Saturday, May 10, 2014

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும்

நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்குரிய பலன்களை ஒரு ஜாதகருக்குதந்துக்கொண்டிருக்கிறதுஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பின்படிதான்ஒருவரின் வாழ்க்கை நிலை அமைகிறதுஇன்றைய விஞ்ஞான வளர்ச்சிகாலத்தில் தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையை நல்லநேரம் பார்த்தும்பிரசவம் செய்கிற மருத்துவ வளர்ச்சி வந்துவிட்டதாக இருந்தாலும்ஒருகுழந்தையானது எந்த தாய்க்கு எந்த ஊரில் எந்த நேரத்தில் பிறக்க வேண்டும்என்பதை இறைவன் முன்கூட்டியே தீர்மானித்து இருக்கிறான்நாம் நினைத்தநேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது என நாம் நினைத்தாலும்அதுவும்இறைவன் விதித்ததேஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில்இருந்ததோ அவ்வாறு அந்த குழந்தையின் ஏற்ற தாழ்வு உண்டாகிறது.

செவ்வாய்

இந்த நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடு மிகமிகமுக்கியமானதுஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில்இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாயின் பலமே காரணமாக இருக்கிறதுபோலீஸ்-இராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழில்சாலைகளுக்குஅதிபதியாக இருக்கசெவ்வாயின் தயவு தேவைஎண்ணற்ற சொத்துக்களுக்கும்கட்டடக்கலை வல்லுனர்-பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்துபவர்போன்றவர்களுக்கும் செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார்தைரியமாக ஒருவர்எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய்.ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்குவாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது-சேர்ந்தாலும் தங்காதுஒருவருக்குஅதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணமானவர் இந்தசெவ்வாய்தான்பூமிக்கு அதிபதியான செவ்வாய்நிலஅதிர்வு-பூகம்பம்போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறதுசமீபத்தில் நிகழ்ந்த ஜப்பான்பூகம்பம் உட்பட உலகில் நிகழ்ந்த பூகம்பம்-நிலஅதிர்வுகளுக்கு செவ்வாயின்கோச்சார நிலை காரணமாக இருந்தது என்பதை ஜோதிட ஆர்வலர்கள் அறிவார்கள்.ஆங்கிலத்தில் மார்ஸ் (MARS) என்று சொல்லி செவ்வாய் அழைக்கப்படுகிறது.விஞ்ஞான தகவலின்படி செவ்வாய்சூரியனில் இருந்து நான்காவது கிரகம்இதுசூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறதுபோலீஸ்-இராணுவதுறைக்குசெவ்வாய்தான் அதிபதி என்று நம் இந்திய ஜோதிடம் சொல்கிறதுஅதன்படிமேலைநாட்டவர் செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம்மார்ஸ்என்பது போர்க்கடவுளின் பெயர்செவ்வாய்க்கு ஏற்ற இரத்தினம் பவழம் என்றும்ரத்தின சாஸ்திரம் சொல்கிறதுகாரணம் செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்புஅதனால்சிகப்பு நிறமுடைய பவழம் அணிவது நல்லது என்பதுஇன்றல்ல நேற்றல்ல நவீனவிஞ்ஞானம் வளர்ச்சிக்கு முன்னறே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியஜோதிட சாஸ்திரம் சொன்ன விஷயம் இதுஅதன்படி இன்றைய நவீன விஞ்ஞானம்செவ்வாயின் நிறம் சிகப்பு என்று கண்டுபிடித்ததாக சொல்கிறதுசெவ்வாய்கிரகத்தின் மண்ணில் இரும்பு ஆக்ஸைடு மிகுந்திருப்பதால் அத்தகைய சிகப்பு நிறம்செவ்வாய் கிரகத்திற்கு உண்டாகி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சனி

