தலைவலி நரம்பு கோளாறு-ஜோதிட குறிப்பு
தலை உடலின் முதல் உறுப்பாகும்,முக்கியமான காரியங்களை தலையாய கடமை என்கிறோம்,எதாவது அவசர வேலை இருந்தால் தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்கிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து தலை வணங்கி நடப்பது அவசியம் யாருக்கும் அடிப்பணியாதவனை தலைகனம்பிடித்தவன் என்கிறோம்.தலை என்று ஒன்று இருக்கும் வரை தலைவலி என்ற ஒன்றும் இருக்கும்,அதிக பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கும் தேவையற்ற சிந்தனைகளை மனத்தில் பூட்டி வைத்திருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி உண்டாகும். சிலருக்கு நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகளாலும் தலைவலி ஏற்படும்
நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் & சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். இச்சேர்க்கை 6,8,12 & இல் பாவிகளுடன் அமையப் பெற்றால், தலை வலி, தலையில் நீர்சேர்தல், மூக்கில் நீர் ஒழுகும் நிலை, தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும்.
புதன் செவ்வாய் 6,8,12ல் இணைந்திருந்தால் ஒய்வில்லாத நிலையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.
லக்னாதிபதியும் சனியும் சேர்ந்து 6,8,12 களில் ஒன்றில் இருந்தால் தலையில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும்.
புதன் வலுவிழந்து, செவ்வாய் பகவான் ரத்தக் காரகன் என்பதால் இவரும் நீசம் அல்லது பகையாகி பலமிழந்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஒட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, மயக்கம் வலிப்பு நோய்கள் உண்டாகும்.
புதனுக்கு பரிகாரம் செய்தால் தலை சம்மந்த பட்ட நோய்கள் விடுதலையாகும்.
No comments:
Post a Comment