Wednesday, September 3, 2014

குடி பழக்கம் - சோதிட பாா்வை 

குடி குடியை கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட பழமொழியாகவே இன்றளவும் உள்ளதே தவிர இதை யாரும் வாழ்க்ககைக்கு உகந்ததாகவே எடுத்துக் கொள்வதில்லை. குடி பழக்கம் குடிப்பவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையே நாசமாக்கி விடும். இதனால் குடும்பத்தில் மன கஷ்டம் பணக்கஷ்டம், குழந்தைகளுக்கு பாதிப்பு குடும்பமே பிரியம் கூடிய சூழ்நிலை உண்டாகிறது. குடிப்பவரை சந்தேகம் என்ற பிசாசும் பிடித்துக் கொள்கிறது. குடியினால் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றதே குடியை இதோடு நிறுத்தி விடுவோம் என்ற மனநிலை ஒருவருக்கு வருமா என்றால் அது தான் இல்லை. இப்படிபட்ட போதை பழக்கமும் ஒரு வித நோய்யே ஆகும்.

ஜோதிட ரீதியாக நவகிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்து அமையப் பெற்றோ பாவிகளால் சூழப்பட்டோ, பார்க்கப்பட்டோ அமைந்தால் அவருக்கு மன உறுதியோ, தெளிவோ இருக்காது. எந்தவொரு பிரச்சனைக்கும் தெளிவாக முடி வெடுக்க முடியாமல் மனசோர்வு ஏற்பட்டு தன்னை தைரியசாலியாக வெளி உலகிற்கு காட்டிக் கொள்ள குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விடுகிறார்.
ஒருவரின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் காரகனான சந்திரன் பலமிழந்தால் பல வகையிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. பொதுவாகவே குடும்பத்தில் ஏற்பட கூடிய பிரச்சனைகள், காதலில் தோல்வி, தன்னால் எதிலும் முன்னேற முடியவில்லையே என்ற இயலாமை, தானே தன்னை தாழ்த்திக் கொள்ளும் சுய பட்சாதாபம் இழப்புகளை தாங்கி கொள்ள இயலாத நிலை போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்படும் போது இவற்றையெல்லாம் மறக்க குறுக்கு வழியை தேடுகிறார்கள். இதற்கு தகுந்த வடிகாலாக அமைகிறது மது பானம். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இப்பழக்கத்திற்கு ஆளாவது தான் மிகுந்த கொடுமை.

2,4,5,7,10 ம் வீடுகளும் சூரியன்,சந்திரன்,புதனும் பாதிக்கப்பட்டாலும், கொடிய பாவியாகிய சனி பகவான் சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றாலும், சந்திரன்  கேது, சந்திரன் & சனி, சந்திரன் & ராகு சேர்க்கைப் பெற்றாலும், குரு பாதிக்கப்பட்டு சந்திரன் செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் கட்டுபாடற்ற மனநிலையால் மதுவுக்கும் அடிமையாவார்.

உதாரணமாக 2 ம் வீட்டில் கேது  சனி அல்லது சனி  ராகு அமைந்து சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால் மன அமைதி குறைவை  உண்டாக்கி அவரை போதை பழக்கத்திற்கு ஆளாக்கி விடுகிறது. அது போல புதன் பகவானும் கெட்டு அஸ்தங்கம் ஆகி பலமிழந்து பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டு மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

நவகிரகங்களில் சனி,ராகு,கேது போன்ற பாவிகள் சாதகமற்று அமைந்து சுபர் பார்வை,சேர்க்கையின்றி இருந்து திசா, புக்தி நடைபெறும் போது தன்னிலை மறந்து மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

எவ்வளவோ மருத்துவங்கள் இருந்த போதிலும் தன்னை திருத்திக் கொள்ள நினைக்காமல் இந்திய குடிமகன்களாக வாழ்வதையே நிறைய பேர் விரும்புகிறார்கள். சந்திரன்,ராகுவிற்கு பரிகாரம் செய்வது நல்லது.

No comments:

Blogger Gadgets