தலை முடி - ஜாதக குறிப்பு
தலைக்கு முடி என்பது முக்கியமானதாகும். தலை நிறைய முடி இருந்தால் மட்டுமே முகத்திற்கும் அழகு உண்டாகும். தலை முடி நீளமாக அழகாக உள்ள பெண்களை எல்லா ஆண்களும் விரும்புவார்கள். தற்போது நிறைய முடி வளர்த்து குடுமி போட்டுக் கொள்ளும் ஆண்களும் உள்ளார்கள். தலைவாரி பூச்சூட்டிக் கொள்வது என்பது பெண்களுக்கே தனி அழகு தான். பெண்களுக்கு முடி கொட்டும் என்றாலும் வழுக்கை என்பது அவ்வளவாக ஏற்படாது. ஆனால் முடி கொட்டி வழுக்கையால் பாதிக்கப்படுவர்கள் அதிகம் ஆண்களே. இதனால் பலரின் கேலி பேச்சிற்கும் ஆளாக வேண்டியுள்ளது.சொட்டை,வழுக்கை,என்ற பட்ட பெயர்கள் கிடைப்பதுடன் சிலர் கண் கூசுவதாக கண்ணையும் முடி கொள்வார்கள்.
சுக்கிரன், சந்திரன் இருவரும் முக அழகிற்கு முக்கிய மானவர்கள். குறிப்பாக இவற்றிக்கு ஜென்ம இலக்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலக்னம் பலமாக இருந்தால் நல்ல உடலமைப்பு, முக அழகு, அழகான தலை முடி உண்டாகிறது. உஷ்ண கிரகங்களான சூரியன், செவ்வாய் வீடுகளான மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகியவை லக்னமாக அமைவதே தலை முடிக்கு நல்லதல்ல. அதே போல நெருப்பு ராசிகள் ஜென்ம லக்னமாக இருப்பதும் நல்லதல்ல. கருமையான நிறத்திற்கு காரகம் வகிக்கும் சனி பகவான் கூட தலை முடிக்குக் காரகம் ஆவார். எனவே சந்திரன் சுக்கிரன் சனி ஆகிய கிரகங்கள் தலைமுடிக்கு காரகம் வகிக்கின்றன. உஷ்ண கிரகங்களான சூரியனும் செவ்வாயும் தலைமுடியை குறிக்கும் கிரகமாக விளங்குகின்றனர். எனவே ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தை சூரியன் செவ்வாய் பார்வை செய்தாலும் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றாலும் முடி குறைந்து வழுக்கை உண்டாகிறது.
சூரியன், செவ்வாய், சந்திரனையோ சுக்கிரனையோ பார்வை செய்தால் முடி உதிர்ந்து வழுக்கை உண்டாகும். லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றாலும் வழுக்கை உண்டாகும். சுக்கிரனும் சந்திரனும் சூரியன் செவ்வாயால் பாதிக்கப்படுவது நல்லதல்ல. சனி செவ்வாயை பலமாக பார்த்தாலும் முறையற்ற முடி அமைப்பு உண்டாகின்றது. சூரியன், செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது நல்லது
No comments:
Post a Comment