Monday, May 12, 2014

அரசு உத்யோகம் யாருக்கு அமையும்?

1, லக்னாதிபதியும் 2-ஆம் அதிபதியும் இணைந்து 2-இல் இருப்பது.
2, குருவும் 5-ஆம் அதிபதியும் இணைந்து 10-இல் இருப்பது.
3, சூரியன், சந்திரன், இணைந்து பலம் பெற்று 1-7-இல் இருப்பது.
4, குருவும், சுக்கிரனும், 10-ஆம் இடத்திற்கு சம்பந்தம் பெறுவது.
5, லக்னத்திற்கோ 7-ஆம் அதிபதிக்கோ 5-இல் குரு அல்லது சுக்கிரன் அல்லது
சந்திரன் இருப்பது.
6, லக்னாதிபதி 10-இல் 10-ஆம் அதிபதி 9-இல்.
7, 9,10-ஆம் அதிபதிகள சம்பந்தம் பெற்று 4-இல் இருப்பது.
8, 2-ஆம் அதிபதி மிதுனம், கன்னியில், பலம் பெறுவது கல்வி மூலம் உயர்
பதவி பெறும் யோகம்.
9, புதனும், சூரியனும், இணைந்து 1,4,8-இல் இருந்து ஏதாவதொரு கிரகம்
ஆட்சி, உச்சமானால் விஞ்ஞானியாகலாம்.
10, சூரியன் 4-இல் இருந்தாலும் 4-ஆம் இடத்தைப் பார்த்தாலும், 3,8-ஆம்
அதிபதிகள் இணைந்து 10-ஆம் இடத்திற்கு சம்பந்தம் ஏற்பட்டாலும்
விஞ்ஞானியாகலாம்.
11, லக்னாதிபதி 6,11-இல் இருந்து ஆட்சி உச்சம் பெறுவது.
12, 10-ஆம் அதிபதி 2-ஆம் பாவம் அதன் அதிபதிக்கும் தொடர்பு ஏற்படுவது.
13, புதன் அம்சா லக்னத்திற்கு அல்லது அதற்கு 10-ஆம் பாவத்திற்கு தொடர்பு
கொள்வது.
14, 10-ஆம் இடத்திற்கு பல கிரகங்கள் சம்பந்தப்படுவது கேந்திராதிபதிகள்
அனைத்தும் 10-ஆம் பாவத்திற்கு சமபந்தம் பெறுவது.
15, 6-ஆம் அதிபதிக்கு 10-இல் சனி அல்லது 10-ஆம் அதிபதியும் இருப்பது.
16, 10-ஆம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் இருப்பது.
17, நவாம்சத்திற்கு 10-இல் சூரியன், சுக்கிரன் இருப்பது.
18, குருவும், புதனும் இணைந்து பலம் பெறுவது.
19, 9-ஆம் அதிபதி லக்னத்தில் இருந்து குருவால் பார்க்கப்படுவது.
20, செவ்வாய் 3,6,10,11-இல் இருந்து குரு பார்வை பெறுவது அரசு உத்தியோகம்
அமைந்து ஓய்வூதியம் பெரும் நிலை.
21, சந்திரனுக்கு 10-இல் சூரியன் இருப்பது.
22, 6,10-ஆம் அதிபதிகள் ஆட்சி, உச்சம் பெறுவது.
23, 1+5+10 ஆம் அதிபதிகள் கூடி ஆட்சி, உச்சம், கேந்திர, திரிகோணம்
பெறுவது.
24, லக்னாதிபதியின் பாகையையும் 10-ஆம் அதிபதியின் பாகையையும் கூட்டி
வரும் ராசியில் சுபர் இருந்தாலும், பர்த்தாலும் நல்ல உத்தியோகம் அமையம்

மிக உயர்ந்த அதிகாரம் செய்யும் ஆணையிடும் அதிகாரிகளுக்கான
கிரக நிலைகள்

1, 9,10-ஆம் அதிபதிகள், லக்னம், லக்னாதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது.
2, சூரியன், சந்திரன், பலம் பெற்று 9,10-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம்
பெறுவது.
3, 10-ஆம் அதிபதி 10-ஆம் பாவத்தையும் 9-ஆம் அதிபதியும் 9-ஆம்
பாவத்தையும் பர்ப்பது.
4, லக்னாதிபதி 8-இல் ஆட்சி உச்சம் பெறுவது.
5, சூரியன் ராசி அம்சத்தில் உச்சம் பெறுவது.
6, 9,10-ஆம் அதிபதிகள் சம்பந்தம் (ராசி அம்சத்திற்கு)
7, 4,9-ஆம் அதிபதிகள் ஓன்றுக் கொன்று கேந்திரம் பெறுவது.
8, ராகு, கேது இருந்த வீட்டின் அதிபதிகள் (கர்மிக் கண்ட்ரோல் கிரகங்கள்)
அவர்கள் ஒருவரை ஒருவர் பர்த்துக் கொண்டால் உயர் பதவி பெறலாம்.

No comments:

Blogger Gadgets