சூரிய திசை
நவகிரகங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஜெனன ஜாதகம் பலமாக இருந்தால் நமக்கு எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். பொதுவாக ஒரு ஜாதகத்தின் பலா பலன்கள் நிர்ணயம் செய்கின்ற போது தசா புக்தி பலன்கள் ஒருவகையிலும் கோட்சார பலன்கள் ஒரு வகையிலும் நம்மை வழி நடத்துகின்றன. ஒருவருக்கு தசா புக்தி பலன்களை பார்க்கின்றபோது ஒருவருக்கு தசாநாதன் சிறப்பாக அமையப் பெற்று விட்டால் அதன் பலா பலன்கள் மிகச் சிறப்பாக இருக்கும். அதுவே ஒரு கிரகம் பலவீனமாக இருந்து விட்டால் அக்கிரகத்தின் தசா புக்தி காலங்களில் சோதனைகள் பல உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் யோகங்கள் ஏற்படுவது முக்கியமில்லை. யோகத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் தான் அந்த யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். குறிப்பாக ஒரு ஜாதகம் மிகவும் பலமாக அமைந்து விட்டால் அக்கிரகத்தின் தன் காலத்தில் வேண்டிய அனைத்து செல்வஙகளையும் அடைந்து விடலாம். நல கிரகங்களில் ஒவ்வொரு திசையும் எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் எந்த திசை யாருக்கு சிறப்பான பலனை உண்டாக்கும் என்பதில் பற்றி விரிவாக பார்ப்போம்.
சூரிய திசை
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் பார்ப்வேறு விநோதங்களை உண்டாக்குகிறார். சூரிய திசை 6 வருடங்களாகும். மிக குறுகிய காலமாக திசை நடத்தும் கிரகம் சூரியன் மட்டும்தான். சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு உபயஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடத்தினாலும் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் தனது திசா காலத்தில் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம்.
அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம். சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டாகும்.அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு பொருளாதார ரீதியாக மேன்மைகள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும்.
பொதுவாக சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரன் செவ்வாய் குரு போன்ற கிரக சேர்க்கை பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும் அக்கிரகங்களின் சாரம் பெறுவதும் சிறப்பான பலனை உண்டாகும்.
சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும் மகரம் கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமையப் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமையப் பெற்றால் அனைத்து கிரகங்களையும் பலமிழக்க வைக்க கூடிய பலம் சூரியனுக்கு உண்டு. அதுவே சூரியன் ராகுவுக்கு அருகில் அமையப் பெற்றால் சூரியன் பலகீனம். அடைந்து விடுவார். அதனால் தான் சூரியன் ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கு மிக அருகில் அமையக் கூடாது.
மேற்கூறியவாறு சூரிய பகவான் பலவீனமடைந்தாலும் சனி போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று சூரிய திசை நடைபெற்றால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்பு கண்களில் பாதிப்பு, இருதய நோய், அரசாங்க தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை, ஆண்மைக் கோளாறு, ஜீவன ரீதியாக பிரச்சனைகள் உண்டாகும். அதுபோல சூரியனின் திசை நடைபெற்றால் தந்தைக்கு கூட சோதனைகள் உண்டாகிறது.
சூரியன் சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று திசை நடைபெற்றால் தந்தை வழி உறவினர்களிடம் கூட கருத்து வேறுபாடுகள் வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
சூரிய திசை நடைபெறும் காலங்களில் மாணிக்கக் கல் மோதிரம் அணிவது, சிவ வழிபாடு பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment