பற்களும் ஜோதிடமும்
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். இப்படி வாய் விட்டு சிரிக்க நம் வாயில் இருக்கும் பற்கள் ஒழங்காக வரிசையாக அமைந்திருந்தால் அந்த சிரிப்பிற்கே ஒர் தனி அழகு தான். கவிஞர்கள் பற்களை பலவற்றிற்கு உதாரணமாக கூறியுள்ளனர். முத்து போன்ற பற்கள், பச்சரி பல்லழகி,மணி மணியாய் பற்கள், வானில் உள்ள நட்சத்திரங்களை போல மின்னும் பற்கள் என பலப்பல புகழாரங்களும் பற்களுக்கு உண்டு. பல் வரிசை அழகாக அமையப் பெற்றவர்களுக்கு வாய் திறந்து சிரிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதுவே பல்வரிசை அழகாக அமையவில்லை எனில் வாயை பொத்திக் கொண்டு தான் சிரிக்க வேண்டிருக்கும். இதில் தொத்து பல், எத்துப்பல், பல்லி என பல பட்ட பெயர்களும் கிடைக்கும். வாயில் துர்நாற்றமில்லாமல் பற்களை ஒழங்காக துலக்கி தூய்மையாக வைத்து கொள்வது ஏதாவது சாப்பிட்டால் உடனேயே வாய் கொப்பளிப்பது போன்றவை பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
நவகிரகங்களில் உடலில் உள்ள எல்லா எலும்பிற்கும் காரணமானவர் சனி பகவான் ஆவார். எனவே பற்களுக்கும் சனி பகவான் தான் காரகம் வகிக்கிறார். ஜென்ம ராசியானது ( 1ஆம் வீடு) மேல் தாடை பற்களையும், 2ஆம் வீடு கீழ் தாடை பற்களையும், 4ஆம் வீடும் மறைமுகமாக பற்களை ஆள்கின்றது. ராசிக்கரத்தில் மேஷம் மேல் தாடை பற்களையும் ரிஷபம் கீழ் தாடை பற்களையும் கடகம் மறை முகமாக பற்களையும் ஆள்கின்றது. ஆகவே ஜென்ம லக்னம் 2ஆம் 4ஆம் வீடு குரு, சனி இவர்களின் பலத்தைக் கொண்டே ஒருவரின் பற்களின் நிலையை பற்றி அறிய முடியும்.
பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் சனி பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தால் பற்கள் பாதிக்கப்படுகிறது. அது போல சனி, ஜென்ம லக்னம், 2ஆம் வீடு, பலம் இழந்து சனியின் திசா புக்தி நடைபெறும் போது பற்கள் பாதிக்கும் சூழ்நிலை உண்டாகின்றது. சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னம் சனியின் வீடானாலும் ( மகரம் கும்பம் ) பற்கள் பாதிக்கப் படும் நிலை, எனாமல் சிதை வாகி வரைமுறையற்ற பற்கள் அமையும் சூழ்நிலை உண்டாகும். அது போல சனி பகைவரான சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப் பெற்றாலும், சூரியனுக்கு 6,8,12இல் சனி அமையப் பெற்றாலும் முறையற்ற பற்களை அடைய நேரிடும்.
குரு பகவான் ஜல ராசியில் அமைந்து கேது சேர்க்கையுடன் சனி செவ்வாய் போன்ற பாவிகளால் பார்க்கப்பட்டால் பற்கள் கரு நிறம் அடையப் கூடிய நிலை பற்களின் பலம் குறைந்து பல்வலி உண்டாகும் சூழ்நிலை ஏற்படும். குரு பகவான் ஜல ராசியில் அமைந்து பாவிகளின் பார்வை குருவுக்கு இருந்தால் பற்களின் நிறம் மாறும்.
ஜென்ம லக்னத்தில் சனி பலம் இழந்து செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டாலும் பலம் இழந்த சனியை செவ்வாய் பார்வை செய்தாலும் சண்டை போடும் போது பற்களை இழக்க நேரிடும். செவ்வாய் ஜென்ம லக்கினத்தை பார்வை செய்து செவ்வாய் திசை புக்தி நடைபெற்றாலும் பற்களில் பாதிப்புகள் ஏற்படும்.
சனிக்கு பரிகாரம் செய்தால் பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
No comments:
Post a Comment