Wednesday, September 3, 2014

மன நோய்-ஜோதிட குறிப்பு 

நம் வாழ்வில் ஏதாவது பிரச்சனைகளையோ துக்கம் தரும் சம்பவங்களையோ எதிர் கொள்ளும் போது பொதுவாகவே மனம் ஒரு நிலையில் இருக்காது. ஐயோ எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருக்கிறதே என்று வாய் விட்டு பிதற்றுவதும் உண்டு. சின்ன பிரச்சனைகளை கூட தாங்கி கொள்ள முடியாதவர்களுக்கு மனச்சோர்வு, மனநிலை பாதிப்பு உண்டாகிறது. இதனால் அதிகம் பாதிக்கப் படுபவர்களின் நிலை தான் இறுதியில் பைத்தியம் பிடிப்பதென்பது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய பச்சாதாபம் அதிகமாக இருக்கும். தன்னைத் தானே தாழ்த்தி கொள்வார்கள். தேவையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள். காதில் யாரோ பேசுவது போலவும், தன்னை திட்டுவது போலவும் உணருவார்கள். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. இல்லையெனில்  தன்னிலை மறந்து என்ன செய்கிறோம். என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் ஆடைகளை கிழித்துக் கொண்டு அலைவார்கள். இது மட்டுமின்றி தன்னை தானே அழித்தும் கொள்வார்கள்.

நவ கிரகங்களில் சந்திரன் மனோக் காரகன்  என வர்ணிக்கப்படுகின்றார். சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் பெறுவது மிகவும் முக்கியமாகும். சந்திரன் மனோக் காரகன் என்பதால் அவர் பலம் பெற்றால் ஜாதகர் மனவலிமை மிக்கவராகவும் எந்த துன்பத்தையுமே தாங்கும் வலிமை தைரியம், துணிவு மிக்கவராக விளங்குவார்கள். எந்த ஒரு செயலையும் தெளிவாக சிந்தித்து திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்று விடுகிறார்கள். சந்திரன் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி உச்சம், நட்பு கிரக சேர்க்கை பெற்று அல்லது ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று, குரு போன்ற சுப கிரக பார்வை சேர்க்கை பெற்று அமையப் பெற்றால் நல்ல உடல் அமைப்பு மனதைரியம் துணிவு உண்டாகும். சந்திர பகவான் நீசம் பெற்றோ 6,8,12ல் மறைந்தோ அல்லது  பாவ கிரக சேர்க்கை பெற்றோ அமையப் பெற்றால் கடுமையான மன நிலை பாதிப்பு உண்டாகின்றது. சந்திரன் கேது சேர்க்கை பெறுவது  கிரகண தோஷமாகும். சந்திரன் கேது சேர்க்கையாகி ஜாதகத்தில் இருப்பது நல்லதல்ல. சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பலமிழந்து இருந்தாலும் அதன் திசா புக்தி வரும் சமயத்தில் ஜாதகர் மன குழப்பம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுவார். ஜெனன காலத்தில் சந்திரன் பலம் இழந்தவர்கள் குழப்ப வாதியாக இருப்பதை கண் கூடாக காண முடிகிறது. சந்திர திசை சந்திர புக்தி நடைபெறும் காலத்தில் மன குழப்பம்  உண்டாகின்றது.
சந்திரன் பொதுவாக ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் சஞ்சரிப்பார். சந்திரன்  மனோக்காரகன் என்பதால் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டிற்கு வரும் போது குழப்பங்கள் உண்டாகும். இதனைத்தான் சந்திராஷ்டமம் என்கின்றோம். இக்காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சற்று ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.
தினந்தோறும் சந்திர ஒரை வருகிறது. சந்திர ஒரை காலத்தில் கூட நாம் எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, ஏதாவது பேச்சு வார்த்தை என்றால் அதில் தடை உண்டாகிறது. குறிப்பாக சந்திர ஒரை காலத்தில் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது மிகவும் உத்தமம்

சந்திர ஒரை நேரங்கள் ;  
ஞாயிற்றுக் கிழமை ; காலை 9 - 10, மாலை 4 - 5, 
திங்கள் ; காலை 6 - 7,   மதியம் 1-2, இரவு 8-9,
 செவ்வாய் ; பகல் 10-11, மாலை 5-6 
புதன் ; காலை 7-8, மதியம் 2-3, இரவு 9-10, 
வியாழன் ; பகல் 11-12, மாலை 6-7, 
வெள்ளி ; காலை 8-9 மதியம் 3-4, இரவு 10-11, 
சனி ; மதியம் 12-1, இரவு 7-8
சந்திரன் சாதகமற்று உள்ள காலத்தில் வெங்கடாஜலபதியை வணங்கி வழிபாடு செய்வது உத்தமம்.

No comments:

Blogger Gadgets