Saturday, May 3, 2014

ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சம்

ஜோதிடம் என்பது மிகச் சிறந்த காலக் கண்ணாடி ஆகும். ஜனன ஜாதகத்தைக் கொண்டு ஒருவரது வாழ்க்கையைப் பற்றி தெளிவாக அறியலாம்.

ஜனன ஜாதகத்தில் 1ம் வீடு என வர்ணிக்கப்படும் ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பொதுவாக ஒரு பாவத்தைப் பற்றி ஆராய்கின்ற போது அதன் அதிபதியும் அதிலுள்ள கிரகமும் அதனை பார்வை செய்யும் கிரகமும் அதன் காரகனும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பொதுவாக ஒரு பாவத்தை அதன் அதிபதி பார்வை செய்வது மூலம் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலன் தரும்? பொதுவாக ஜென்ம லக்னத்தை எவ்வளவு கிரகங்கள் பார்வை செய்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு யோகம் ஆகும். சுப கிரகங்கள் லக்னத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். பாவ கிரகங்கள் லக்னத்தில் இருப்து கிரகங்களின் இயல்பிற்கேற்ப சோதனையைத் தரும்.

எப்பொழுதுமே லக்னாதிபதி ஜாதகருக்கு அனுகூலத்தை தருவார். லக்னாதிபதி பாவியாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு முழு சுபராகத் தான் விளங்குவார். ஜென்ம லக்னத்தைக் கொண்டு ஒருவரது தோற்றம், உடலமைப்பு, இயல்பு, சந்தோஷம், பழக்க வழக்கங்கள், தலை, தலை சார்ந்த பகுதி, உடம்பு, தாயின் தந்தை ,தந்தையின் தாய் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.


ஜென்ம லக்னத்திற்கு 6, 7, 8ல் தொடர்ந்து சுப கிரகங்கள் அமைவதும், அற்புதமான அமைப்பாகும். இதன் மூலம் பலமான லக்னாதிபதி யோகம் உண்டாகும்.  குறிப்பாக, 6, 7, 8ல் குரு, புதன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

குறிப்பாக , 6, 7, 8ல் தொடர்ந்து சுபகிரகங்கள் அமைந்தாலும், 7, 8, 6, 8ல்  அமைந்தாலும் அனுகூல பலனை உண்டாக்கும். ஜென்ம லகக்னத்தில் ஒரு சுப கிரகம் பலமாக அமையப் பெற்றால் நல்ல உடலமைப்பு உண்டாகும்.

பாவ கிரகம் பலமாக அமையப் பெற்றால் கெடுதிகள் ஏற்படும். குறிப்பாக லக்னத்தின் முற்பாதியில் அமைந்தால் தலையில்இடது பாகத்தில் பாதிப்பும் பிற்பாதியில் பாவ கிரகம் பலமாக அமைந்தால் தலையின் வலது பாகத்தில் பாதிப்பும் உண்டாகும். லக்னத்தில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் தலையில் ஒரு தழும்பு உண்டாகும்.

 ஜென்ம லக்னத்தில் சந்திரன் அமையப் பெற்றால் ஜலத்தால் கண்டம் உண்டாகும். லக்னாதிபதி செவ்வாயாக இருந்தால் என்றும் இளைஞராக அதாவது முதுமையிலும் இளமை தோற்றம் உண்டாகும். புதன் லக்னத்தில் அமையப் பெற்றால் குழந்தை தனம் அதிகம் இருக்கும். நல்ல அறிவாளியாக இருப்பார். குரு லக்னத்தில் அமையப் பெற்றால் நல்ல உடல் அமைப்பும், மற்றவர்களிடம் பழகும்போது இனிமையாக பேசும் சுபாவமும் இருக்கும். இனிமையாகப் பேசும் சுபாவமும் இருக்கும். சுக்கிரன் லக்னத்தில் அமையப் பெற்றால் ஆடம்பரப் பிரியராகவும் கவர்ச்சியான உடல் அமைப்பும் இருக்கும்.

ஜென்ம லக்னத்தில் சூரியன் செவ்வாய் அமையப் பெற்றாலும் ,  செவ்வாய் சனி அமையப் பெற்றாலும் முரட்டு தனம், பிடிவாத குணம் இருக்கும் போது மற்றவர்களை அதிகாரம் செய்யும் அமைப்பு உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் சிகப்பு நிற தழும்பு உண்டாகும்.

சனி ராகு லக்னத்தில் அமையப் பெற்றால் கருப்பு நிற தழும்பு உண்டாகும். ஜென்ம லக்னத்தில் சுபர் பலம் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். அதுவே பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் சுபர் பார்வை செய்தால் கெடுதி இல்லை.

No comments:

Blogger Gadgets