Thursday, May 1, 2014

நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன?


வழக்கு மொழியில் கூற வேண்டுமானால், ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம்.
கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். புதன் மீனத்தில் நீச்சமாகிறது. மீனம் குரு பகவானின் வீடு. குரு கடகத்தில் உச்சமடைந்தால் அது நீசபங்க ராஜயோகம் எனக் கொள்ளப்படும்.
“நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சமாகினும் நீசபங்க ராஜயோகம்...” என்பது பாடல். புதன் நீச்சமாக இருந்தால் அவர்களின் இளமைக்காலக் கல்வி சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு கல்வி தடைபடலாம். எனினும், மீண்டும் படிப்பைத் தொடருவதுடன், முதல் மதிப்பெண் வாங்க வைப்பதுதான் நீசபங்க ராஜயோகம்.
உதாரணமாக 10ம் வகுப்பில் திக்கித் திணறி தேர்ச்சி பெற்றவர் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெறுவதும், குறைந்த மதிப்பெண் பெற்றதால் பட்டயப்படிப்பில் சேருபவர் பின்னர் அதில் சிறப்பான மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேருவதும் நீசபங்க ராஜயோகம் காரணமாக ஏற்படுவதுதான்.
மேற்கூறிய பலன்கள் புதனுக்கு உரியது. இதுபோல் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கும் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். உதாரணமாக செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைந்திருந்தால் சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்துத் தகராறு போன்றவை வரலாம்.
எனினும், இறுதியில் ஒருவரைக் கேட்காமல் மற்றொருவர் முடிவு செய்யமாட்டார் என்பது போல் “ஈருடல் ஓருயிர்” தத்துவத்திற்கு ஏற்ப வாழ்வார்கள்.
எனவே, எந்த கிரகம் நீச்சமாகிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை அடைவதற்கு தடைகளும், அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், தோல்விகளையும் நீசம் கொடுக்கும். அதுவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கும் பின்னர் இழந்த எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வழங்கி விட்டு போய்விடும்.

No comments:

Blogger Gadgets