Saturday, May 3, 2014

காவி அணியும் வாழ்க்கை


      இன்றைய சமுதாயத்தில் சிலர் மண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையை வெறுத்து துறவியாக செல்லும் நிலை பல இடங்களில் நாம் காண்கிறோம். குறிப்பாக சில கிரக அமைப்புகள் பொருத்தே இது போன்ற நிலை உண்டாகும். பொதுவாக திருமண வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஸ்தானமான 7 ஆம் வீடும் சுக்கிரனும் ஒருவர் ஜாதகத்தில் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் திருமண வாழ்வில் பிரிவு, பிரச்சனைகள் உண்டாகும். சுக்கிரன் 7 ஆம் அதிபதி கேதுவின் ஆதிக்கத்தில் அகப்பட்டிருந்தால் கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றாலும் மண வாழ்வில் ஈடுபாடில்லாத நிலை உண்டாகும். குறிப்பாக 7 ஆம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் மண வாழ்க்கையே இல்லாத நிலை உண்டாகும்.
     
ஜென்ம லக்னத்திற்கு 4,7,10ல் 4 கிரகங்கள் இணைந்து இருந்து உடன் ராகு இல்லாமல் இருந்தால் சந்யாசி ஆகும் நிலை உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பலம் பெற்று ஜென்ம லக்னத்தை பார்வை செய்து மற்ற கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் சந்யாசி வாழ்க்கை உண்டாகும். லக்னாதிபதி சனி பகவானை பார்வை செய்து மற்ற கிரகங்களின் பார்வை லக்னாதிபதிக்கு இல்லாமல் இருந்தாலும்.சந்திரன் சனி வீட்டில் அமையப் பெற்று சனி, செவ்வாய் சந்திரனை பார்வை செய்தால் சந்யாசி நிலை உண்டாகும்.
     
ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் சந்திரன், குரு, லக்னத்தை பார்வை செய்தாலும் சந்யாச நிலை உண்டாகும்.
                                                                    

No comments:

Blogger Gadgets