Thursday, August 7, 2014

திருமணத் தடை செய்யுமா செவ்வாய்?



நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர  செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம், ஆண்மை போன்ற  எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, அதிகார பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றிற்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான ஆண்மை, வீரியம், உடல் உறவு போன்ற விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங் கள், உடல் திறன், வீரதீர செயல்கள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும், ரியல் எஸ்டேட், பில்டிங் காண்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் பணி, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருட் கடாட்சம் அவசியம் தேவை

செவ்வாயும்-திருமணமும்

பெண், பையனின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு நல்ல நட்சத்திரமா, எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று கேட்பார்கள். மற்றபடி ஜாத கம் எப்படி இருக்கிறது? நல்ல தசா யோகங்கள் இருக்கிறதா, வளமான வாழ்க்கை அமையுமா, என்ன தோஷங்கள் இருக்கின்றன என்பதை பற்றி பலர்  அலட்டிக் கொள்வதில்லை. நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்பது ஒர் சம்பிரதாய வழக்கம். நட்சத்திரப் பொருத்தம் மட்டும் ஒரு மண வாழ்க்கையை  தீர்மானிக்காது. ஜாதக கட்டத்தில் உள்ள அமைப்புக்கள்தான் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அந்தவகையில் சரியான தோஷ ஜாதகத்தை  அதே போன்ற சரியான தோஷ ஜாதகத்துடன் இணைப்பதன் மூலமே சுப யோகமான திருமண வாழ்க்கை அமையும்.

முக்கியமான தோஷங்கள்

அங்காரகன் என்ற செவ்வாயால் ஏற்படக்கூடிய தோஷம், மாங்கல்ய தோஷம். விஷக்கன்யா தோஷம், களத்திர தோஷம், சர்ப்ப தோஷம், சூரிய  தோஷம், புனர்பூ தோஷம், இவற்றுள் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவை மிக முக்கியமானவை. இந்த தோஷ வகை களில் மிகவும் பிரபலமாகவும், ஒரு வித அச்சத்துடனும் அனைவரும் அறிந்தது செவ்வாய் தோஷமாகும்.

மங்களன் என்றழைக்கப்படும் செவ்வாய் 

உடலில் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர். உடலில் வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக  அமைந்து இருந்தால்தான் ஊக்கம், தன்னம்பிக்கை, ஆண்மை போன்றவை மேம்படும். உடல் உறவில் வீரியத்துடன் ஈடுபட முடியும். பெண்கள் ஜாத கத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், உள்ளக்கிளர்ச்சி பாலுணர்வு ஆகியவற்றை தூண்டக் கூடியவர், செவ்வாய். ஆகையால்தான்  தோஷம் என்ற பெயரில் ஆண்-பெண் ஜாதகத்தை சேர்க்கும்போது செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில்  ஆண், பெண் உடல் உறவு சேர்க்கையே, வம்சம் பெருகுவதற்கு, மிகவும் முக்கியமானது. இருவருக்கும் அந்த ஆற்றலை தரக்கூடியவர் செவ்வாய். ஆகையால் தான் திருமணம் என்றவுடன் செவ்வாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் நம் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம்.  இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது. பெரும்பா லான ஜாதகங்களில் அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய்  இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல் 2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய்  உள்ள ஜாதகத்துடன் சேர்க்க கூடாது.

செவ்வாய் இருப்பிடமும் உங்கள் குணமும்

லக்னத்தில் இருந்து செவ்வாய் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே நமது குணங்கள் அமைகின்றன. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம், அதாவது செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் பலன்:

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் 

வீண் பேச்சுகள், விவாதங்கள், முன் கோபம் உண்டு. அதே நேரத்தில் குணமும் இருக்கும். நியாய தர்மத்தை எடுத்துரைப்பார். குடும்பத்தில் சற்று  டென்ஷனான நிலை இருக்கும். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராக இருக்கும். ஆகையால் பேச்சைக் குறைப்பது நலம் தரும்.

லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால்

உடல் உஷ்ண ஆதிக்கம் பெற்று இருக்கும். சொத்து சேரும் யோகம் உண்டு. அடிக்கடி இடமாற்றம், பயணங்கள் இருக்கும். அரசு உத்யோகம் அமையும். 

லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால்

துணிச்சலாக பேசுவீர்கள். எப்போதும் பரபரப்பு, டென்ஷன் இருக்கும். மூக்கின் மேல் கோபம் வரும். உஷ்ண உபாதைகள் இருக்கும். உடல் உறவில்  நாட்டம் கூடும்.

லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால்

படபடப்பு, சிடுசிடுப்பு, கோப தாபங்கள், அதிகாரம் செய்தல், மர்ம ஸ்தானத்தில் நோய்கள் என்று வரலாம். ரத்த காயங்களுக்கும் வாய்ப்புண்டு.

லக்னத்திற்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் 

ஏதாவது சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். படுக்கை சுகம் குறைவு, எரிச்சல்-கோப தாபங்கள் இருக்கும். சகோதர உறவுகளால் பிரச்னை. இந்தப் பலன்கள் எல்லாம் பொதுவான கருத்தாகும். அவரவர் ஜாதகம் லக்னம், ராசி அமைப்பின்படி பலன்கள் மாறுபடும். ஆகையால் செவ்வாய்  தோஷ ஜாதகத்தை செவ்வாய் தோஷ ஜாதகத்துடன் சேர்ப்பது நன்மை தரும். செவ்வாய், தோஷம் மட்டும் கொடுக்காது பிரபல யோகத்தையும் தரும்.  செவ்வாயால் இல்லறம் கசக்காது. சரியான ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் இல்லறம் இனிக்கும்.

No comments:

Blogger Gadgets