்தாலும் அவர் புவி வெப்பம் ராஜயோகம் பெறுவார். அனைத்து கிரகங்களும் கேந்திரம் 1,4,7,10 பணபரஸ்தனங்கள் 2,5,8,11 அபோக்ல மத்தில் எந்த கிரகமும் இல்லாமல் (அதாவது 3,6,9,12) இருந்தால் அந்த ஜாதகருக்கு மக்கள் தலைவனாகவே இருக்க யோகமுண்டு. ஜாதகத்தில் 8க்குரியவர் 6,12லோ 6க்குரியவர் 8,12லோ 12க்குரியவர் 8,6லோ இருந்தால் விபரீத ராஜயோகம். 5ம் இடத்தோன் அஸ்தமனமில்லாமல் லக்னத்தில் இருக்க 10ம் அதிபதி 5ல் இருந்தாலும் 5ம் அதிபதி 5ல் இருந்தாலும் மக்கள் செல்வாக்குண்டு நெருப்பு ராசிகள் மேஷம், சிம்மம், விருச்சிகம் லக்னமாகி அதில் செவ்வாய் இருந்து பகை கிரகங்களால் பார்க்கப்படாமல் இருந்தால் அரசனாவார்.
குரு, புதன், சுக்கிரன் அல்லது சந்திரன் 9ம் இடத்தில் எந்தவித பலவீனமுமின்றி அமர்ந்தால் மக்கள் தெய்வமென வழிபடும் சிறப்பு மிக்க அரசனாவார். லக்னத்திற்கு 5ம் இடத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் மற்றவரது மன ஓட்டத்தை புரிந்து அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவராக இருப்பார். பொடி வைத்து பேசுவதில் வல்லவர். அரசியல் தந்திரம், சாதுர்யம் நிரம்பியவர்களாக இருப்பர். கிரக பார்வைகளில் சனி, செவ்வாய் பார்வை மிகவும் கொடியதாகும். பன்னிரெண்டு பா வங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் செவ்வாய் அமர்ந்திருக்க அவரை சனி பார்ப்பது நல்லது. அதாவது 10ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருக்க அந்த செவ்வாயை சனி பார்ப்பது நல்லது, 10ம் இட செவ்வாய்க்கு சனி பார்வை கிடைத்தால் அந்த ஜாதகர் மிகச் சிறந்த தலைவராக உருவெடுப்பார். எனினும் போட் டி, பொறாமை உண்டு அதிலிருந்து வெளிவர திணறுவார் என்று ராமானுஜர் கூறுகிறார். ஒரு ஜாதகத்தில் 1,5,10 போன்ற இடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு இருந்தால் நல்லது. 10ம் இடத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று சூரியன்சாரம் உள்ள நட்சத்திரத்தில் உதித்து செவ்வாய் பார்வை பெற்றால் நல்லது. சூரியன், செவ்வாய் பரிவர்த்தனை அரசியல் புகழ்தரும். நடப்பு தசை அந்த யோக தசையாக இருக்க வேண்டும், கோட்சாரமும் துணைநிற்க வேண்டும். நடப்புதசை யோகமாக அமையப் பெற்றவர்களே மக்கள் தலைவர்கள் என்ற பதவியை அடையமுடியும் என்பது விதியாகும்.
No comments:
Post a Comment