Wednesday, May 14, 2014

முக்கிய ஜோதிட குறிப்புக்கள் 


மாந்தி

மாந்தி பதினொன்றாம் இடத்தில்
இருந்தால் தொடர்ந்து புகழ் தேடி வரும்.


ரகசிய சொத்து



ஜென்ம சனி உள்ள ராசியினை
கோச்சார ராகு அடையும்போது
ரகசியமாக அதிகம் சொத்து
சேர்ப்பார்.


தாமத திருமணம்



லக்னத்திற்க்கு ஐந்தில் சனி
இருப்பின் ஏதேனும் சில
காரணங்களால் திருமணம்
தாமதம் ஆகும்.

இசைக்கு அடிமை



புதன் ராசி அல்லது
லக்னத்தில் இருந்தால்
அந்த ஜாதகர்கள்
இசைக்கு அடிமையாக இருப்பர்.


சொல்லாமலே!



கணவனின் லக்னத்திற்க்கு
மனைவியின் சந்திர ராசி
ஐந்து அல்லது ஒன்பதாக
இருந்தால் அந்த மனைவி
கணவன் நினைப்பதை
சொல்லாமலே செய்வாள்.


கண்ணாடி தேவை!



சூரியனை சனி பார்த்தால்
அந்த அமைப்புடைய
ஜாதகர் பெரும்பாலும்
கண்ணாடி அணிந்தவராக
இருப்பார்.


பெண்களில் கடின உழைப்பாளிகள்



மேஷம், மிதுனம், சிம்மம்
துலாம், தனுசு, கும்பம் ஆகிய
லக்ன மற்றும் ராசியுடைய
பெண்கள் ஆண்களைப்போல்
கடின உழைப்பாளிகள்.


பார்வையும் பலனும்



குருவை கேது பார்த்தால்
அந்த ஜாதகர் சிக்கனமானவர்
கேதுவை குரு பார்த்தால்
அந்த ஜாதகர் பணக்காரர்.


சனி



சனி ஏழில் இருந்தால் ஜாதகருக்கு 
ஜாதகரைவிட 
வசதி குறைவான / 
அழகு குறைவான /
படிப்பு குறைவான 
மனைவி அமைவாள்.

காதல் திருமணம்


செவ்வாய் - சனி ஒன்று அல்லது ஏழில் சம சப்தம 


பார்வை பெற்றால் காதல் திருமணம், இவர்களை 


குரு பார்த்தால் பெற்றோர் சம்மதம் தெரிவிப்பர்.


சனி , சந்திரன்

சனி சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால்
அல்லது சனி சாரம் பெற்றால் திருமணம் தாமதம்
ஆகும்.

லக்னம்

லக்னத்தில் சூரியன் அல்லது

லக்னாதிபதி இருந்தால் ஜாதகர்
சுதந்திரமாக இருப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பின்
போராடும் குணம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்

லக்னத்தில் ராகு இருப்பின்
மிகவும் அனுசரித்துப்போபவராக
இருப்பார்.

சுக்ரன் செவ்வாய் சேர்க்கை

சுக்ரன் செவ்வாய் சேர்ந்து பலம் பெற்றால் 

நரம்பு வியாதிகள் (Fits Disease) வரும் வாய்ப்பு  
உண்டு.

குரு
குரு எட்டில் இருந்தால்
இளமையில் வறுமை
பிற்காலத்தில் வசதியாக
வாழ்வார்கள்.

குரு
குரு இரண்டாம் இடத்தை
பார்த்தால்
நல்ல குடும்பம் அமையும்.

குரு
லக்னத்திற்க்கு எட்டில்
குரு இருப்பின் ஜாதகர்
ஒரு பணக்காரர்.

குரு பத்தில்



குரு பத்தில் தனித்து இருந்தால்  

வேலை தொடர்பான பிரச்சனை இருக்கும்.
அதிக வேலை குறைந்த வருவாய் நீடிக்கும்.

கணவன் அமைவதெல்லாம்.......

பெண்ணின் ஜாதகத்தில் 
ஏழாம் அதிபதி
அல்லது
சுக்கிரனை குரு பார்த்தால்
நல்ல  கணவன் அமைய வாய்ப்புண்டு.

சுக்ரன்





லக்னத்திற்க்கு மூன்றில் சுக்ரன்
உச்சம் பெற்று உள்ளவர்கட்கு,
சுக்கிர தசை நடக்கும் போது
வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஏற்படும்.

வெற்றி வீரர்

மூன்றில் ராகு  இருந்தால் வெற்றி வீரர் 
ஆனால் அனுபவ பாக்கியங்கள் குறைவு.


மிருகசீரிஷம்


மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள்
பளபளக்கும் கண்கள்
மினுமினுக்கும் உடல்
உடையவர்கள்
கலைபிரியர்கள்
நல்ல பேச்சாளர்கள்
உதவும் குணம்.

ராஜயோகம்

லக்னம் , சந்திரன் மற்றும் சூரியன் மூன்றும் 

வர்கோத்தமம் பெற்றாலும் நீச்சம் அடைந்தாலும்
மிக உன்னத ராஜயோகம்.



No comments:

Blogger Gadgets