ஜாதகப்படி காதுகளில் நோய்
ஒருவர் நம்மை ஒரு முறை கூப்பிட்டு நாம் திரும்பி பார்க்க வில்லை என்றால் உனக்கென்ன காது செவிடா என கேட்பார்கள். உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளில் காதும் மிக இன்றியமையாத தாகும். காது நன்றாக கேட்டால் மட்டுமே நம்மால் பிறர் கூறுவதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். நாம் பேசுவதற்கும் காது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிறர் கூறுவதை காதில் வாங்கினால் மட்டுமே அதற்கு தகுந்த பதிலை நம்மால் கூற முடியும். பயணங்களின் போதும் வண்டி வாகனங்களின் சத்தத்தை கேட்டு அதற்கேற்ப பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். காது கேட்காதவர்களுக்கு ஒலி என்றால் என்னவென்று தெரியாது. பிறர் கூறுவதை புரிந்து கொள்ள முடியாது. காது பிரச்சனையால் சிலருக்கு வாய் பேச முடியாத நிலை உண்டாகும். காது குறிப்பாக கேட்டால் மட்டுமே நமது செயல்களில் சிறப்பாக ஈடுபட்டு தன்னம்பிக்கையுடன் உழைக்க முடியும். சமுதாயத்தில் ஒட்டி வாழ காது நமக்கு மிக முக்கியமாகும். காதுகளில் கூர்மையானவற்றை விட்டு குடைவது, அதிக சத்தம் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 3,11 ஆகிய பாவங்களைக் கொண்டு காதுகளில் உண்டாகும் நோய்களை அறிய முடியும். 3ஆம் பாவத்தை வைத்து வலது காதையும் 11ஆம் பாவத்தை வைத்து இடது காது பற்றியும் கூறி விட முடியும். குரு, புதன் ஆகிய கிரகங்களை கொண்டு காது நோயைப் பற்றி அறியலாம்
புதன் சுக்கிரனுடன் இணைந்து ஜென்ம லக்னத்திற்கு 12ஆம் வீட்டில் அமையப் பெற்றால் இடது காது பாதிக்கின்றது.
6ஆம் வீட்டிற்கு அதிபதி புதனுடன் இணைந்து சனியால் பார்க்கப்பட்டாலும்,புதன் ராகு, சனியுடன் இணைந்து 3 அல்லது 11இல் அமையப் பெற்றாலும் காது கேட்காத நிலை ஏற்படுகிறது.
6ஆமதிபதி சனி புதன் போன்றவற்றால் பார்க்கப்பட்டாலும், 3,6இக்கு அதிபதிகள் மற்றும் புதன் அஸ்தங்கமானாலும், அசுபர்களான செவ்வாய், சனி, ராகு, கேது, சூரியன் போன்ற கிரகங்கள் 3,5,9,11 ஆகிய வீடுகளுடன் சம்மந்தமானாலும் காதுகளில் பாதிப்பு, காது கேட்காத நிலை உண்டாகின்றது.
புதன் சந்திரன் இணைந்து 3 அல்லது 11இல் அமைய பெற்று பாவிகளால் பாதிக்கப்பட்டால் காதில் நீர் தொடர்பான பாதிப்பு, காதின் உட்பகுதி பாதிக்கும் நிலை மற்றும் செவ்வாய் புதன் இணைந்து 11ஆம் வீட்டில் அமையப்பெற்றால் காதின் உட்பகுதி கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு, சனி செவ்வாய் இணைந்து 6ஆம் வீட்டில் அமையப்பெற்று இருந்தால் காது கேட்கும் சக்தி குறையும் நிலை ஏற்படுகிறது.
குரு, புதனுக்கு பரிகாரம் செய்வது நல்லது
No comments:
Post a Comment