Thursday, August 7, 2014

யோகம் இருந்தும் பலன் இல்லாததற்குக் காரணங்கள்

ஒரு ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தும் பலனளிக்காமல் போவதற்கு கீழ்கண்ட காரணங்களை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
1. தமிழ் வருடம்மாதம்திதிநட்சத்திரம்ராசிலக்னம் ஆகியவைகள் முடிகின்ற நேரத்திலும்பகல் இரவு சந்திப்பு காலத்திலும்நள்ளிரவு 12 மணி மற்றும் மத்தியான பொழுதிலும் பிறக்கின்ற குழந்தைகள் ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தாலும்கூட இவைகள் இரண்டும் கெட்டான் நேரத்தில் பிறந்த காரணத்தால் ராஜயோகம் பங்கம் ஏற்படுகிறது.
2. துவிதியைசப்தமிதுவாதசிதிதியிலும்வியதீபாத யோகத்திலும் பிறந்ததால் ராஜயோகம் பயனளிக்காது. இடி விழுதல்பூகம்பம் முதலிய உத்பாதம் உண்டாகும் தினங்கள் பலன்தரா..
3. ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீச்சம் பெற்றால் பலந்தரா.
4. ஜாதகத்தில் சூரியன்சந்திரன் நீசம் பெற்றாலும் பலன் இல்லை.
5. 4,9,10,11க்குடையவர்கள் நீசம் பெற்றாலும் பலன் தராது.
6. ராஜயோக கிரகங்கள் சூரியனிடம் அஸ்தமனம் பெற்றால் பலன் இல்லை.
7. லக்னமோ சந்திரனோ எந்த கிரகத்தாலும் பார்க்கப்பட விட்டாலும் பலன் இல்லை.
****************************************************************************************************************************
சுக்கிர முடம்: சூரியனுக்கு முன்னும் பின்னும் 9 டிகிரியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது அது அஸ்தமனம் ஆகிறது. இந்த நேரத்தில் விவாகம்உபநயனம் போன்ற சுப காரியம் செய்யக்கூடாது.
ஏழு கிரக சேர்க்கை: 7 கிரக சேர்க்கையானது லக்னத்திலோ இரண்டாமிடத்திலோ ஏற்பட்டால் நன்று. இதற்கு நீளகயோகம் என்று பெயர். ஏழாம் இடத்தில் ஏற்படுவது நல்லதல்ல.
ஜெனன லக்னம் முதல் ஏழாம் இடம் வரை இடைவிடாது பூக்கள் தொடுத்தாற்போல் கிரகம் இருந்தால் கிரகமாலிகா யோகம் இதை வஜ்ர யோகம் எனவும் கூறுவர். இந்த யோகம் உள்ளவர் நல்லறிவுடையசீமானாகபுண்ணியச் செயல்களைச் செய்பவராக அளவில்லாத யோகத்தை உடையவராக விளங்குவார்.
ஒன்று முதல் ஆறு வரை கிரகம் இருந்தால் சக்கிரதார யோகம்.
ஒன்று முதல் ஐந்து வரை கிரகம் இருந்தால் பாசக யோகம்
ஒன்று முதல் நான்கு வரை கிரகம் இருந்தால் கேதாரயோகம்.
ஒன்று முதல் மூன்று வரை கிரகம் இருந்தால் சூல யோகம்.
ஒன்று மற்றும் இரண்டில் இருந்தால் நீளக யோகம் எனப்படும்.
இதில் நீளக யோகம் சூல யோகம் பெரும்பாலான ஜாதகங்களில் காணலாம்.
இவர்கள் கல்விசெல்வம்சுகயோகம் உடையவர்களாக இருப்பர். 
கேதார யோகம் 10 சதவீத ஜாதகங்களிலேயே காணப்படும்.இவர்கள் பூமி யோகம் தனலாபம் பெற்று பலருக்கு உபகாரம் செய்து நலம் காண்பர்.
பாசக யோகம் 5 சதவீத ஜாதகத்திலேயே காணப்படும்.இவர்கள் அரசாட்சி புரிபவர்கள்மக்களால் போற்றப்படுபவர்கள். திரண்ட செல்வம் பெறுவார்கள்,மேதாவி யாவார்கள்.
சுக்கிரதார யோகம்கிரகமாலிக யோகம் உள்ள ஜாதகங்களைப் பார்ப்பது மிக அரிது. இவ்வகை ஜாதகத்தில் கிரகங்கள் லக்னம் சுபவர்க்கம் ஏறி இருப்பார்கள். இந்த உலகத்துக்கே அரசனாககுருவாக விளங்கலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
லக்னத்திற்கு 9ம் இடத்தில் சுக்கிரன் சனி ராகு இணைந்தால் பிரம்மஹஸ்த்தி தோசம் ஆகும். இதற்கு பரிகாரம் ராமேஸ்வரத்தில் செய்யப்படுகிறது. பரிகாரம் செய்வதால் வேகம் மட்டுப்படுகிறது அன்றி பாபங்கள் தொலைந்து விடுவதில்லை.

No comments:

Blogger Gadgets