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி.ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனிபகவான்பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி.முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவனும்இல்லை என்று சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டே சொன்னார்கள்.ஒரு இராசியில் இருக்கும் சனிகிரகம் மீண்டும் அதே இராசிக்கு வந்து சேர முப்பதுஆண்டுகள் ஆகும்சனிகிரகத்தை ஜோதிட சாஸ்திரம் மந்தன் என்று அழைக்கிறது.அதாவது ஒருவர் திறமைசாலியாக இருந்தாலும் அவருடைய செயல்கள் மந்தமாகஇருந்தால் சனியின் ஆதிக்கத்தை கொண்டவர் என்று அறியலாம்சுறுசுறுப்புகுறைந்த தன்மையை சனி கிரகம் தருகிறதுஉடல் ஊனமுற்றவர்கள் குறிப்பாகநடப்பதற்கு சிரமப்படுகிறவர்களின் ஜாதகத்தில் சனி பலவீனம் கொண்டதாகஇருக்கும் என்பதை அறியலாம்ஒன்பது கிரகங்களில் சனி கிரகத்தின் சிறப்புகள்எண்ணில் அடங்காதுஏழையாக இருந்தவனை செல்வ-அந்தஸ்தின் உச்சிக்குகொண்டு செல்வதும்அந்தஸ்தின் உச்சியில் இருந்தவனை நடுதெருவுக்குகொண்டுவருவதிலும் சனி கிரகத்திற்கு நிகர் இல்லை.
சனி பகவான் ஒருவருடைய ஜென்ம இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரும் போதும்,அடுத்து ஜென்மத்திற்கு வரும் போதும்அதற்கு அடுத்து 2-ம் இடத்திற்கு வரும்காலத்தையும் ஏழரைநாட்டு சனி என்று ஜோதிட சாஸ்திரம் அழைக்கிறதுஅதாவது,சனி ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு செல்லும் காலம் இரண்டரைஆண்டுகள் ஆகும்அதன்படி 12-ம் இடம் இரண்டரை ஆண்டுகள்ஜென்மம் இரண்டரைஆண்டுகள்இரண்டாம் இடத்திற்கு வந்த சனி இரண்டரை ஆண்டுகள் என ஆகமொத்தம் ஏழரை ஆண்டுகள் சனி ஒரு ஜாதகரை படாதபாடு படுத்துவார்அதுபோலஒரு இராசிக்கு நான்காம் இடத்திற்கு சனி வரும்போது அதனை அர்தாஷ்டம சனிஎன்றும்ஒரு இராசிக்கு எட்டாம் இடத்திற்கு சனி வரும் காலத்தை அஷ்டம சனிகாலம் என்றும் ஜோதிடம் அழைக்கிறதுஇந்த அர்தாஷ்ட சனி மற்றும் அஷ்டம சனிகாலங்கள் வெறும் இரண்டரை ஆண்டு காலமே என்றாலும்அதன் தாக்கம் – பாதிப்பு,அய்யோ போதுமடா சாமீ என்று அலறும் விதமாக ஏழரை ஆண்டு சனிக்குஇணையானதான பலனை தருவதாக இருக்கும்சனி பகவான் தயவு தாட்சண்யம்பார்க்க மாட்டார்அவரை பொறுத்தவரையில் ஏழையும் ஒன்றுதான் பெரும்பணக்காரனும் ஒன்றுதான்.
சனியின் கொடுமையான பாதிப்பு இருக்கும் காலத்தில் ஒருவன் ஆடம்பரமானஎதையும் விரும்பக் கூடாதுஅந்த நபர் உடுத்தும் ஆடை கூட மிக சாதாரணமானதாகஇருக்க வேண்டும்அப்படி இல்லாமல் மனது ஆடம்பரத்தை விரும்புமேயானால்அந்த நபரின் கதி அதோ கதிதான்மன்னாதி மன்னனையும்அர்தாஷ்டம,அஷ்டம,ஏழரை ஆண்டு காலத்தில் சிறையில் தள்ளிபடாதபாடுபடவைக்கும் ஆற்றல் கொண்ட ஒரே கிரகம் சனி கிரகம் மட்டும்தான்இத்தகையதன்மைகளை சனிகிரகம் கொண்டிருந்தாலும் சனி கிரகத்தை போல ஒரு அற்புதமானவாழ்க்கையை தரும் கிரகம் இருக்க முடியாதுசனி கிரகத்தின் துணை ஒருவனுக்குஇருக்குமானால் அந்த நபரை எவராலும் வெல்ல முடியாதுஅவன்()அவள்தொட்டதெல்லாம் பொன்தான்சனி மந்தமான தன்மை கொண்ட கிரகம் என்றுஜோதிட சாஸ்திரம் சொன்னாலும்சனி மிக வேகமாக அதனுடைய அச்சில்சுழல்கிறதுஅது தன்னைதானே சுற்றி வர பத்தரை மணி நேரமே எடுத்துக்கொள்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்சனி கிரகம் சூரியனிலிருந்து ஆறாவதுகிரகம் என்று நமக்கு விஞ்ஞானிகள் இன்று சொல்கிறார்கள்ஆனால் என்றைக்கோநம் இந்திய ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் இதை சொல்லிவிட்டார்கள் எனபது மிகபெருமைக்குரிய விஷயமாகும்.
சூரியனின் இராசி மண்டலமான சிம்ம இராசியில் இருந்து சனியின் இராசிமண்டலமான மகர இராசி மண்டலம் ஆறாவது இடமாகும்அதாவது சூரியன்இருக்கிற சிம்ம இராசிக்கு ஆறாவது இடமான மகர இராசி சனியின் இடம் என்பதைநம் இந்திய ஜோதிட சாஸ்திரம் என்றைக்கோ சொல்லிவிட்டதுஇப்படியாகசெவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடுகள் ஒரு ஜாதகனின் வளர்ச்சிக்கும்வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறதுஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானதுசனியை பகை கிரகமாக நினைக்கவில்லைஆனால் சனி கிரகம் செவ்வாயை பகைகிரகமாக நினைக்கிறதுஇதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரேவீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள்இதனை கிரகயுத்தம் என்றும் சொல்லலாம்இந்த செவ்வாய்-சனி ஒரே இராசி வீட்டில்இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவுபாதிப்பு குறையும்ஆனால் எந்த கிரகங்களும் துணை இல்லாமல் செவ்வாய்-சனிமட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில்அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறதுசெவ்வாய்-சனியும்ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போதுபார்ப்போம்.

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும் !பகுதி-2

லக்கினத்தில் செவ்வாய்சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறதுகௌரவம்பாதிக்கச் செய்கிறதுதேவை இல்லாமல் குழப்பம்மன உலைச்சல் கொடுக்கிறது.
லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்சண்டையை மூட்டுகிறதுதேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறதுகண்உபாதை உண்டாக்குகிறது.
லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம்இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதரபாவத்தை பாதகம் செய்கிறதுசகோதரர் ஒற்றுமை குறைக்கிறதுஉடல்நலனில்தொண்டை பகுதியை பாதிக்கிறதுபுகழ்கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது.
லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும்.தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும்வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும்பிரயாணசமயங்களில் கவனமும் நிதானமும் தேவை.
லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம்படிப்புபாதிக்கச் செய்கிறதுபூர்வீக சொத்து விஷயத்தில் கோர்ட்டு வரை இழுத்துசெல்கிறதுஇதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருகசெய்கிறதுவிரோதங்கள் தொடர செய்கிறதுஉடல்நலனில் ஒருமுறை அறுவைசிகிச்சை செய்து வைக்கிறது.
லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கைதிருமண தடை உண்டாக்கும்அப்படிதிருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறதுகூட்டு தொழிலில் விரோதம்வளரும்மனைவி (கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு.
லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும்.அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்வாழ்க்கையில்தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும்முன்கோபம் தவிர்க்க முடியாமல்அதனால் துன்பமே உண்டாகும்.
லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில்கவனம் தேவைஇல்லை என்றால் ஏமாற வைக்கும்அயல்நாடு சென்றால் அங்குஅவஸ்தை படவைக்கும்தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும்தெய்வநம்பிக்கை குறைய வைக்கும்சிலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது.
லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில்நிதானம் செய்யும்.  போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும்அதேபோல் உத்தியோகத்தில்மேல்பதவி கிடைப்பது அரிதுமேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும்.நிலை இல்லா தொழிலே அமையும்.
லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினைஉண்டாக்கும்அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம்தொழில்,வேலைகளில் இரண்டிலும்ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்கவைக்கும்ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது.
லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்குவம்பு வந்த வண்ணம்இருக்கும்நிம்மதியான தூக்கம் இருக்காதுஎன்னடா வாழ்க்கை என்று சலிக்கவைக்கும்ஜான் ஏறினால் முழம் சறுக்கும்விரயங்கள் விரைந்து வரும்தூரபயணத்தில் வெகு கவனம் தேவை.

பரிகாரம்

இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்யவேண்டியது தெய்வ வழிபாடாகும்செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்குகட்டுப்படும்சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும்கட்டுப்படும்முருகன் திருத்தலங்களும்பெருமாள் மற்றும் விநாயகர்திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்இந்த வழிபாட்டைஎதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாதுஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள்தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும்,ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்இந்தஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களைவணங்கி தொடங்கினால்தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும்.விநாயகப் பெருமானையும்ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட,ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள்செவ்வாய்க்குஅதிபதியான முருகப் பெருமானையும்சனிக்கு அதிபதியான ஸ்ரீமன்நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது.நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனிசிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள்நம்பிக்கையுடன் வழிப்படுங்கள்.துன்பம் செய்ய வேண்டிய அவர்களே நம் அன்புக்கு கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளிதருவார்கள்.

No comments:

Blogger Gadgets